ShareChat
click to see wallet page
#😟தவெக தலைவர் விஜய் இழப்பீடு அறிவிப்பு 1. தவெக முதலில் கேட்ட லைட் ஹவுஸ் ரவுண்டானா பகுதி மிகவும் ஆபத்தான இடம், உழவர் சந்தையும் மிகவும் குறுகலான இடம். அதனால்தான், அண்மையில் அதிமுக கூட்டம் நடத்திய வேலுச்சாமிபுரத்தை தேர்வு செய்து அங்கு பரப்புரைக்கு அனுமதி பெற்றனர். 2. தவெகவின் பரப்புரையில் 500 காவல்துறையினர் பணியில் ஈடுபட்டிருந்தார். திருச்சி - 650, அரியலூர் - 287, பெரம்பலூர் - 480, நாகப்பட்டினம் - 410, திருவாரூர் - 413, நாமக்கல் - 279, கரூர் - 500 3. தவுட்டுபாளையம் முதல் கரூர் ரவுண்டானா 30 நிமிடத்தில் வர வேண்டிய தூரத்தை தவெக தலைவர் 2 மணி நேரம் எடுத்துக் கொண்டார். 4. பரப்புரையில் கல்வீச்சு சம்பவம் எதுவும் நடைபெறவில்லை. 5. கூட்ட நெரிசல் ஏற்பட்டது குறித்து உரிய விசாரணை நடத்தப்படும். 6. கூட்டம் கட்டுக்கடங்காமல் மாறும்போது முன்பாகவே வாகனத்தை நிறுத்தி பேசிவிடச் சொல்லி தவெகவினரிடம் டிஎஸ்பி கூறியும் மறுத்துவிட்டனர். 7. காலையில் இருந்தே சாப்பிடாமல் அதிகம் பேர் அங்கு காத்திருந்துள்ளனர். 8. இந்த நிகழ்ச்சிக்கு வந்திருந்தவர்களுக்கு தேவையான தண்ணீர், உணவு வசதி எதுவும் தவெக நிர்வாகிகள் ஏற்பாடு செய்யவில்லை. 9. இதே இடத்தில் அதிமுக கூட்டத்திற்கு எதிர்க்கட்சித் தலைவர் வந்தபோது 137 காவலவர்கள்தான் பாதுகாப்பு பணியிலிருந்தனர். ஒழுங்கமைக்கப்பட்ட கூட்டம், முறையான வழிநடத்துதல் போன்ற காரணங்களால் எல்லாம் அன்று சுமூகமாக நடந்தது. 10. நேற்று 500 காவலர்கள் பணியில் இருந்தும், களத்தில் தவெகவிடம் இருந்து ஒத்துழைப்பும் தேவை.‌ 11. பொய் மற்றும் கற்பனை செய்திகளை இந்த நேரத்தில் வதந்திகளாக பரப்பாதீர்கள். - தமிழ்நாடு சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபி, டேவிட்சன் தேவாசீர்வாதம் #📺அரசியல் 360🔴 #💪தி.மு.க #🔷காங்கிரஸ் #😢கரூர் விஜய் பிரசார நெரிசலில் சிக்கி 39 பேர் பலி

More like this