ShareChat
click to see wallet page
டிவியில் ஒரு விளம்பர படத்தை பார்த்தேன். அதில் கடைகளில் வாங்கும் காய்கறி, பழங்களில் உள்ள பூச்சி கொல்லி மருந்துகளை கழுவ நீர் போதாது. அதற்கு பதிலாக எங்கள் தயாரிப்பை பயன்படுத்தி கழுவி பூச்சி கொல்லிகளை தவிர்த்து கொள்ளுங்கள் என்கிறார்கள். இவர்கள் விற்பனை செய்வதும் பல கெமிக்கல்கள் சேர்ந்த கலவைதானே..? இது மட்டும் உடலுக்கு கெடுதல் இல்லையா..? இதை பார்த்த போது ஒரு கதை நினைவுக்கு வந்தது. ஒரு விஞ்ஞானி தன் புதிய கண்டு பிடிப்பைபற்றி தன் தோட்டக்காரனிடம் சொன்னாராம்..! "நான் கண்டு பிடித்த இந்த திரவம் எதில் அடைத்தாலும் அதை கரைத்து விடும்! " யோசித்த தோட்டக்காரனோ "பிறகு எதில் இந்த திரவத்தை அடைத்து விற்பனை செய்வீர்கள்? " என்று கேட்டதும் விஞ்ஞானியின் தலை சுற்றி விட்டதாம். ஒரு கெமிக்கல்லுக்கு இன்னொரு கெமிக்கல்லா தீர்வு..? #என்னமோ போடா மாதவா.? #🤣 லொள்ளு #🤔தெரிந்து கொள்வோம்
🤣 லொள்ளு - Humans'ah da neenga ellam, Humans'ah da neenga ellam, - ShareChat

More like this