ShareChat
click to see wallet page
_*ஒரு சாமியாரின் ஆசிரமத்துக்கு அவர் நண்பர் ஒருவர் வந்தார்..!!*_ _அவருக்கு உணவு கொடுக்க விரும்பிய *"சாமியார்",* தான் வளர்த்த குரங்கைப் பார்த்து இலை போடு என்றார்.._ _*குரங்கு வாழை இலை எடுத்து வந்து போட்டது..*_ _உடனே சாமியார் தன் கையில் வைத்திருந்த பிரம்பால் குரங்கின் தலையில் ஓங்கி அடித்து சாதம் போடு என்றார்..!!_ _*குரங்கு சாதம் கொண்டு வந்து பரிமாறியது..*_ _திரும்பவும் தலையில் அடித்தார்..!!_ _அவர் சொன்னதை எல்லாம் குரங்கு சரியாகச் செய்தாலும் அடி விழுந்து கொண்டே இருந்தது..._ _*நண்பருக்கு மனம் பொறுக்கவில்லை..*_ _சாமி குரங்கு தான் நீங்கள் சொன்னதை எல்லாம் சரியாகச் செய்கின்றதே..??_ _*அந்த வாயில்லாச் ஜீவனை ஏன் அடித்துத் துன்புறுத்துகிறீர்கள் என்று கேட்டார்..!!*_ _சாமியார் எதுவும் பேசவில்லை.._ _*சிரித்து விட்டுப் பிரம்பை தானிருந்த பாயின் கீழே ஒளித்து வைத்தார்...*_ _சற்று நேரத்தில் குரங்கு தாவிப் பாய்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தவரின் தோளில் ஏறி இருந்தது.._ _*காதைப் பிடித்து இழுத்தது..*_ _தலை மயிரைப் பிரித்துப் பேன் பார்த்தது..._ _*சாப்பிட்ட இலையில் வாலைத் தொங்க விட்டு ஆட்டியது..*_ _உடனே சாமியார் நண்பர்,_ _ஐயோ சாமி இந்தக் குரங்கின் தொல்லை தாங்க முடியவில்லை அடி போடுங்கள் என்றார் நண்பர்..!!!_ _*உடனே சாமியார் பிரம்பை எடுத்துக் குரங்கின் தலையில் அடித்தார்..*_ _அது போய் ஒரு மூலையில் அமைதியாக இருந்தது.._ _*உடனே*_ _*சாமியார் சொன்னார்...*_ _இந்தக் குரங்கைப்_ _போலத் தான்_ _மனித_ _மனங்களும்..._ _*நாம் சொன்னதை எல்லாம் மனம் கேட்டு நடக்கின்றதே என்று விட்டு விடக் கூடாது..!!*_ _*ஜபம், பூஜை, தியானம், தவவிரதங்கள் என்னும் பிரம்புகளால் தொடர்ந்து தட்டிக் கொண்டே இருக்க வேண்டும்..!!*_ _சற்று ஓய்வு கொடுத்தாலும் மனிதனின் மனம் தாவத் தொடங்கி விடும் என்றார்..!_ #🩺💊 புதிய தாக தெரிந்து கொள்வோம்💊🩺
🩺💊 புதிய தாக தெரிந்து கொள்வோம்💊🩺 - ७०७ ஒரு குங்கு ७०७ ஒரு குங்கு - ShareChat

More like this