#உறவுகள்
இருக்கும் உறவு
இறக்கும் வரையில்
இருக்கும் பொருள்
இழக்கும் வரையில்
இரண்டின் அருமையும்
இம்மாந்தர் உணர்வதில்லை
இழந்த பொருளின்
இடத்தை நிறைக்க
இன்னொரு பொருள்
இலகுவாய் இடலாம்
இறந்த உறவின்
இடத்தை நிறைக்க
இயன்றவரை தேடினினும்
இழந்த உறவு ஏனோ
இழந்தது தான்
இந்த பிறவியில்
இப்பிறவியில் நாம்
இருக்கும் வரை
இருக்கும் உறவுகளுடன்
இனிதுடன் இருப்போம்
வாழ்க்கை குறுகியது, ஆனா அழகானது.
