கரூர் விஜய் பிரச்சாரத்தின் போது உயிரிழந்தவர்களின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய துணை முதலமைச்சர்
#அரசியல் #அஞ்சலி
தவெக கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 9 குழந்தைகள் உட்பட 39 பேர் பலியானவர்களுக்கு அஞ்சலி
#அஞ்சலி
#தெரிந்து கொள்வோம்
செப்டம்பத் 28
*உலக ரேபிஸ் தினம்.*
ரேபிஸ் என்பது ஒரு வகை வைரஸ். இது காடுகளில் வாழும் வவ்வால், நரி, ஓநாய் போன்ற விலங்குகளையும், வீட்டு விலங்கான நாயையும் எளிதில் தாக்கக் கூடியது.
ரேபிஸ் வைரஸ் தாக்கிய விலங்குகள், மனிதர்களை நேரடியாக கடிப்பதாலோ அல்லது அவ்விலங்குகளால் கடிக்கப்பட்ட பிற விலங்குகள் மூலமாகவோ பரவுகிறது.
கவனம் அவசியம்: வீட்டில் வளர்க்கும் விலங்குகளிடம் கவனமாகவும், தொடர் கண்காணிப்பிலும் இருக்க வேண்டும். அதன் செயல்பாடுகளில் மாற்றம் ஏற்படின், உடனே கால்நடை மருத்துவரை அணுக வேண்டும்.
ரேபிஸ் வைரஸ் தாக்கிய விலங்குகள் கடித்தவுடன், அந்த இடத்தில் சோப்பு நீரால் 10 முதல் 15 நிமிடம் நன்கு கழுவ வேண்டும். பின் டாக்டரிடம் காட்டி, சிகிச்சை மேற்கொண்டால் நோயிலிருந்து பாதுகாக்கலாம். இல்லாவிட்டால் இது உயிரையும் பறிக்கக் கூடியது.
*செப்டம்பர் 28,*
*பகத் சிங்*
விடுதலைப் போராட்ட வீரரும், புரட்சியாளருமான பகத் சிங் 1907ம் ஆண்டு செப்டம்பர் 28ம் தேதி பாகிஸ்தானிலுள்ள பங்கா என்ற கிராமத்தில் பிறந்தார்.
கோதுமை வயலில் துப்பாக்கி விளைய வைத்து வெள்ளையரை வேட்டையாட வேண்டும் என்று சிறு வயதிலேயே கனவு கண்டவர். ஜாலியன் வாலாபாக் படுகொலை நடந்தபோது இவருக்கு 12 வயது.
சைமன் குழு 1928-ல் இந்தியா வருவதை எதிர்த்து பஞ்சாப் சிங்கம் லாலா லஜபதிராய் அமைதிப் பேரணி நடத்தினார். துப்பாக்கியும் புத்தகங்களும் இவரது நெருங்கிய நண்பர்கள். இன்குலாப் ஜிந்தாபாத் (புரட்சி ஓங்குக) என்பது இவரது தாரக மந்திரம்.
இவர் சிறையில் இருந்தபோது ஏராளமான நூல்களைப் படித்தார். இவர் தி டோர் டு டெத், ஐடியல் ஆப் சோஷலிஸம் போன்ற நூல்களை எழுதினார்.
ஏராளமான இளைஞர்களுக்கு ஊக்கம் அளித்து விடுதலைப் போராட்ட இயக்கத்தில் பங்குபெறச் செய்த புரட்சியாளரான மாவீரன் பகத் சிங் 24-வது வயதில் (1931) ஆங்கில அரசால் தூக்கிலிடப்பட்டார்.
#தெரிந்து கொள்வோம் #வரலாறு #அரசியல்
*வரலாற்றில் இன்று*
செப்டம்பர் 28
1448 : முதலாம் கிறிஸ்டின் டென்மார்க் மன்னராக முடிசூடினார்.
