ShareChat
click to see wallet page
மீட்பர் வருகிறார்!! ஆயத்தப்படு, ஆயத்தப்படுத்து!! கர்த்தருக்கு ஸ்தோத்திரம். 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 *கர்த்தருடைய பரிசுத்த நாமத்திற்கு மகிமை உண்டாவதாக.* ✝️✝️✝️✝️🛐🛐🛐🛐🛐🛐🛐✝️✝️✝️✝️ கிறிஸ்துவுக்குள் அன்பானவர்களே! கர்த்தரும் இரட்சகருமாகிய நமது இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் அன்பின் இரவு நேர வாழ்த்துக்கள். *நீங்களே இயேசுவின் சிநேகிதர்* எனக்கு அன்பானவர்களே , "என்னைச் சிநேகிக்கிறவர்களை நான் சிநேகிக்கிறேன்; அதிகாலையில் என்னைத் தேடுகிறவர்கள் என்னைக் கண்டடைவார்கள்" (நீதிமொழிகள் 8:17) என்று கர்த்தர் கூறும் அருமையான வசனத்தை இந்த வேளையில் தியானிப்போம். நம்முடைய முற்பிதாவாகிய ஆபிரகாம் கர்த்தரை தன் முழு இருதயத்தோடும் நேசித்ததை குறித்து வேதத்தில் வாசிக்கிறோம். ஆபிரகாம் தேவனுடைய சிநேகிதன் என்று அழைக்கப்பட்டான் (ஏசாயா 41:8; 2 நாளாகமம் 20:7; யாக்கோபு 2:23). அன்பு சகோதரரே / சகோதரியே, நீங்கள் தேவனுக்கு சிநேகிதமான முறையில் வாழ்கிறீர்களா? அவரே உங்களுக்கு ஒரே நண்பராக இருக்கிறாரா? ஆண்டவருடனான உங்கள் உறவை இன்று சீர்தூக்கிப் பாருங்கள். உங்களுடைய மற்ற நண்பர்களையும் இயேசுவையும் ஒன்றுபோல் நினைக்காதீர்கள். இயேசுவை, எவ்வகை மனுஷீக அன்போடும் ஒப்பிட இயலாது. அவரே உங்கள் உண்மையான சிறந்த நண்பராவார். தனிப்பட்ட முறையில் என் வாழ்க்கையில் இயேசுவை தவிர எனக்கு வேறு தோழியர் கிடையாது. ஆகவேதான் ஆண்டவர் இன்று வரைக்கும் என்னை கிருபையாக ஆசீர்வதித்து வருகிறார். அப்படியே ஆபிரகாமும் கர்த்தரை தேடுவதில் ஜாக்கிரதையாயிருந்தான்; அவரை உண்மையாய் பின்பற்றினான். ஆபிரகாமின் இருதயத்தை தேவன் தமக்கு முன்பாக உண்மையுள்ளதாகக்கண்டார் என்று வேத வசனம் சாட்சி கொடுக்கிறது (நெகேமியா 9:8). "உண்மையாய் நடக்கிறவர்களோ அவருக்குப் பிரியம்" (நீதிமொழிகள் 12:22) என்றும், "கர்த்தரோ உண்மையுள்ளவர், அவர் உங்களை ஸ்திரப்படுத்தி, தீமையினின்று விலக்கிக் காத்துக்கொள்ளுவார்" (2 தெசலோனிக்கேயர் 3:3) என்றும் வேதத்தில் வாசிக்கிறோம். அன்பு சகோதரரே / சகோதரியே, இன்று உங்கள் வாழ்க்கையை சோதித்துப் பாருங்கள். ஆண்டவரை உண்மையாய் தேடுகிறீர்களா? தேவனுடைய வார்த்தையை தவறாமல் வாசிக்கிறீர்களா? ஜெபத்தில் ஆண்டவரிடம் எல்லா உண்மையோடும் பேசுகிறீர்களா? அவருக்கு முன்பாக எல்லா உண்மையோடும் நீதியுள்ள வாழ்க்கை நடத்துகிறீர்களா? இல்லையென்றால், இப்போதே உங்கள் வாழ்க்கையை ஆண்டவருக்கு முன்பு சமர்ப்பியுங்கள். உங்கள் குறைகளை மன்னிக்கும்படியும், அவரது உண்மையின்படி உங்களை ஆசீர்வதிக்கும்படியும் கேளுங்கள். அவர் மன்னித்து உங்களை ஆசீர்வதிப்பார். ஆமென் அல்லேலூயா! 🙏🙏 BROTHER **JESLIN JAYA KUMAR**9486852240🙏🙏 #✝️இயேசு #⛪ வேளாங்கண்ணி சர்ச் #✝️இயேசுவே ஜீவன் #✝பைபிள் வசனங்கள்
✝️இயேசு - மீட்பரின்வார்த்தை GUL 9 பஎன்னைச் நிரேசிநிறிவகிஜேன நான் அதிகாலையில் என்னைத் தேடுகிறவர்கள் என்னைக் கண்டடைவார்கள்" நீதிமொழிகள் 8:17 மீட்பரின்வார்த்தை GUL 9 பஎன்னைச் நிரேசிநிறிவகிஜேன நான் அதிகாலையில் என்னைத் தேடுகிறவர்கள் என்னைக் கண்டடைவார்கள்" நீதிமொழிகள் 8:17 - ShareChat

More like this