ShareChat
click to see wallet page
#தேவர் ஜெயந்தி #மாமன்னர் மருது பாண்டியர்கள் குருபூஜை #🥰அன்புடன் காலை வணக்கம்🌞 ##SABP #motivationalquotes_Tamil #motivation #தன்னம்பிக்கை #tamilquotes #motivationalquotes #💪🏽மோட்டிவேஷனல் வாழ்த்து💐 30,* *முத்துராமலிங்கத் தேவர்* பசும்பொன் தேவர் சுதந்திரப் போராட்ட வீரர், தலைசிறந்த பேச்சாளர், ஆன்மிகவாதியான பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் 1908ம் ஆண்டு அக்டோபர் 30ம் தேதி ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் கிராமத்தில் பிறந்தார். இவர் சொந்த முயற்சியில் தமிழ் இலக்கண, இலக்கியங்களைக் கற்றார். முதுகுளத்தூர் அடுத்த சாயல்குடியில், விவேகானந்தர் பெயரில் தொடங்கப்பட்ட நூலகத் திறப்பு விழா 1933-ல் நடந்தது. தலைமைப் பேச்சாளர் வராததால், இவரைப் பேச அழைத்தனர். மேடையேற்றம் இவருக்கு முதல்முறை. ஆனால், விவேகானந்தரின் தத்துவங்கள் பற்றி 3 மணி நேரம் மடைதிறந்த வெள்ளம்போலப் பேசி, பாராட்டு பெற்றார். காங்கிரஸில் இருந்து 1948-ல் விலகிய இவர், பார்வர்டு பிளாக் கட்சியில் இணைந்தார். நேதாஜி என்ற வாரப் பத்திரிக்கையை தொடங்கினார். இவர் தேர்தலில் வெற்றி பெற்று மதராஸ் மாகாண சட்டப்பேரவை உறுப்பினராகப் பணியாற்றினார். விடுதலைக்காக போராடிய முத்துராமலிங்கத் தேவர், உடல்நலம் பாதிக்கப்பட்டு 55-வது வயதில் (1963) தனது பிறந்த நாளன்றே மறைந்தார்.
தேவர் ஜெயந்தி - ShareChat

More like this