இந்தக் குப்பை இன்றுதான் பதில் சொல்ல தெரியாத ஒருவர் மூலம் கைக்கு வந்தது.
வங்கிக் கடனுக்கான படிவம்கூட இவ்வளவு சிக்கலாக இருக்காது!
இதை சரியாக பூர்த்தி செய்வது எப்படி என்று சரியாகப் புரியவில்லை!
நாம் புரிந்தவரை நிரப்பினால் ஏற்றுக் கொள்ளப் படுமா என்றும் தெரியவில்லை.
அவர்கள் கொடுத்துள்ள எண்ணுக்கெல்லாம் அழைத்து அவர்கள் சொல்வதையெல்லாம் புரிந்து நிரப்ப முடியும் என்று தெரிய வில்லை!
பிறர்க்கு ஆலோசனை சொல்லும் நமக்கே இந்த நிலை என்றால் பக்கத்து தோட்டத்தில் வயதான அப்பாவிகள் இருவர் மட்டும் இருக்கிறார்கள்....
அவர்களுக்குப் படிக்கக்கூட தெரியாது!
அவர்கள் என்ன செய்வார்கள்?
வாக்காளர் பட்டியலைப் பார்த்து சிலிப் எழுதிக் கொடுத்தால் வாக்குச்சாவடிக்குப் போய் ஓட்டுப் போடுவதைத் தவிர வேறெந்த நிபந்தனையும் இல்லாததால் முந்தைய தேர்தல்களில் வாக்களித்த நமது, நமது பெற்றோரது ஆவணங்களை எதற்காக பாதுகாப்பாக வைத்துக்கொண்டு இருக்கப் போகிறோம்?
அந்த ஆவணங்கள் அனைத்தும் தேர்தல் ஆணையத்திடம்தானே நிச்சயம் இருக்கும்?
அப்படியிருக்க எதனால் மக்களுக்கு இந்த சித்திரவதை?
படிவத்துடன் வருபவர் வாக்காளர் பற்றிய விபரங்களை வாய்மொழியாகக் கேட்டு பதிவுசெய்துகொண்டு போட்டோவும் எடுத்துக்கொண்டு செல்வதைத் தவிர ஐயங்கள் இருந்தால் அவர்களிடம் உள்ள ஆவணங்களைப் பார்த்து உறுதிசெய்துகொள்வது தவிர வேறு எத்தகைய செயல்பாடும் மக்களுக்கும் ஜனநாயகத்துக்கும் எதிரான நயவஞ்சகச் செயலே!
இது தேர்தல்கள் மேல் உள்ள கொஞ்சநஞ்ச நம்பிக்கையையும் கெடுத்து தில்லுமுல்லு செய்து மக்களைக் குழப்பி சர்வாதிகாரத்தை ஏற்கச் செய்யும் சதி என்றே நினைக்கிறேன்!
யாரை எந்தக் கட்சியை நம்புவது என்று தெரியாமல் விழித்துக்கொண்டு நடுத்தெருவில் நிற்கிறோம்!
அதுதான் இன்றைய பெரும்பாலான கட்சிகள் மக்களுக்குக் காட்டும் பாதை! #👨மோடி அரசாங்கம்