1528 : புளோரிடாவில் இடம்பெற்ற சூறாவளியில் ஸ்பானிஷ் கடற்படைக் கப்பல் மூழ்கியதில் 380 பேர் உயிரிழந்தனர்.
1701 : மேரிலேண்டில் விவாகரத்து சட்டபூர்வமாக்கப்பட்டது.
1708 : ரஷ்யாவின் முதலாம் பீட்டர் ஸ்வீடன் படைகளை லெஸ்னயா என்ற இடத்தில் இடம்பெற்ற போரில் தோற்கடித்தார்.
1795 : யாழ்ப்பாணத்தை பிரிட்டிஷ் படைக் கைப்பற்றியது.
1844 : முதலாம் ஆஸ்கர் ஸ்வீடன் மன்னராக முடிசூடினார்.
1865 : பிரிட்டனில் முதல் முதல் எலிசபெத் கார்ட்டர் எனும் பெண்மணி மருத்துவப் படிப்பிற்கான சான்றிதழ் பெற்றார்.
1867 : அமெரிக்கா மிட்வே தீவைக் கைப்பற்றியது.
1867 : டொரோண்டோ ஒன்டாரியோவின் தலைநகரமாகியது.
1871 : அடிமைகளுக்கு பிறக்கவிருக்கும் பிள்ளைகள் அனைவருக்கும் விடுதலை அளிக்கும் தீர்மானத்தை பிரேஸில் நாடாளுமன்றம் நிறைவேற்றியது.
1895 : யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் தற்போதையக் கட்டிடம் கட்டப்பட்டது.
1917 : துருக்கி முனையில் நடந்த ரமாடி போரில் நான்காயிரத்திற்கும் அதிகமான துருக்கி வீரர்கள் கொல்லப்பட்டனர்.
1928 : அலெக்சாண்டர் பிளெமிங் பெனிசிலினைக் கண்டுபிடித்தார்.
1928 : கஞ்சாவைத் தடை செய்யும் சட்டத்தை இங்கிலாந்து நிறைவேற்றியது.
1939 : இரண்டாம் உலகப்போர் :- ஜெர்மனியும் சோவியத் ஒன்றியமும் போலந்து நாட்டை தமக்குள் பங்கு போட உடன்பட்டன.
இரண்டாம் உலகப்போர் :- போலந்து தலைநகர் வார்சாவா ஜெர்மனியிடம் வீழ்ந்தது.
1944 : இரண்டாம் உலகப் போர் :- சோவியத் படைகள் எஸ்டோனியாவில் இருந்த நாஜிக்களின் குளூகா வதைமுகாமை விடுவித்தன.
1965 : கியூபாவில் தங்க விருப்பமில்லாதவர்கள் நாட்டை விட்டு செல்லலாம் என பிடல் காஸ்ட்ரோ அறிவித்தார்.
1992 : பாகிஸ்தானின் பன்னாட்டு விமானம் ஒன்று நேபாளத்தின் மலையில் மோதியதை அடுத்து அதில் பயணம் செய்த 167 பேரும் உயிரிழந்தனர்.
1993 : கராகஸில் எரிவாயுக் குழாய் வெடித்ததில் 53 பேர் பலியானார்கள்.
1994 : பால்டிக் கடலில் சென்று கொண்டிருந்த எஸ்டோனியா என்ற பயணிகள் கப்பல் மூழ்கியதில் 852 பேர் உயிரிழந்தனர்.
2005 : ஐரோப்பிய ஒன்றியம் விடுதலைப் புலிகளைத் தடை செய்தது.
2009 : கினியின் ராணுவ அரசு ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது தாக்குதல் நடத்தியதில் 1,400 பேர் கொல்லப்பட்டனர்.
2016 : அமெரிக்கா மற்றும் கரீபியன் தீவுகளில் உண்டான புயலால் ஆயிரத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்தனர்.
