ShareChat
click to see wallet page
*வரலாற்றில் இன்று* *05 டிசம்பர் 2025-வெள்ளி* *==========================* 1082 : பார்சிலோனா மன்னர் இரண்டாம் ரமோன் பேரிங்கர் கொல்லப்பட்டார். 1360 : பிரெஞ்சு நாணயம் பிராங்க் அறிமுகப்படுத்தப்பட்டது. 1496 : போர்ச்சுகல் மன்னர் முதலாம் இமானுவெல் யூதர்கள் அனைவரும் கிறிஸ்தவத்திற்கு மதம் மாறுமாறும் அல்லது நாட்டை விட்டு வெளியேறுமாறு பணித்தார். 1560 : ஒன்பதாம் சார்லஸ் பிரான்ஸின் மன்னராக முடிசூடினார். 1746 : ஸ்பெயின் ஆட்சிக்கு எதிராக ஜெனீவாவில் கிளர்ச்சி ஆரம்பமானது. 1766 : லண்டன், உலகின் மிகப்பெரிய ஏலக்கம்பெனி கிரிஸ்டியின் முதல் விற்பனை நடந்தது. 1786 : கிழக்கிந்தியக் கம்பெனியைச் சேர்ந்த வில்லியம் பெட்ரி என்பவரால் முதல் வானிலை ஆராய்ச்சி நிலையம் சென்னை நுங்கம்பாக்கத்தில் நிறுவப்பட்டது. 1824 : கிட்டூர் கோட்டையை பிரிட்டிஷ் படைக் கைப்பற்றியது. இப்போரில் ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டனர். 1837 : இலங்கையில் முதலாவது சர்க்கரை தொழிற்சாலை தூம்பறை என்ற இடத்தில் ஆரம்பிக்கப்பட்டது. 1839 : இந்தியாவில் பிரிட்டிஷ் அஞ்சல் துறை ஒரே சீரான அஞ்சல் கட்டணம் வசூலிக்கும் முறையைப் பின்பற்ற ஆரம்பித்தது. 1848 : கலிபோர்னியாவில் பெருமளவு தங்கம் கண்டுபிடிக்கப்பட்டதாக அமெரிக்க ஜனாதிபதி ஜேம்ஸ் போக் அறிவித்தார். 1863 : இங்கிலாந்தில் கால்பந்தாட்ட விதிமுறைகள் வெளியிடப்பட்டன. 1896 : இந்தியாவின் மிகப்பெரிய நூலகங்களில் ஒன்றான கன்னிமாரா நூலகம் சென்னையில் திறக்கப்பட்டது. 1922 : பிபிசியில் முதன்முதல் குழந்தைகளுக்கான நிகழ்ச்சி ஒலிபரப்பப்பட்டது. 1924 : இத்தாலியில் பத்திரிகை தணிக்கை முறை அமலுக்கு வந்தது. 1931 : மாஸ்கோவில் கிறிஸ்து மீட்பர் பேராலயம் ஸ்டாலின் உத்தரவின் பேரில் இடிக்கப்பட்டது. 1933 : அமெரிக்காவில் மது விலக்கு ரத்து செய்யப்பட்டது. 1934 : இத்தாலிப் படையினர் அபிசீனியாவின் வால்வால் என்ற நகரைத் தாக்கினர். நான்கு நாட்களுக்குப் பின்னர் நகரைக் கைப்பற்றினர். 1941 : இரண்டாம் உலகப் போர் :- பின்லாந்து, ஹங்கேரி, ருமேனியா நாடுகளின் மீது பிரிட்டன் போரை அறிவித்தது. 1943 : கல்கத்தாவில் ஜப்பான் விமானங்கள் குண்டு வீசின. 1945 : பெர்முடா முக்கோணத்தில் 14 வீரர்களுடன் ஐந்து குண்டுவீச்சு விமானங்கள் மாயமாக மறைந்தன. தேடிச் சென்ற விமானமும் 20 நிமிடங்களில் மறைந்தது. 1952 : லண்டனில் குளிர் மேக மூட்டம் சூழ்ந்து காற்று மாசு அடைந்ததால் இருவாரங்களில் மட்டும் 12 ஆயிரம் பேர் உயிரிழந்தனர். 1954 : பெர்முடாவில் ஒரு எண்ணெய்க் கப்பல் 23 ஊழியர்களுடன் மறைந்தது. 1957 : இந்தோனேஷியாவிலிருந்து 3,26,000 டச்சு மக்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டனர். 1958 : பிரிட்டனில் முதன்முதலாக S.T.D. தொலைபேசி தொடர்பு வசதி அமைக்கப்பட்டது. 1969 : மை லாய் படுகொலைகள் தொடர்பான தகவல்களை லைஃப் இதழ் வெளியிட்டது. 1978 : சோவியத் ஒன்றியம் ஆப்கானிஸ்தானுடன் நட்புறவு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. 1980 : பேங்க் ஆஃப் கனடாவின் நாணய அருங்காட்சியகம் திறக்கப்பட்டது. 1982 : பிரிட்டன், தொலைக்காட்சியில் முதன் முதல் முப்பரிமாணப் படம் ஒளிபரப்பப்பட்டது. 1983 : அர்ஜென்டினாவில் ராணுவ ஆட்சி கலைக்கப்பட்டது. 1988 : கேமரூனில் உயர்நிலைப் பள்ளியில் திடீரென கட்டிடம் இடிந்து விழுப்போகிறது எனப் புரளி கிளம்ப, மாணவர்கள் வெளியே ஓடி வரும் போது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 60 பேர் உயிரிழந்தனர். 1995 : இலங்கைப் போர் :- யாழ்ப்பாணத்தை முழுமையாக விடுதலைப் புலிகளிடம் இருந்து தாம் கைப்பற்றியதாக இலங்கை அரசு அறிவித்தது. 2003 : இந்திய விண்வெளி ஆராய்ச்சிக் கழகம் குளிர் திரவ ஏவுகணையை வெற்றிகரமாக சோதித்திருப்பதாக அறிவித்தது. 2006 : பிஜியில் ராணுவத் தளபதி பிராங்க் பைனிமராம ராணுவப் புரட்சி மூலம் அரசைக் கைப்பற்றினார். மத்திய அரசில் நிலக்கரித் துறை அமைச்சராக இருந்த சிபு சோரன் 1994 ல் அவரது உதவியாளரைக் கொலை செய்த குற்றத்திற்காக ஆயுள் தண்டனை பெற்றார். 2013 : ஏமன், சனா நகரில் போராளிகள் தாக்கியதில் 56 பேர் உயிரிழந்தனர். 200 பேர் காயமடைந்தனர். 2017 : 2014 குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளில் தடை செய்யப்பட்ட போதைப் பொருள் பயன்படுத்திய குற்றத்திற்காக 2018 குளிர்கால ஒலிம்பிக்கில் போட்டியிட ரஷ்யாவுக்கு பன்னாட்டு ஒலிம்பிக் குழு தடை விதித்தது. #தெரிந்து கொள்வோம் #🩺💊 புதிய தாக தெரிந்து கொள்வோம்💊🩺 #😎வரலாற்றில் இன்று📰
தெரிந்து கொள்வோம் - 350 10 २० P N 320 330 340  ೦ % 310 8 % ನ n UIIITTIIU &क 02 081 081 021 091 / 350 10 २० P N 320 330 340  ೦ % 310 8 % ನ n UIIITTIIU &क 02 081 081 021 091 / - ShareChat

More like this