ஆமா சரியா சொன்னா!!!
சீமான் முதல் முதலாக அரசியல் மேடை ஏறியது எனக்கு தெரிந்து 1992... கம்யூனிச மேடை, திராவிட மேடை, பாமக மேடை, விசிக மேடை.. தனக்கு கிடைத்த இடங்கள் எல்லாம் அரசியல் பேசினார்..
2008 ஆம் ஆண்டு கனடாவில் கைது செய்யப்பட்டு நாடு கடத்தப்பட்டார்...
2008 ஆம் ஆண்டு முதல் 2011 ஆம் ஆண்டு வரை.. தொடர்ச்சியாக கலைஞர் கருணாநிதி கைது செய்யப்பட்டு தனிமை சிறையில் அடைக்கப்பட்டார்..
2009 ஆம் ஆண்டு .. சி.ப.ஆதித்தனார் அவர்கள் விட்டுச்சென்ற நாம் தமிழர் இயக்கத்தை எடுத்து நடத்த துவங்கினார்... பிறகு 2010 ல் கட்சியாக மாற்றினார்.. அவ்வளவு அனுபவம் இருந்தும் கூட 2010 முதல் 16 வரை தேர்தலில் போட்டியிடவில்லை.. தொடர்ந்து மக்களை சந்தித்து மக்களின் பிரச்சினைகளை அணுகி அவர்களுடனேயே நின்றார்கள்...
2016ல் ஏற்கனவே ஆண்ட கட்சிகளான திமுக அதிமுக பாஜக காங்கிரஸ் அவர்களோடு எக்காரணமும் கூட்டணி இல்லை என்று நிலைப்பாட்டோடு முதல் தேர்தலை சந்தித்தார்கள் அதாவது கட்சி ஆரம்பித்து ஏழு ஆண்டுகள் கழித்து..
இன்று வரை 234 வழக்கு அவர் மீது இருக்கிறது.. அதில் ஆறு வழக்கு அவதூறாக பேசியதாக போடப்பட்ட வழக்கு மீதம் அத்தனையும் மக்களுக்கான போராட்டக் களங்களில் போடப்பட்ட வழக்குகள்... எட்டு வழி சாலைக்கு போராடிய போது மீண்டும் 15 நாள் சிறை வைக்கப்பட்டார்..
இந்த காலங்களில் தான் அவர் திரைப்படத்தில் நடிக்கவும் செய்தார் திரைப்படம் இயக்கவும் செய்தார்...
அவர் கட்சி துவங்கும் போது வெறும் 30 பேர் தான் இருந்தார்கள் தொடர்ச்சியாக இந்த தமிழ் தேசிய அரசியலை பேசி பேசி இன்று 36 லட்சம் வாக்குகளை பெற்று வாக்குக்கு பணம் கொடுக்காமல் ஒரு கட்சி அங்கீகரிக்கப்பட்ட கட்சியாகவே வளர முடியும் என்று நிரூபித்துக் காட்டியிருக்கிறார்...
ஆமாம்... சீமான் தன்னுடைய 50 வயது வரை சொகுசாக வாழ்ந்து விட்டு பல்லாயிரம் கோடி சொத்து சேர்த்து விட்டு .. எந்த அரசியல் புரிதலும் இல்லாமல்... பல லட்சம் ரசிகர்களை தன்னுடைய தொண்டர்களாக மாற்றி தன்னுடைய முகத்திற்காக வாக்கு செலுத்துங்கள் என்று வந்து நிற்கிறார்...
ஆமாம் அவருக்கு அனுபவம் இல்லை தான்...
நாம் தமிழர் கட்சி என்ன புடுங்கியது...இதோ இதை தான்
ஒரு .. அதிகாரம் இல்லாத கட்சி
8 வழிச்சாலையை தடுத்து நிறுத்தி இருக்கு...
கடல்ல பேனா சிலை வைக்க விடாமல் தடுத்து இருக்கு...
வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்தை அபகரிக்க இருந்த தனியார் நிறுவனத்தை வழக்கு போட்டு வெளியேற்றியது...
கடல் கழிமுக பகுதியில் கட்டவிருந்த அதானியின் காட்டுப்பள்ளி துறைமுகத்தை தடுத்து சென்னையையே காப்பாற்றி இருக்கு
800 ஆண்டுகளுக்கு பிறகு தமிழை கோவில்களில் அறியனை ஏற்றி இருக்கு...
