ShareChat
click to see wallet page
*டிசம்பர் 05, 1766* உலகின் மிகப்பெரிய ஏல நிறுவனம் என்று குறிப்பிடப்படும் க்றிஸ்ட்டீ'ஸ் நிறுவனத்தின் முதல் ஏலம், அதன் உரிமையாளரான ஜேம்ஸ் க்றிஸ்ட்டியால் லண்டனில் நடத்தப்பட்ட நாள். கி.மு.500களில் ஏலம் நடத்தப்பட்டதற்கான வரலாற்றுப் பதிவுகள் கிடைத்துள்ளன. பாபிலோனில், திருமணம் செய்துகொள்வதற்குப் பெண்களை ஏலம் விடுதல் நடைமுறையிலிருந்ததாக, ஹிரோடோட்டஸ் குறிப்பிட்டுள்ளார். மகளை ஏலமில்லாத முறையில் விற்பது (திருமணம் செய்து தருவதுதான்!), அங்கு சட்டவிரோதமாக இருந்துள்ளது. ரோமப் பேரரசில் போர் வெற்றிக்குப்பின் கைப்பற்றப்பட்ட பொருட்களை ஏலம்விட்டு, போர்ச் செலவை ஈடு செய்திருக்கிறார்கள். கடனைத் திருப்பிச் செலுத்த முடியாதவர்களின் சொத்துகளை ஏலம்விட்டு, கடனுக்கு ஈடு செய்வதும் அங்கு நடைமுறையிலிருந்திருக்கிறது. 1674ல் ஸ்வீடனில் உருவான ஸ்டாக்ஹோம் ஏல நிறுவனம்தான், உலகின் முதல் ஏல நிறுவனமாகும். அதைத் தொடர்ந்து உருவாகிய பல ஏல நிறுவனங்களில் சில இன்னும் செயல்பட்டுக்கொண்டிருக்கின்றன. க்றிஸ்ட்டீஸ் நிறுவனத்தின் இணையத்தளம், 1766 டிசம்பர் 05ல் முதல் ஏலத்தை நடத்தியதாகக் குறிப்பிட்டாலும், 1759லேயே அந்நிறுவனத்தின் விற்பனை குறித்து செய்தித்தாள்களில் வெளியான விளம்பரங்களும் கிடைத்துள்ளன. ஹாமில்ட்டன் அரண்மனையில் சேகரிக்கப்பட்டிருந்த பொருட்களை 1882லேயே 3.32 லட்சம் பவுண்டுகளுக்கு (தற்போது சுமார் ரூ.400 கோடி!) ஏலத்தில் விற்ற இந்நிறுவனம், 2015வரை ஏலத்தில் விற்ற பொருட்களின் மதிப்பு 480 கோடி பவுண்டுகளாம் (ரூ.53,300 கோடி)! இணையத்தின் வரவு, இத்தகைய ஏல விற்பனைகளில் அதிக மக்கள் பங்கேற்கும் வாய்ப்பை உருவாக்கி, வளர்ச்சிக்கே இட்டுச் சென்றுள்ளது. #😎வரலாற்றில் இன்று📰 #🩺💊 புதிய தாக தெரிந்து கொள்வோம்💊🩺 #தெரிந்து கொள்வோம்
😎வரலாற்றில் இன்று📰 - ShareChat

More like this