ShareChat
click to see wallet page
🔱🔱🔱ஓம் நமச்சிவாய வாழ்க 🔱🔱🔱 🔱🔱🔱கடலின்நஞ்சம்அமுது உண்டுஇமையோர்தொழுது ஏத்தநடம் ஆடி அடல்இலங்கைஅரை யன்வலிசெற்றுஅருள் அம்மான்அமர் கோயில் மடல்இலங்குகமு கின்பலவின்மது விம்மும்வலி தாயம் உடல்இலங்கும்உயிர் உள்ளளவும்தொழ உள்ளத்துயர் போமே.🔱🔱🔱 🔱🔱🔱பொருள் : -🔱🔱🔱 🔱🔱🔱பாற்கடலைக் கடைந்து அமுதம் எதிர் பார்த்த நிலையில் நஞ்சு வெளிப்பட்டது. அதனையே அமுதமென உண்டு தேவர்களைக் காத்தவன் இறைவன்; நடனம் புரிந்து மகிழ்வித்தவன் வன்மையுடைய இலங்கையின் வேந்தனான இராவணனுடைய வலிமையை அடக்கி அருள் புரிந்தவன். அத்தகைய கடவுள் அமர்ந்து விளங்கும் இடம் பலா கமுகு முதலான மரங்கள் பெருகியுள்ள திருவலிதாயம் ஆகும். அத் திருத்தலத்தை உடலில் உயிர் உள்ள அளவும் தொழுது வணங்கிட மனத்துயர் நீங்கும்.🔱🔱🔱 ‌ ‌‌🔱திருச்சிற்றம்பலம் 🔱 #🙏🏼பக்தி மோஷன் வீடியோ #🙏கோவில் #🙏ஆன்மீகம் #🙏🏼சிவ பெருமான் பாடல்கள் #🕉️சிவன் ஸ்டேட்டஸ்🎶
🙏🏼பக்தி மோஷன் வீடியோ - ShareChat
00:17

More like this