110 பேர் காயமடைந்தனர். இந்நிலையில் செபடம்பர் 30 மதியம் 3 மணிக்கு மேல் விஜய் தனது சமூகவலைதளப் பக்கத்தில் காணொலியைப் பகிர்ந்தார்.
அதில் அந்த கொடிய மரணங்கள் குறித்த எவ்வித குற்றவுணர்ச்சியுமின்றி விஜய் பேசியிருப்பதற்கு நாடெங்கும் கடும் எதிர்ப்புகள்.
இதுகுறித்து நீட் தேர்வு தொடர்பாக விழிப்புணர்வை ஏற்படுத்த தன் உயிரையே கொடுத்த அனிதாவின் அண்ணன் மணிரத்னம் வெளியிட்டுள்ள பதிவில்….
அனைவருக்கும் வணக்கம்,
எனது உடன் பிறந்த தங்கை அனிதா மறைந்தபோது, நடிகர் விஜய் அவர்கள் நேரில் வந்து ஆறுதல் கூறியது எங்களுக்குப் பெரும் ஆறுதலாக இருந்தது. அனிதாவின் விருப்பமான நடிகர், தமிழ்நாட்டின் முன்னணி நடிகர், ஏற்கனவே தன்னுடன் பிறந்த தங்கையை இழந்தவர் என்பதால், அந்த வலியை உணர்ந்து எங்களுடன் ஆறுதலாய் நின்றார் என்பது மறக்கமுடியாத நிகழ்வு.
அந்த நேரத்தில் ஜனநாயக அமைப்புகள் மட்டுமின்றி, திரையுலகப் பிரபலங்கள், ஜாதியவாத மற்றும் இந்துத்துவ மதவாத ஆர் எஸ் எஸ் அமைப்புகள்/கட்சிகள் உட்பட அனைவரும் நேரில் வந்து ஆறுதல் தெரிவித்தனர்.
ஆறுதல் தெரிவிக்காமல் இருந்தவர்கள் பாமக தலைவர்களும் (அவர்களின் தொண்டர்கள் வந்திருந்தார்கள்) டாக்டர் கிருஷ்ணசாமியும் மட்டுமே. ஆறுதலாய் நின்ற அனைவரிடமும் நான் நன்றியுள்ளவனாக இருந்தாலும், அதற்காக அவர்களின் ஜாதியவாத/மதவாத அரசியலையும், இன்று விஜய் செய்வதைப்போன்ற கேடுகெட்ட அரசியலையும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற எந்த அவசியம் இல்லை.
என் தங்கையின் இறப்பிற்கு முன்பே, பெரியார் மற்றும் அம்பேத்கர் சிந்தனைகளால் அரசியல் விழிப்புணர்வைப் பெற்றவன் நான். TVK Gen Z …..க்களுக்கு பாடம் எடுங்கள், எனக்கு வேண்டாம்.
அண்ணன் விஜய் அவர்கள் அரசியலுக்கு வந்தது, இளைஞர்கள் அரசியலில் ஈடுபடுவார்கள் என்ற நம்பிக்கையுடன் எனக்கும் மகிழ்ச்சியாக இருந்தது. குறிப்பாக, சமீபத்தில் நிகழ்ந்த துயரச் சம்பவத்தில் உயிரிழந்த 41 தொண்டர்களை நினைத்து வருந்தும் தலைவனுக்குரிய மனநிலையிலேயே அவர் இருப்பார் என எண்ணினேன்.
ஆனால் இன்று அவர் வெளியிட்ட காணொளி என்னை பெரும் அதிர்ச்சியடைய வைத்தது. அத்தனை உயிரிழப்புகளுக்குக் காரணங்களில் ஒன்றாக அவரது பரப்புரைப் பயணமும் இருக்கிறது என்பதை ஏற்றுக்கொண்டு வருத்தம் தெரிவிப்பதையோ, பாதிக்கப்பட்ட மக்களிடம் மன்னிப்புக் கோருவதையோ செய்யவில்லை. மாறாக, தம்முடைய தரப்பில் எந்தத் தவறும் இல்லை என்பதை வலியுறுத்தும் விதமாகவே அந்தக் காணொளி அமைந்துள்ளது.
தங்களின் கரூர் பரப்புரைப் பயணத்திற்கு முன்பே இப்படிப்பட்ட பெரிய அசம்பாவிதங்கள் நடைபெறாமல் தடுக்கப்பட்டன என்பதே உண்மை. கரூரில் நடந்தது என்பது மக்கள் விரோத பாஜகவை தவிர யாராலும் எதிர்பார்க்கப்படாதது.
ஒரு தலைவருக்குரிய பொறுப்பு, தகுதி, மக்களுக்கான கரிசனை எதுவும் அந்த உரையில் இல்லை.
அனிதாவின் இறப்பின் போது, எந்த ஆதாரமும் இன்றி திமுக மீதும்/ மாண்புமிகு அமைச்சர் அண்ணன் சிவசங்கர் சா.சி. அவர்கள் மீதும் வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளைப் போலவே, இன்று நீங்களும் அதே வழியில் குற்றச்சாட்டுகளை முன்வைக்கிறீர்கள்.
விஜய் அவர்கள் கூறியதுபோல், அனைத்துப் பரப்புரைக் கூட்டங்களின் நிகழ்வுகளும் மக்களிடம் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. உண்மை மறைக்கப்பட முடியாது. மக்களின் நம்பிக்கைக்கு விரோதமாக நடந்தால், இறுதியில் மக்கள் முன்னிலையில் விஜய்தான் சிக்குவார்.
அண்ணா கூறியபடி:
"மக்களிடம் செல், மக்களுடன் வாழ், மக்களிடமிருந்து கற்றுக் கொள்."
இந்தக் கொள்கைகள் விஜய்க்கு பொருந்தாது என்பதும் வெளிப்படுகிறது.
எனவே, விஜய் அவர்கள் இனி அரசியல் பேசாமல், தன்னுடைய நடிப்பு வாழ்க்கையைத் தொடர்வது சிறந்தது. இல்லையெனில், அவர் சொல்வதுபோல், அவருடைய அரசியல் பயணம் கொள்கை எதிரிகளுடனே இணைய வேண்டிய சூழ்நிலையே உருவாகும் என்பது கசப்பான உண்மை.
விஜய் அவர்கள் பாஜகவிற்கு கிடைக்கப்போகும் மிக வலிமையான மற்றும் ஆபத்தான ஆயுதம்.
#கரூர் சம்பவம் 😰 #🔴இன்றைய முக்கிய செய்திகள் #🫨விஜய் வெளியிட்ட அதிரடி வீடியோ
