#✨ காந்தி ஜெயந்தி நல்வாழ்த்துக்கள் 🌸 #📢 அக்டோபர் 2 முக்கிய தகவல்🤗 #🎥இன்றைய முக்கிய தகவல்🗞️ #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல் *காந்தி ஜெயந்தி*
தேசத்தந்தை காந்தியின் பிறந்தநாளான அக்டோபர் 2-ம் தேதியை நாம் காந்தி ஜெயந்தியாக கொண்டாடி வருகிறோம். இந்த நாளில் காந்தியின் கொள்கைகள், அறவழி போராட்டம், அவரின் தியாகம் ஆகியவற்றை நினைவுக்கூருவது அவசியாமாக உள்ளது. காந்தியின் வழியை பின்பற்றி அகிம்சை முறையை கடைப்பிடிக்க முன்மொழிவோம்.
இந்திய விடுதலை போராட்டத்தில் காந்தி மிகவும் முக்கியமானவர். ஆங்கிலேயர்களின் அடக்குமுறைக்கு எதிராகவும், சமூகத்தில் இருந்த தீண்டாமைக்கு எதிராகவும் அகிம்சை என்னும் அமைதி ஆயுதம் கொண்டு போராடி, அதில் உலகம் வியந்து பார்க்கும் வெற்றியையும் பெற்றவர் காந்தி. நாம் மட்டும் இல்லை உலக நாடுகளும் இந்த தினத்தை சர்வதேச அகிம்சை தினமாக கொண்டாடி வருகிறது...
