ShareChat
click to see wallet page
#🌎பொது அறிவு வரலாற்றில் இன்று செப்டம்பர் 27 1983 - சுதந்திரமான மென்பொருளுக்கான க்ன்யூ(GNU) திட்டம் குறித்த அறிவிப்பை ரிச்சர்ட் ஸ்டால்மேன் வெளியிட்ட நாள் இத்திட்டத்தின் விளைவாகவே தற்போது நாம் பயன்படுத்தும் லினக்ஸ் இயங்குதளம் உருவானது. ஸ்டால்மேன் மாசாசூசெட்ஸ் தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தில் (எம்ஐடி) பணியாற்றிய 1970களில், எல்லா மென் பொருட்களும் இலவசமாகவே இருந்தன. ஒரு பேச்சாளருடைய உரையின் ஒலிப்பதிவை யாரும் கேட்கலாம், யாருக்கும் தரலாம் என்பதில், தருவதற்கான ஊடகமான ஒலிப்பேழைக்கு மட்டுமே விலை என்ற நிலையிலிருந்து மாறி, எஸ்பி பாலசுப்ரமணியத்திடம் அமெரிக்காவில் இசை நிகழ்ச்சி நடத்த இளையராஜா ராயல்டி கேட்டதுபோல, 1980களில் மென்பொருட்கள் விலைபொருட்களாயின. விலைகொடுத்து வாங்கினாலும் மற்றவருக்குத் தரக்கூடாது, நமக்குத் தேவையான மாற்றங்கள் செய்யக்கூடாது போன்ற இந்த நிலையை மாற்றவே ஸ்டால்மேன் க்ன்யூ திட்டத்தைத் துவங்கினார். அப்போது பிரபலமாக இருந்த, தனியுரிமை இயங்குதளமான யூனிக்ஸ் போன்ற ஆனால் யூனிக்ஸ் அல்லாத என்பதற்காகவே, GNU is Not Unix என்று பெயரிட்டார். க்ன்யூ என்பது எருது போன்ற தோற்றமுடைய மான் ஆகும். இத்திட்டம் ஆர்வமுள்ள வெகுமக்கள் பங்களிப்புடன், இயங்குதளம், பிற மென்பொருட்கள் ஆகிய அனைத்தையும் இலவசமாக மட்டுமின்றி, மற்றவர்களுக்கு வழங்கும், மாற்றம் செய்யும் சுதந்திரத்துடன் உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டது. ஃப்ரீ சாஃப்ட்வேர் ஃபவுண்டேஷன் என்பதில் ஃப்ரீ என்றால் இலவசம் என்று பொருள் கொள்ளாமல் சுதந்திரம் என்று பொருள் கொள்ள வேண்டும். 1991ல் 21 வயது ஃபின்லாந்து மாணவர் லினஸ் பெனடிக்ட் டார்வால்ட்ஸ் எழுதிய கெர்னலுடன் முதல் லினக்ஸ் இயங்குதளம் வெளியானது. இன்று பெரிய நிறுவனங்கள் பாதுகாப்புக்கும், நம்பகத்தன்மைக்கும் லினக்சையே தேர்ந்தெடுக்கின்றன. *╭──────────────────╮*   *╔•═•-⊰❉⊱•═•⊰❉⊱• •═•╗♥︎‿♥︎𝗞𝗮𝗹𝗮𝗶𝘀𝗲𝗹𝘃𝗮𝗻♥︎‿♥︎ *╚•═•-⊰❉⊱•═•⊰❉⊱• •═•╝*

More like this