போல் பாட் , ஹிட்லர், முசோலினி போன்றோர் மனிதர்களை லட்சக்கணக்கில் படுகொலை செய்த சரித்திரத்தை படித்துள்ளோம்!
உலகின் ஒரு நாட்டில் நடக்கும் சம்பவங்கள் மற்றொரு நாட்டில் உள்ள மக்கள் தெரிந்து கொள்ள முடியாத காலமது! அருகிலுள்ள நாடுகள் கூட பல நாட்கள் கழித்த புத்தகங்கள் வாசித்தே மனித கூட்டம் படுகொலை செய்யப்பட்டுள்ளது என அறிந்து கொண்டார்கள்!
ஆனால்..உலக மக்களுக்கு "லைவ்" வாக காண்பித்து தான் இஸ்ரேல், அப்பாவி மனிதர்களை கூட்டம் கூட்டமாக இனப்படுகொலை செய்து கொண்டிருக்கிறது! உலகமோ நிர்ச்சலனமாக செய்வதறியாது பார்த்துகொண்டிருக்கிறது!
இந்த இனப்படுகொலையின் பேரில் அந்நாட்டின் ஏதேனும் ஒரு எம்பஸி மீதாவது, ஒரு "கல்"லாவது எடுத்தெறிந்து தன் எதிர்ப்பை காட்டாமல், உலக நாடுகள் தீவிரவாத இஸ்ரேலுக்கு பாதுகாப்பை உறுதிப்படுத்துகிறது!
அப்பாவி மக்களோ,
இறுதி சுவாசம் உள்ளிழுக்கும் வரை இறைவனின் அபயம் மட்டுமே நாடி, இறுதியில் சடலங்களாக தெருவில் வீழ்ந்து கிடக்கின்றனர்!
இந்த அநீதிகளுக்கு சாட்சியாகி, மனிதம் சுமந்த மனிதர்களாய், கையாலாகாத கயவர்களாய் இக்காலகட்டத்தில் வாழ்வதென்பது, நடைபினங்களுக்கு ஒப்பாகாதா?? #🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ #🕋 மாஷா அல்லாஹ் 💖 #🕌இஸ்லாம்
📗குர்ஆன் பொன்மொழி
💯அல்லாஹ்வின் அருட்கொடை🕋
#🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் #இறை அடியான்☝️