தமிழ்நாட்டிலேயே அதிக குருதி கொடை அளித்த கட்சி..
சுற்றுச்சூழல் பாசறை பல லட்சம் மரக்கன்றுகளை நட்டு பராமரித்து வருகிறது...
அவர்கள் சார்பாக வென்ற கவுன்சிலர்கள் தமிழ்நாட்டின் சிறந்த கவுன்சிலர்கள் விருதை வென்று இருக்கிறார்கள்...
பல லட்சம் ரூபாய் லஞ்ச பணத்தை கையூட்டு ஊழல் ஒழிப்பு பாசறை சார்பாக திரும்ப பெற்று கொடுத்து இருக்கிறார்கள்...
ஒரு ரூபாய் பணம் கொடுக்காமல் அங்கீகரிக்கப்பட்ட கட்சியாக மாற்றி சாமானியர்களும் அரசியலில் வெல்லலாம் என்று நிரூபித்து காட்டி இருக்கிறார்கள்...
பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு என்று பேசிய இடத்தில் 50 சதவீதம் ஆண்களுக்கு இணையாக வேட்பாளர் வாய்ப்பை தருகிறார்கள்...
இஸ்லாமிய, கிருத்துவர்கள் சிறுபான்மை இல்லை அவர்கள் தமிழர்கள் பெரும்பாண்மை இன மக்கள் என்று கூறியதோடு தேர்தல் மற்றும் கட்சி கட்டமைப்பில் அதிக முக்கியத்துவம் தருகிறார்கள்...
ஆதித்தமிழர்களுக்கு பொதுத்தொகுதியில் வாய்ப்பு வழங்குகிறார்கள்...
தற்சார்பை மையப்படுத்திய சூழலியல் அரசியல் விழிப்புணர்வை ஏற்படுத்துகிறார்கள்...
தேவேந்திர குல வேளாளர் பட்டியல் இன வெளியேற்றத்திற்கு தொடர்ந்து குரல் கொடுக்கிறார்..
இஸ்லாமிய மக்களை அச்சுறுத்தும் நோக்கில் திட்டமிட்டு கொண்டு வரப்பட்ட CAA,NRC திட்டங்களை எதிர்த்து அதிகமாக போராடி வழக்கு வாங்கிய கட்சி நாம் தமிழர் கட்சி தான்...
தொடர்ந்து சாதிவாரி கணக்கெடுப்பு அவசியத்தை பேசி அழுத்தம் கொடுக்கிறார்கள்..
பஞ்சமி நில மீட்பு உரிமை பேசுகிறார்கள்
ஆடு மாடுகளுக்கான மேய்ச்சல் நில உரிமை பேசுகிறார்கள்
உலக உயிர்களின் அவசியத்தேவையை உணர்ந்து காடுகளின் அவசியத்தை உணர்த்த மரங்களின் மாநாடு நடத்துகிறார்கள்
ஆசிரியர் போராட்டம், மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மைப் பணியாளர்கள், TNPSC குளறுபடிக்கு எதிரான போராட்டம் என்று எல்லா போராட்ட களத்திலும் முதன்மையாய் நிற்கிறார்கள்...
தமிழர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று போராட்டம்
வெளி மாநிலத்தவர் அதீத வருகையால் தமிழர்கள் தங்களுடைய வேலைவாய்ப்பு மட்டும் இல்லாமல் தன்னுடைய அரசியல் அதிகாரத்தையே இழக்கும் அபாயம் ஏற்படுகிறது எனவே INNER LINE PERMIT வழங்க வேண்டும் என்று போராடுகிறார்கள்..
நாம் தமிழர் பிள்ளைகள், தலைமை சீமான் உட்பட எந்த வித எதிர்பார்ப்பும் இல்லாமல் மக்களுக்காக போராடி வழக்கு வாங்கி அரசு வேலைக்கும் வெளிநாடு வேலைக்கும் கூட போக முடியாமல் தங்களுடைய வாழ்க்கையையே தியாகம் செய்து களத்தில் நிற்கிறார்கள்...
இன்னும் இன்னும் சொல்லிகிட்டே போகலாம்...
நன்றி 🙏
#சீமான்
#🙋♂ நாம் தமிழர் கட்சி #seeman speech #seeman mass speech #புரட்சியாளன் சீமான் #🐅🐅seeman🐅🐅NTK
