மன்னன் மிக அழகான ஒரு வைரத்தைத் தன்னிடம் வைத்திருந்தான். அதற்கு இணை ஏதும் இல்லை என்கின்ற பெருமை அவனுக்கு இருந்தது. அந்த வைரத்தில் ஒருமுறை ஓர் ஆழமான விரிசல் ஏற்பட்டது.*_
_அவன் தேர்ந்த வைர_ _வியாபாரிகளை எல்லாம் அழைத்து அதிலிருக்கின்ற அந்தக்_ _குறையைப் போக்க முடியுமா என்று கேட்டான்._ _ஆனால்_
_எல்லோரும் கை விரித்து_ _விட்டார்கள்._
_*சில நாட்கள் கழித்து வைர வேலை செய்யும் ஒரு விற்பன்னர் அவரிடம் வந்தார். அந்த வைரத்தை வாங்கி அதில் மிகவும் நுணுக்கமாக அவர் செதுக்க ஆரம்பித்தார். அந்த வைரத்தை நிதானமாகச் செதுக்கி ஒரு ரோஜா மொட்டாக அவர் மாற்றினார். அந்த விரிசலைத் தண்டாக்கினார். தண்டின் மீது மலரத் துடிக்கின்ற ரோஜா மொட்டைப் போல அவ் வைரம் காட்சியளித்தது.*_
_முன்னைக் காட்டிலும் இப்போது அது அழகாக இருந்தது. ஆனால் இந்தக் குறையைப் போக்க அந்த வைரம் சற்று கனம் இழக்க நேர்ந்தாக வேண்டியிருந்தது._
_*இதே தான் வாழ்க்கையிலும்.*_
_*தலைகணத்துடன் வாழும்*_
_*மனிதர்கள் தங்கள்*_ _*குறைகளை*_
_*செதுக்கினால் வாழ்வில்*_ _*அவர்களாலும் நல்ல முறையில் வாழ முடியும்.*_ #கதை சொள்ளரோம் #பொழுது போக்கு #👪 cute family members 👪 #உற்சாக பானம் #உற்சாக பானம்#

