ShareChat
click to see wallet page
#பெண்ணின் வீழ்ச்சி..! அரசின் எழுச்சியும்## பெண்ணின் வீழ்ச்சி..! அரசின் எழுச்சியும்## மனித சமூகம் ஆப்பிரிக்காவிலிருந்து மத்திய ஆசியாவைத் தொடுவதற்கு 60,000 ஆண்டுகளும், தென்கோடி கோண்டுவானாவிலிருந்து மத்திய ஆசியாவை தொடுவதற்கு 40.000 ஆண்டுகளும் எடுத்துக்கொண்டது. மனித இனம் வாழிடங்களைத் தேடி, உணவைத் தேடி, பாதுகாப்பைத் தேடி என, பல்வேறு காரணிகளால் மனித சமூகம் இடம் பெயர்ந்து கொண்டே இருந்தது. இனக்குழு என்று சொல்ல முடியா விட்டாலும், மனிதர்கள் குழுவாக, நிலை பெற்றச் சமூகமாக தனக்கான வாழிடங் களை அமைத்துக் கொண்டது வெறும் 10,000 ஆண்டுகளுக்கு முன்பு தான். வேட்டைச்சமூகம் நிலைபெற்ற சமூகமாக மாற்றம் அடையும்போது தங்களுக்கான உணவை உற்பத்தியின் மூலம் தேடிக் கொண்டார்கள், அதற்கு கருவியின் பயன்பாடும், விவசாயமும் வேட்டைச் சமூகத்தை வேறு ஒரு நவீன தளத்திற்கு நகர்த்தியது. அங்கங்கே அந்தந்தக் குழுக்கள் ஒருங்கி ணைந்து தனக்குத் தேவையான தானியங்களை விளைவிக்கத் தொடங்கி னார்கள், அதை சமமாக அனைவரும் பங்கிட்டும் கொண்டார்கள். நிலத்தைக் கீறியது அதாவது இந்த உலகத்தின் முதல் விவசாயி பெண்ணாக த்தான் இருந்தாள், இதைத்தான் புராதான பொதுவுடமை சமூகம் என்று சொல்கின் றோம். ஒரு கிலோ மீட்டரிலிருந்து,10 கிலோ மீட்டர், 20 கிலோ மீட்டர் தூரம் வரை..! தூரம் தூரமாக, குழுக் குழுவாக மனிதர்கள் வாழ்ந்து வந்தார்கள்,எல்லாக் குழுவிலும் பெண்களே தலைமைத் தாங்கினார்கள். வறட்சியின் காரணமாகவும், உற்பத்திப் போதாமையின் காரணமாகவும் ஒரு குழு இன்னொரு குழுவின் உற்பத்தியை கொள்ளை அடிக்கத் தொடங்கினார்கள்..! இந்தக் கொள்ளையை தடுப்பதற்காகவும் தவிர்ப்பதற்காகவும் உடல் திறன் உள்ள ஆண்களை விவசாய நிலத்தின் நாலா புறமும் நிறுத்தி காவல்க் காக்க வைக்கி றார்கள்..! அந்தக் காவலர்களுக்கு ஆளுக்குக் கொஞ்சமாக உற்பத்திப் பொருளை சம்பளமாக கொடுத்தும் வருகிறார்கள்..! விவசாய பரப்பு அதிகரிக்கும்போது, காவலுக்கான ஆட்களும் அங்கே அதிகரிக்கிறார்கள், அப்போது காவலர்கள் தங்களுக்கான சம்பளத்தை கூடுதலாக நியமிக்கும்காவலர்களுக்கும் பங்கிட்டு தர வேண்டியதேவை இருந்தது மேலும் அவர்களுக்குப்போதுமான ஆயுதங்களும் தேவைப்பட்டது. அப்போது ஆயுதங்கள்உருவாக்கப்பட்டது, காவலர்கள் எண்ணிக்கை கூடும்போது இயல்பாகவே அங்கே ஒரு நிர்வாகம் வந்துவிடுகிறது, அந்த நிர்வாகத்திற்கு தலைமை காவலரும் தேவைப்படுகிறது..! அரசுகளின் தோற்றம்இந்தஇடத்தில்தான் கருக்கொள்கிறது, ஆயுதம் அதிகாரத்தை கொடுக்கிறது, அதிகாரம் ஆட்சியை கொடுக்கிறது, ஆட்சி மேலும் சொத்துக் களை உருவாக்குகிறது. இங்குதான் வேல் போன்ற வேட்டைக் கருவிகளை பயன்படுத்துவோரை வேலன் என்றும், காவலனை அரசன் என்றும் அழைக்கும் மரபு உருவாகிறது, இந்த உருவாக்கம்தான் நிர்வாகத்திற்குத் தேவையான வரிவசூலை மக்களிடம் வசூலிப்பதும், அந்த நிர்வாகம் என்பது அரசாக தோற்றம்கொள்வதும்இங்குதான் தொடங்குகிறது. அதுவரை