அதன்பின்னர் 3 நாட்களுக்கு லட்சுமி வழிபாடு நடக்கிறது. இறுதியாக மூன்றாவது கட்டத்தில் சரஸ்வதி தேவி வழிபாடு நடத்தப்படுகிறது. ஒவ்வொரு மனிதரின் வாழ்க்கையிலும் கல்வி மிக முக்கியமானது என்பதால் சரஸ்வதி தாய் அறிவையும், ஞானத்தையும் வழங்கும் பொருட்டு பூஜை நடத்தப்படும்.
அதே போன்று இந்த ஆண்டுக்கான ஆயுத பூஜை பண்டிகை இன்று அக்டோபர் 1ம் தேதி காலை 9:15 முதல் 10:15 மணி வரை கொண்டாடப்படுகிறது. மாலை 4:45 மணி முதல் 5:45 மணிக்குள் பூஜை செய்ய நல்ல நேரமாக அமைந்திருக்கிறது. அதே போன்று இன்று மாலை 6 மணிக்கு மேல் 7:30க்குள் பூஜை செய்யலாம்.
ஆயுத பூஜை வழிமுறைகள்
கருவிகள், வாகனங்கள், புத்தகங்கள் ஆகியவற்றை சுத்தம் செய்ய வேண்டும். அதன் பின் திருநீறு கரைத்து 3 பட்டையிட்டு சந்தனம், குங்குமம் திலகமிட வேண்டும்.
திருநீறு வைத்து, திலகமிட்ட பொருட்களை அம்பாளின் திருவுருவ புகைப்படத்திற்கு முன் வைத்து அம்பாளுக்கு பிரியமான சர்க்கரைக் கலந்த பொங்கல், புளியோதரை, சுண்டல், பொரி, பழங்கள் வைத்து படைக்கலாம். தேங்காய், வாழைப்பழம், பூ, வெற்றிலை, ஊதுபத்தி, சாம்பிராணி வைத்து விளக்கேற்றி நிவேதனம் செய்து வழிபாடு செய்யலாம்.
ஆயுத பூஜை செய்யும் இடம் சுத்தமாகவும், அமைதியாகவும் இருக்க வேண்டும் என்பது மிக முக்கியம். பூஜை நேரத்தில் கோபப்படுவதோ, தொழிலாளர்கள் மீது எரிச்சல் காட்டுவதோ, அவர்களை ஏவல் செய்வதோ கூடாது. வாக்குவாதங்கள் செய்வது, எதிர்மறை எண்ணங்களுடன் இருப்பது தவிர்க்கப்பட வேண்டும்.
ஆயுத பூஜை தினத்தில் கல்வி சார்ந்த பொருட்கள் மற்றும் தொழில் கருவிகள், இயந்திரங்கள் போன்றவற்றுக்கு பூஜை செய்வதால் தொழில், கல்வி மற்றும் பணியில் முன்னேற்றம் கிடைக்கும். #🙏நமது கலாச்சாரம் #ஆயுத பூஜை மற்றும் சரஸ்வதி பூஜை நல்வாழ்த்துக்கள்
