முதல் முதல்ல பாத்த மலையாள படம் #தௌத்யம்.
மோகன்லால் காதலிக்கிற பெண்ணை, சுரேஷ்கோபி திருட்டுத்தனமா ஏமாத்தி கல்யாணம் பண்றாரு. மோகன்லால் ஒரு கமாண்டோ. முக்கியமான பைல் ஒன்றை எடுத்து கொண்டு ஹேலிகாப்டரில் செல்லும் சுரேஷ்கோபி, தீவிரவாதிகள் நடமாட்டம் அதிகமுள்ள காட்டுப்பகுதியில் ஹேலிகாப்டர் விபத்தாகி விழுந்து விடுகிறார். அவரை தீவிரவாதிகளின் தலைவனான பாபு ஆண்டணி சிறைபிடித்து வைத்திருக்கிறான். அதற்கு முன்பாகவே அந்த பைலை சுரேஷ்கோபி மறைத்து வைத்திருப்பார்.
அவரை மீட்க மோகன்லாலை நியமிப்பார்கள். ஹீரோயின் வந்து தனியாக அவரை சந்தித்து, என் புருசனை காப்பாத்துன்னு கெஞ்சுவாள். சுரேஷ்கோபியை உயிரோடு கொண்டு வருகிறேன்னு தனது டீமுடன் கிளம்பும் மோகன்லால், கடைசியில் அதை செய்தாரா என்பதுதான் கதை. மலையாளம் என்றாலே செக்ஸ்படம்தான் என்ற நினைப்பை முற்றாக தகர்த்தது இந்த படம்தான்.
#🤔தெரிந்து கொள்வோம்
