#🌎பொது அறிவு
*செப்டம்பர் - 26*
*மன்மோகன் சிங் அவர்களின் பிறந்தநாள்*
மன்மோகன் சிங் (Manmohan Singh, பஞ்சாபி: ਮਨਮੋਹਨ ਸਿੰਘ, பிறப்பு: செப்டம்பர் 26, 1932) இந்தியாவின் 14 ஆவது,
பிரதமர் ஆவார். மன்மோகன் சிங், மேற்கு பஞ்சாபிலுள்ள கா என்னும் (தற்போது பாகிஸ்தானில் உள்ளது) ஊரில் பிறந்தார்.
இவர் இந்திய தேசிய காங்கிரசு கட்சியைச் சேர்ந்தவர். மே 22, 2004 இல் இந்தியப் பிரதமராகப் பதவியேற்றார்
1991 முதல் 1996 வரை பி. வி. நரசிம்ம ராவ் அமைச்சரவையில் மன்மோகன் சிங் நிதி அமைச்சராக பணியாற்றினார்.
கல்வியாலும், பயிற்சியாலும் தேர்ந்த பொருளாதாரவியல் வல்லுநரான அவர்,
இந்தியாவின் பொருளாதார தாராளமயமாக்கல் கொள்கையின் துவக்கத்தில் பெரும்பங்கு வகித்தார். மன்மோகன் சிங் பொருளாதாரத்தில் முனைவர் பட்டம் பெற்றவர்.
மேலும் மத்திய ரிசர்வ் வங்கியின் தலைவராகவும் பதவி வகித்துள்ளார். அவர் நிதியமைச்சராகும் முன் பின்தங்கிய நிலையில் இருந்த இந்திய பொருளாதாரம், இவரின் கொள்கைகளால் முன்னேறத் துவங்கியது எனக் கருதப்படுகிறது.
*╭──────────────────╮*
*╔•═•-⊰❉⊱•═•⊰❉⊱• •═•╗♥︎‿♥︎𝗞𝗮𝗹𝗮𝗶𝘀𝗲𝗹𝘃𝗮𝗻♥︎‿♥︎
*╚•═•-⊰❉⊱•═•⊰❉⊱• •═•╝*
