இந்திய அளவில் சிறந்த நடிகர் என்ற பெயரை பெற்ற தனுஷ் தமிழில் இட்லி கடை கொடுத்த பாசிட்ட்வி ரெஸ்பான்ஸோடு ஹிந்தியில் ஒரு படத்தில் நடித்து முடித்திருக்கிறார். தேரே இஷ்க் மெய்ன் படத்தை ஆனந்த் எல்.ராய் இயக்க கீர்த்தி சனோன் ஹீரோயினாக நடித்திருக்கிறார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருக்கிறார். இப்படமானது வரும் 21ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இப்படி தமிழ், இந்தி என பிசியாக நடித்துக்கொண்டிருக்கும் தனுஷ் மீது அவ்வப்போது சர்ச்சைகளும் எழுவது வழக்கம்.
அந்த வகையில் தனுஷ் படத்தில் நடித்திட வாய்ப்பு வழங்குவதாக கூறி, 'கமிட்மென்ட்' என்ற பெயரில் தனுஷுடன் 'அட்ஜஸ்ட்மெண்ட்' கேட்டு மேனேஜர் ஷ்ரேயாஸ் அழுத்தம் தந்ததாக மான்யா குற்றம் சாட்டியுள்ளார். அதற்கு தான் மறுத்துவிட்டதாகவும் நடிகை மான்யா தெரிவித்துள்ளார். இதனை நேர்காணல் ஒன்றில் அவர் தெரிவித்துள்ளார். #🔥 தனுஷ் மீது நடிகையின் பரபரப்பு குற்றச்சாட்டு😮 #🔴இன்றைய முக்கிய செய்திகள்