பெண்களே நிர்வகித்து வந்தார்கள், அவர்கள்தான் விளைச்சலை சமமாக பங்கிட்டு வந்தார்கள் ,தனக்கான குழந்தைகள் கூட இன்னாருக்குத்தான் பிறக்க வேண்டும் என்கின்ற விழுமியங் களுக்குள் அடங்காதவர்களாக இருந்தார் கள். தனக்கான பாலியல் தேவையை அவர்கள் சுதந்திரமாக தேர்ந்தெடுப் பவர்களாகவும், தனது உடலை தானே சொந்தம் கொண்டாடுபவர்களாகவும் இருந்தார்கள். ஒரு குழுவிற்கு தலைமைத்துவம் ஆணின் கைக்கு மாறும் போது..! தனக்குப் பிறகு யார் என்கின்ற கேள்வியும், அதிகாரத்தின் மேல் அச்சமும் ஏற்படுகிறது. அந்த அடிப்படையில்தான் தலைமை ஏற்று இருக்கின்ற ஆண் என்பவன்..! தனக்குப்பின் தனக்குப் பிறந்தவன் ஏன் ஆளக் கூடாது அல்லது நிர்வகிக்கக் கூடாது என்கின்ற கேள்வித் தோன்று கிறது. பெண்களை நிரந்தரமாக வீட்டின் அடிமை களாக மாறுவதற்கான மையப்புள்ளியும் இந்தக் கேள்வியில்தான்தொடங்குகிறது. ஒரு அரசு அல்லது தொடக்ககால நிர்வா கம் பாதுகாப்பாகவும்,பிறர்அச்சுறுத்தலை எதிர் கொள்ளவும், தன் நிர்வாகத்தின் கீழ் உள்ள மக்கள் எதிர்த்து விடாமல் இருக்கவும் அவர்களுக்கு ஒரு வழிகாட்டு நெறிமுறை தேவைப்பட்டது அல்லது ஒரு சட்டம் தேவைப்பட்டது. சட்டங்கள் எப்போதுமேமக்களின் சுதந்திரத்திற்கு எதிரானது தான். மக்களை பண்படுத்தி சுய கட்டுப்பாடுடன் வாழ வைப்பதுதான் அரசின் தார்மீகக் கடமையாக இருக்க முடியும். ஆனால் அரசின் சுரண்டல் நோக்கமும், அரசின் பயங்கரவாத சிந்தனையும் ஆள்பவார்களை எப்பொழுதும் அச்சத்தி லேயே வைத்திருக்கும், அந்த அச்சமே அவர்களின் சட்டங்களாக வெளிப்படு கிறது. அப்படி அவர்களின்பயமும்,தன் பதவி யின் மேல் இருக்கக் கூடிய பற்றும், தற்போது அனுபவித்து வரும் சுக போக வாழ்க்கையும் பறி போய் விடக்கூடாது என்பதற்காக சட்டங்களைக் காட்டி மக்களை ஒடுக்க நினைப்பார்கள் அல்லது ஒடுக்குகிறார்கள். இது இன்று மட்டும் அல்ல, வரலாறு வசப்படாத காலத்திற்கு முன்பே நிர்வாகம் என்கின்றப் பெயரில் ஒடுக்குமுறை சட்டங்களையும், கட்டமைப்பையும் இப்படி தான் உருவாக்கினார்கள்..! மெல்ல மெல்ல காலச்சக்கரம் உருண்டு காவலர்கள் அரசர்களாகவும், நிர்வாகம் அரசாகவும், பிறகுழுக்களின் பொருட் களையும், விளைச்சலையும், ஆடு, மாடுக ளையும் கவர்ந்து வருவது பெருமையா கவும், இதற்காக இருநாட்டு மக்களும் அடித்துக்கொண்டு சாவதை வீரமாகவும், கவுரவமாகவும் நினைக்கும் காலம் வந்தது. சுமார் 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பாகவரை மன்னன்உத்தரவுவிடுவது எல்லாம் சட்டமாக சொல்லி வரும் போது, போன மாதம் இந்த குற்றத்திற்கு என்ன தண்டனை கொடுத்தோம் என்று தெரியா மல்..!? உத்தரவை மாற்றி சொல்லும்போது இந்த முட்டாள் அரசர்களுக்கு நிரந்தரமான, மாற்றப்படாத மனுதர்மம் என்கின்ற சட்டத்தை உருவாக்கி கொடுத்தவர்கள் பார்ப்பனர்கள். மறதியில் மாற்றி மாற்றி தண்டனை வழங்கி கொண்டிருந்த அரசனுக்கு மாற்றவே முடியாத நிரந்தரமான தண்டனை புத்தகம் கிடைத்தது ஒரு வரம் அல்லவா..! குழு சமூகம் மெல்ல மெல்ல அரசு என் கின்ற