ShareChat
click to see wallet page
கடந்த வாரம் வாட்டர்மெலன் ஸ்டார் திவாகர் எவிக்ஷ்ட் ஆன நிலையில் இந்த வாரம் கெமி வெளியேற்றப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படியான நிலையில் போட்டியாளர் பிரஜின் மற்றும் விஜய் சேதுபதி இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது போட்டியாளர்களை சரியாக நடத்துகிறாரா விஜய் சேதுபதி ? கமலைத் தொடர்ந்து கடந்த இரு ஆண்டுகளாக பிக் நிகழ்ச்சியை விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வருகிறார். கடந்த சீசனின் விஜய் சேதுபதி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய விதம் பல விமர்சனங்களுக்கு உள்ளானது. ஆனால் இந்த முறை போட்டியாளர்களிடம் அவர் கடுமையாக இருந்தும் அவ்வப்போது நகைச்சுவாகவும் டீல் செய்து வருகிறார். ஆனால் போட்டியாளர்களை அவர் நடத்தும் விதமும் பயன்படுத்தும் சில வார்த்தைகளும் விமர்சனத்திற்கு உள்ளாகின. 'இதை செய்ய வக்கு இல்ல' என அவர் அடிக்கடி போட்டியாளர்களிடம் பேசி வருகிறார். அதே போல் தான் பேசும் போது போட்டியாளர்களை எழுந்து நிற்க சொல்வது பள்ளி குழந்தைகளை நடத்துவது போல் இருப்பதாக சிலர் விமர்சனம் தெரிவித்தனர். பிரஜின் விஜய் சேதுபதி வாக்குவாதம் பிக் நிகழ்ச்சியில் வைல்டு கார்டு எண்ட்ரி மூலம் வந்தவர்கள் பிரஜின் மற்றும் அவரது மனைவி சாண்ட்ரா. பிக் கொடுக்கும் டாஸ்க்கில் பிரஜின் மற்றும் சாண்ட்ரா இருவரும் சேர்ந்து விளையாடுவதாக விக்கல்ஸ் விக்ரம் குற்றம்சாட்டினார். அதற்கு பிரஜின் 'வேண்டுமானால் நீங்களும் உங்கள் மனைவியை கூட்டி வந்து விளையாடுங்கள்.பிக் கதவை நான் திறந்துவிடச் சொல்கிறேன்' என்று சொன்னார். இந்த வார எபிசோடில் பிரஜின் பேசியதை விதத்தை கண்டித்தார். ஆனால் பிரஜின் 'என்னை சண்டை போடலாம் என்று சொல்கிறீர்கள் ஆனால் தப்பும் சொல்கிறீர்கள்' என பேசினார் . தொடர்ந்து தான் ' கேள்வியை நான் சத்தமாக கேட்டால் என்னை தப்பு சொல்கிறீர்கள் ' பதில் சொல்ல முடியாமல் திணறிய விஜய் சேதுபதி பிரஜின் தனது வாதங்களை முன்வைக்க அவரை மடக்க சரியான பாயிண்ட்ஸ் இல்லாமல் விஜய் சேதுபதி திணறினார். தனது கோபத்தை மறைக்க கோட்டை கழற்றுவது , நாற்காலியை தூக்கி எறிவது போன்ற செயல்களை செய்தார். பின் பிரஜினை பேச விடாமல் நாளை சந்திக்கலாம் என்று சொல்லிவிட்டு நிகழ்ச்சியை விட்டு எஸ்கேப் ஆனார். இதுவரை பிக் நிகழ்ச்சியில் விஜய் சேதுபதி சொல்வது தான் சட்டம் என்றிருந்த நிலை மாறி அவரையே எதிர்த்து துணிச்சலாக பேசியுள்ளார் பிரஜின் #👁️BB9: இந்த வாரம் வெளியேறுவது இவரா?🧐 #prajin sandra #👁️BB9: கலகலப்பான பிக்பாஸ் வீடு😍
👁️BB9: இந்த வாரம் வெளியேறுவது இவரா?🧐 - ಶಲಿ Bigg Boss 9 : @ಹ6ir6 @ಹLLT தப்பாஃபதில் சொல்ல முடியாமல் திணறிய விஜய் சேதுபதி.மாஸ் காட்டிய பிரஜின் ಶಲಿ Bigg Boss 9 : @ಹ6ir6 @ಹLLT தப்பாஃபதில் சொல்ல முடியாமல் திணறிய விஜய் சேதுபதி.மாஸ் காட்டிய பிரஜின் - ShareChat

More like this