#வரலாற்றில் இன்று என்றும் மறக்க முடியாத நினைவுகள்
நவம்பர் 18, 1928*
உலகம் போற்றும் கார்ட்டூன் பட கதாநாயகனான மிக்கி மவுஸ் என்ற சுண்டெலி உருவாக்கப்பட்ட தினம் இன்று.
வால்ட் டிஸ்னியின் பேசும் படத்தில் முதலில் அறிமுகமான மிக்கி மவுஸ் அமெரிக்காவின் பொழுது போக்கு தொழிலின் சின்னமாக மாறிவிட்டது.
ஸ்டிம்போட் வில்லி என்ற ஒரு திரைப்படத்தில் தான் மிக்கி மவுஸ் அறிமுகமானது.
மிக்கி மவுசை உருவாக்கிய கார்டூனிஸ்ட் வால்ட் டிஸ்னிக்கு அதுதான் முதல் படம். ஆரம்ப காலத்தில் மிக்கி மவுஸ் தோற்றத்தில் எலிபோலத்தான இருந்தது. பிறகுதான் சுண்டெலியாக உருமாறியது.
அதே போல அதன் பெயரும் முதலில் மார்டிமெர். டிஸ்னி அவர்களின் மனைவி வற்புறுத்தியதால் அதன் பெயர் மிக்கி என்று மாறியது.

