ஒருவர் நபி(ஸல்) அவர்களிடம் மறுமை நாளைப் பற்றி, ‘மறுமை நாள் எப்போது வரும்?’ என்று கேட்டார். நபி(ஸல்) அவர்கள், ‘அதற்காக நீ என்ன நற்செயல்களைத் தயார் செய்து வைத்திருக்கிறாய்?’ என்று திரும்பக் கேட்டார்கள். அம்மனிதர், ‘எதுவுமில்லை; நான் அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் நேசிக்கிறேன் என்பதைத் தவிர’ என்று பதிலளித்தார். அதற்கு நபி(ஸல்) அவர்கள், ‘நீ நேசித்தவர்களுடன் தான் மறுமையில் நீ இருப்பாய்’ என்று கூறினார்கள். நபி(ஸல்) அவர்கள், ‘நீ நேசித்தவர்களுடன் நீ இருப்பாய்’ என்று சொன்னதைக் கேட்டு நாங்கள் மகிழ்ச்சியடைந்ததைப் போன்ற வேறு எதனாலும் நாங்கள் மகிழ்ச்சியடைந்ததில்லை. நான் நபி(ஸல்) அவர்களையும்
அபூபக்ர்(ரலி) அவர்களையும் உமர்(ரலி) அவர்களையும் நேசிக்கிறேன். மேலும், அவர்களை நேசித்த காரணத்தால் மறுமையில் அவர்களுடன் தான் இருப்பேன் என்று நம்புகிறேன்; அவர்களின் நற்செயல்களைப் போன்று நான் நற்செயல் புரியாவிட்டாலும் சரியே!
அனஸ்(ரலி) அறிவித்தார்கள்.
(புகாரி: 3688) #🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ #🕋 மாஷா அல்லாஹ் 💖 #🕌இஸ்லாம்
📗குர்ஆன் பொன்மொழி
💯அல்லாஹ்வின் அருட்கொடை🕋
#இறை அடியான்☝️ #🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்

