ShareChat
click to see wallet page
கல்லுளி மங்கன் : பெயர் காரணம் பொதுவாகவே நமது முன்னோர்கள் பின்பற்றிய பழக்கங்களுக்க பின்னால் துல்லியமான அறிவியல் காரணம் இருப்பது போல், இவர்களின் சொல்லும் பெரும் அர்த்தங்கள் பொதிந்தவையாக இருக்கும். பெரும்பாலானவர்களை திட்டும் போது சரியான “கல்லுளி மங்கன்” என்ற வார்த்தையை பயன்படுத்துவதை அனைவருமே அறிந்திருக்க கூடும். அதற்கு உண்மையில் என்ன அர்த்தம் என்று எப்போதாவது சிந்தித்ததுண்டா? என்ன அர்த்தம்? உண்மையில் “கல்லுளி மங்கன்” என்பதற்கு இரண்டு அர்த்தங்கள் கூறப்படுகின்றது. கல்+உளி(உரி)+மங்கன் ஆரம்பத்தில் இந்த வார்த்தை கல்லுரி மங்கன் என்று தான் குறிப்பிடப்பட்டது. அதாவது உரிக்கவே முடியாத கல்லை உரிக்க வேண்டும் என்ற பிடிவாத குணம் கொண்டவர்களைத் தான் இவ்வாறு குறிப்பிட்டார்கள். ஆனால் இது காலப்போக்கில் கல்லுளி மங்கன் என மாற்றம் பெற்றது. இதற்கு அர்த்தம் என்னவென்றால் கல்லை உளியால் செதுக்கி தான் சிலை செய்வார்கள். இப்படி கல்லை செதுக்கக்கூடிய கூர்மையான உளியையே மங்கச்செய்யும் அளவுக்கு ( உடைய செய்யும்) அழுத்தம் நிறைந்த கல் போன்ற குணம் கொண்டவர்கள் என்று அர்த்தம். அதாவது நீங்கள் எவ்வளவு போராடினாலும் சிலர் அவர்களின் கருத்துக்களில் இருந்து மாறவே மாட்டார்கள் மாறாக அவர்களுடன் போராடும் நீங்கள் தான் சோர்வடையும் நிலை ஏற்படும். இப்படிப்பட்டவர்களை தான் கல்லுளி மங்கன் என குறிப்பிட்டுள்ளனர். இனிமேல் இந்த வார்த்தையை சரியான இடத்தில் அர்தத்தை அறிந்து பயன்படுத்துங்கள். #தெரிந்து கொள்வோம் #சிந்தனைக்கு
தெரிந்து கொள்வோம் - கல்லுளி மங்கன் அப்படின்னா என்ன தெரியுமா? கல்லுளி மங்கன் அப்படின்னா என்ன தெரியுமா? - ShareChat

More like this