#சினிக்கூத்து #ரெங்கா! #renga-vamba! கொசுறு செய்தி #தூய்மை பணியாளர்கள் போராட்டம் முடிவுக்கு வந்தது.காஞ்சிபுரத்தைச் சேர்ந்த மளிகை பொருட்கள் மொத்த யாவாரம் செய்யும் 'பொது ஜனமான' தேன்மொழி என்பவர் சென்னை ரிப்பன் மாளிகை வாசலில் தூய்மைப் பணியாளர்கள் செய்யும் போராட்டத்தால் தனக்கு இடையூறு ஏற்பட்டுவிட்டதாக நீதிமன்றத்தில் ஒரு 'பொது நல' வழக்கு தொடுக்கிறார்.
அந்த வழக்கிற்கு ராகவாச்சாரி என்னும் சீனியர் வழக்குறைஞருக்கு 4-5 லட்ச ரூபாய் வரை வக்கீல் ஃபீஸ் குடுத்து வாதாடுகிறார். நீதிமான்களும் அந்த பொது நல வழக்கை விசாரித்து மனுதாரருக்கு சாதகமான நல்லதொரு தீர்ப்பாக போராட்டக் காரர்களை உடனே அப்புறப்படுத்த தமிழக அரசுக்கு உத்தரவிடுகிறார்கள்.
தமிழக அரசும் பாவம் என்ன செய்யும்? நீதிமன்ற உத்தரவை மீற முடியுமா என்ன? வேறு வழியில்லாமல் போராட்டக்காரர்களை செல்லமாக ரெண்டு தட்டு தட்டி அப்புறப்படுத்துகிறது.
ஓல்சேல் மளிகை யாவாரம் செய்யும் காஞ்சிபுரத்து தேன்மொழி லட்சக்கணக்கில் செலவு செய்து ராகவாச்சாரியை வைத்து வழக்காட வைக்கிறார் என்றால் எந்தளவுக்கு சென்னையில் அவருக்கு இடையூறு ஏற்பட்டிருக்கும்? எவ்வளவு கோடி யாவாரம் அவருக்கு நஷ்டம் ஏற்பட்டிருக்கும்?
ச்சே.. எவ்வளவு கொடுமை?
சபாஷ் 'பொது ஜனம்' தேன்மொழி.. Source: Ulaganathan ஆறுமுகம். முகநூல் பதிவு தரவுகளில் இருந்து