2018 : இந்தோனேஷியாவின் சுலாவெசி தீவுகளில் இடம் பெற்ற 7.5 ரிக்டர் நிலநடுக்கம் சுனாமியை ஏற்படுத்தியதில் 4,340 பேர் உயிரிழந்தனர்.
10,679 பேர் காயமடைந்தனர்.
#தெரிந்து கொள்வோம் #வரலாறு
சிந்தித்து செயலாற்றுவோம்!
நாம் செய்யும் செயல்களின் பலன்கள் நமது ஆத்மாவில் பதிவாகின்றன.
எனவே
உயர்ந்த செயல்கள் மட்டும் செய்வோம்..
The results of our actions are recorded in our soul..
Therefore,
Let's do only noble deeds..!
*சிந்தித்து செயலாற்றுவோம்!*
#தெரிந்து கொள்வோம் #சிந்தனைக்கு
#தெரிந்து கொள்வோம் #இயற்கை
செப்டம்பர் 28
*பசுமை நுகர்வோர் தினம்.*
(Green Consumer Day)
பிளாஸ்டிக் பைகளைப் பயன்படுத்துவதால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுகிறது.
ஆகவே இயற்கையான பொருட்களையே பயன்படுத்த வேண்டும். நாம் பயன்படுத்தக்கூடிய பொருட்கள் மறுசுழற்சிக்கு உகந்ததாக இருக்க வேண்டும்.
உலகின் பல பகுதிகளில் பசுமை நுகர்வோர் அமைப்பு மக்களிடம் பசுமையைப் பாதுகாக்க விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது. செப்டம்பர் 28ஐ பசுமை நுகர்வோர் தினமாக கொண்டாடி வருகிறது.
*முயற்சி* உடையவரின் வளர்ச்சியைத் தடுக்க முடியாது. புதைத்தாலும் மரமாக எழுந்து நிற்பார்கள்.
*விடாமுயற்சியைக்* கடலிடம் கற்றுக் கொள்ளவும், சுறுசுறுப்பை எறும்பிடம் கற்றுக் கொள்ளவும்._
*புன்னகையைப்* பூக்களிடம் கற்றுக்கொள்ளவும், சேமிப்பைத் தேனீக்களிடமும்
*பொறுமையை* பூமியிடமும்,
கருணையைக் கடவுளிடமும் கற்றுக் கொள்ளவும்
*துணிச்சலுடன்* எப்போது செயல்பட முடிவு எடுக்கிறோமோ, அப்போதே வாழ்க்கையின் பாதி கஷ்டங்களைத் தாண்டி விட்டோம் என்று அர்த்தம்
*படைத்தவனுக்கு* எல்லாம் தெரியும் என்று நீ நினைத்து விடாதே. நீ செய்யும் செயலில் தான் துணையிருப்பாரே தவிர, நீ எதுவும் செய்யாமல் இருந்தால் துணை இருக்க மாட்டார்
*முயற்சி செய்* உறுதுணையாய் நிற்பார். ஆகையால் முயற்சி செய்யுங்கள்
*வெற்றி நிச்சயம்*
#சிந்தனைக்கு #தெரிந்து கொள்வோம் #முயற்சி #முயற்சி
*இந்தியாவுக்கு ஜாக்பாட்*
அந்தமான் கடலுக்கு அடியில் இந்தியாவுக்கு கிடைத்த ஜாக்பாட்.
இயற்கை எரிவாயு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதாக, மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் புரி அறிவிப்பு.
#தெரிந்து கொள்வோம்
*இன்று கனமழைக்கு வாய்ப்பு*
தமிழ்நாட்டில் கோவை, நீலகிரி, தேனி, தென்காசி ஆகிய 4 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்வதற்கு வாய்ப்பு.
- சென்னை வானிலை ஆய்வு மையம்
#தெரிந்து கொள்வோம் #மழை முன் எச்சரிக்கை #மழை முன் எச்சரிக்கை