#வரலாற்றில் இன்று என்றும் மறக்க முடியாத நினைவுகள்
நவம்பர் 18, 2002*
சென்னை புறநகர் பேருந்து நிலையம் கோயம்பேட்டில் திறக்கப்பட்ட நாள்.
சென்னை புறநகர் பேருந்து நிலையம் சென்னை மாநகரின் கோயம்பேடு பகுதியில் அமைந்துள்ள ஒரு மிகப்பெரிய பேருந்து நிலையம்.
37 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இப்பேருந்து நிலையம் ஆசியாவிலேயே மிகப்பெரியதாகும்.
ஐ.எஸ்.ஓ 9001:2000 தரச் சான்றிதழும் இப்பேருந்து நிலையம் பெற்றுள்ளது. இப்பேருந்து நிலையம் 103 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டது.
ஒரே சமயத்தில் 270 பேருந்துகளையும், நாளொன்றுக்கு 2000 பேருந்துகளையும் 2 லட்சம் பயணிகளையும் கையாளும் திறன் கொண்டது.
தி. மு. க. ஆட்சியில் கட்டுமானப் பணிகள் துவங்கப்பட்ட இப்பேருந்து நிலையம் மருத்துவமனையாக மாற்றப்படாமல் 2002 ம் ஆண்டு நவம்பர் மாதம் 18 ம் நாளன்று அப்போதைய தமிழக முதலமைச்சர், ஜெயலலிதாவால் திறந்து வைக்கப்பட்டது.
இப்பேருந்து நிலையத்துக்கு தற்போது புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர் பேருந்து நிலையம் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
![வரலாற்றில் இன்று என்றும் மறக்க முடியாத நினைவுகள் - சென்னைப் புறநகா பேருந்து நிலையம் மான்புமகு தட்ழ முகலமைச்ச் பாகவல் 006 109 మIu ~uగ" ITL LTnlta] சென்னைப் புறநகா பேருந்து நிலையம் மான்புமகு தட்ழ முகலமைச்ச் பாகவல் 006 109 మIu ~uగ" ITL LTnlta] - ShareChat வரலாற்றில் இன்று என்றும் மறக்க முடியாத நினைவுகள் - சென்னைப் புறநகா பேருந்து நிலையம் மான்புமகு தட்ழ முகலமைச்ச் பாகவல் 006 109 మIu ~uగ" ITL LTnlta] சென்னைப் புறநகா பேருந்து நிலையம் மான்புமகு தட்ழ முகலமைச்ச் பாகவல் 006 109 మIu ~uగ" ITL LTnlta] - ShareChat](https://cdn4.sharechat.com/bd5223f_s1w/compressed_gm_40_img_880265_27d71c02_1763438878962_sc.jpg?tenant=sc&referrer=pwa-sharechat-service&f=962_sc.jpg)
