உங்களுக்குள்ளேயே... #நமக்குள்
வரலாற்றில், மனித மனதின் வலிமையை மிக ஆழமாக உணர்த்திய ஒருவர்
பால் ரிச்சர்ட் அலெக்சாண்டர்.
போலியோவால் ஆறு வயதில் மூச்சே விட முடியாமல் போன அவர்,வாழ்நாள் முழுவதும் ஒரு இயந்திரத்துக்குள் இருந்தார்
ஆனால்
அவர் உடல் அந்த இயந்திரத்தில் அடைபட்டு கிடந்தாலும்
அவரது மனம் ஒருபோதும் முடங்கிவிடவில்லை.
அவர் படித்தார்
வழக்கறிஞரானார்
புத்தகம் எழுதினார்
வாழ்வை பயப்படாமல் எதிர்கொண்டார்
சாதாரண மனிதன் கண்கலங்கும் இடத்தில் அவர் துணிச்சலோடு நின்றார்
அவரின் வாழ்க்கை நமக்கு சொல்வது ஒன்று மட்டுமே.
உடல் எல்லைகளை முடிவு செய்யலாம்.
ஆனாலும் மனத்தின் எல்லைகளை நீங்கள் தான் முடிவு செய்கிறீர்கள்.
ஒவ்வொரு நாளும் நம்மை சிறைபிடிப்பது வெளிப்புற சிக்கல்கள் இல்லை
நம்முடைய “என்னால் முடியாது” என்ற எண்ணங்கள்தான்.
அந்த எண்ணத்தை மாற்றினால், உங்கள் வாழ்க்கை. இயந்திரத்தின் எல்லைகளையும் தாண்டி முன் செல்லும்.
எத்தனை தடைகள் வந்தாலும், உங்களை நிறுத்த முடியாத ஒரு வலிமை உங்களுள்ளேயே இருக்கிறது