நிறுவனமய மாக்கப்பட்ட, சட்ட திட்டங்களுக்கு உட்பட்ட, ஒரு நவீன வடிவம் பெற்றாலும் பெண்களின் நிலை மட்டும் மிக மோசமாகவே மாறிக்கொண் டிருந்தது..!? ஒரு பெருநிலப்பரப்பையும், ஒரு பெருங் கூட்டத்தையும் நிர்வகித்து வந்த பெண் இன்று அடுப்பறையிலும்,படுக்கை அறை யிலும் மட்டும் அவளின் அதிகார வரம்பு சுருங்கிப்போனது. மேலும் குடும்பங்களை முழுமையான நிறுவன மயமாதலுக்குள் கொண்டு வந்ததுதான் அரசின்மிகப்பெரிய வெற்றி அதிலும் ஆரியப்பார்ப்பனர் வருகை அரசுகளை மேலும் மேலும் இறுக்கம் கொள்ளச் செய்தது..! அடிப்படையாக அவர்கள் செய்தது பெண் களுக்கான சட்ட திட்டத்தை கடுமையாக வகுத்தது தான், காரணம் குடும்பம் என்கி ன்ற நிறுவனங்கள் இருக்கும் வரைதான் அரசு இந்த மண்ணில் நிலை கொள்ள முடியும். குடும்பத்தை தகர்த்து விட்டாள் அரசுகள் தானே பட்டு உதிர்ந்துவிடும். சுரண்டல், லஞ்சம், ஊழல், திருட்டு,பொய், கற்பழிப்பு, பொருளாதார ஏற்றத்தாழ்வு இவை அனைத்தும் குடும்பங்களின் உற்பத்திதான்..!? அரசிற்குக்கு வருவோர் இந்த ஜனநாயக மற்ற வன்முறையான நிறுவனமான குடும்பத்திலிருந்தே வருகிறார்கள், அறிவிற்கும் அறிவியலுக்கும் தொடர் பில்லாத... தன் தாயாக இருந்தாலும், தன் தங்கை யாக இருந்தாலும், அடிமையாக இருப்பதை கண்ணார கண்டு ரசிக்கும், அதையே புனிதப்படுத்தும் குடும்ப ஆண்கள்தான் அரசியலுக்கு வருகிறார் கள். தன் வீட்டுப் பெண்களை அடிமையாக வைத்துக் கொண்டு, ஜனநாயகத்தின் வாடைக் கூட தெரியாத சூழலில் இருந்து வரும் ஆண்களுக்கு எந்த அளவிற்கு அறிவு இருக்குமோ..! அந்த அளவிற்குத்தான் அரசின் நிர்வாக மும் இருக்கும். இவைகள் இயல்பாக நடைபெறவில்லை, மிகத் துல்லியமாக திட்டமிட்டு எதிர்கால த்திலும் உடைப்போ, உணர்ச்சியோ வந்து விடக் கூடாது என்பதற்காக கட்டமைக்கப் பட்டது தான் இந்த குடும்பம். அதற்காகவே கடவுள், கற்பு, மோட்சம், பதிவிரதா தன்மை, பண்பாடு போன்ற ஒடுக்கு முறைகள் பெண்களின் மேல் ஏற்றப்பட்டது. இதை நமது அரசர்களுக்கு, அரசைப் பாதுகாக்கும் உத்தியாக பயிற்றுவித்தது பார்ப்பனர்களேயாகும், மனுதர்ம சாஸ்தி ரத்தையே சாரும்,நமது நாட்டில்பெண்கள் விழிப்படையாதவாறு மிக கவனமாக பார்த்துக்கொண்டது ஆரியப் பார்ப்பனர் களே. பார்ப்பனர்களுக்கு அரசின் தயவும், அரசர்களுக்கு பார்ப்பனர்களின் தயவும் தேவைப்பட்டது, இவர்கள் இருவரும் இரு தண்டவாளம் போன்றவர்கள். இந்தக் கள்ளக்கூட்டு அன்று முதல் இன்று வரை தொடர்கிறது. அரசுகள், பாதுகாப்பாகவும், பத்திரமாகவும், நிலை கொள்ளவும் அதன் மூலம்தன் சந்ததியை வளர்த்துக் கொள்ளவும் பார்ப்பனர்கள் பெரும் பங்காற்றி வருகிறார்கள். அவர்கள்தான் மக்களின் கோபத்தை மடைமாற்றம் செய்து, மக்களின் கோபத் தைத் திசைத் திருப்பி விடுபவர்கள், அதற்காக மக்களை கேளிக்கைகளிலும், மூடநம்பிக்கைகளிலும், ஆழ்த்துபவர்கள், இவர்கள் இல்லை என்றால்இந்தியாவில் எந்தஅரசும் நிம்மதியாகஇருக்க முடியாது
பெண்ணின் வீழ்ச்சி..! அரசின் எழுச்சியும்## - ShareChat

More like this