SIR நடைமுறையை புறக்கணிக்கும் வருவாய்த்துறை, ஊழியர்கள்- அதிகாரகள் கூட்டமைப்பின் முடிவை வரவேற்போம்!
நம் ஓட்டுரிமை மற்றும் குடியுரிமையை பறிக்க SIR வடிவில் வரும் NRC ஐ புறக்கணிப்போம்!
பத்திரிகை செய்தி
புரட்சிகர மக்கள் அதிகாரம்
18-11-2025
அன்பார்ந்த உழைக்கும் மக்களே!
வாக்காளர் கணக்கெடுப்பு பணியில் ஈடுபடும் அரசு ஊழியர்கள் எஸ்ஐஆர் நடைமுறை குழப்பமாக உள்ளது. குறுகிய காலம், வேலை பளு மற்றும் தங்களுக்கே புரியாததை எப்படி நாங்கள் மக்களிடம் கூறமுடியும் என்பன போன்ற நிர்வாக காரணங்களைக் கூறி சிறப்பு தீவிர வாக்காளர் திருத்தம் என்கின்ற SIR ஐ புறக்கணிக்க போவதாக முடிவெடுத்துள்ளனர். அவர்கள் எடுத்துள்ள இந்த நல்ல முடிவை புரட்சிகர மக்கள் அதிகாரம் வரவேற்கிறது. அதே நேரத்தில் இதை நிர்வாக சிக்கல் என்று மட்டும் பார்க்காமல் அரசியல் ரீதியாகவும் இதன் அபாயத்தைப் புரிந்துகொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.
தமிழ்நாடு முழுவதும் உள்ள மக்கள் இந்த கணக்கெடுப்பு படிவத்தை பெற்றுக்கொண்டு என்ன செய்வதென்று தெரியாமல் அச்சத்திலும் குழப்பத்திலும் உள்ளனர். பல மாநில அரசுகளும் இந்த SIR க்கு எதிர்ப்பு தெரிவித்தாலும் RSS-BJP யின் கைப்பாவையாகிவிட்ட தேர்தல் ஆணையம் வலுக்கட்டாயமாக இந்த நடைமுறையை மக்கள் மீது திணித்துவருகிறது.
நாடு முழுவதும் உள்ள மக்களின் ஓட்டுரிமையைப் பறிக்கவும் இஸ்லாமியர்கள் மற்றும் பிஜேபி எதிர்ப்பாளர்களின் குடியுரிமையை பறிக்கவுமே இது தீவிரமாக அமல்படுத்தப்படுகிறது.
குறிப்பாக, இப்போது அமல்படுத்தப்படும் SIR வழக்கமான SIR அல்ல. 2002 ல் தேர்தல் நேரத்தில் SIR நடைபெறவில்லை. அது குடியுரிமையை சோதிக்கும் ஆவணங்களையும் கேட்கவில்லை. இதை தேர்தல் ஆணையம் வசதியாக மறைத்துள்ளது. ஆகவே இந்த SIR ன் உள்நோக்கம் வேறானது.
தேசிய குடிமக்கள் பதிவேடு என்ற பெயரில் 2019 ஆம் ஆண்டு பாசிச மோடி அரசு குடியுரிமையை பறிக்கும் சட்டம் கொண்டுவந்தது. அதற்கு எதிராக கிளெர்ந்தெழுந்த மக்கள் போராட்டத்தை கண்டு அஞ்சி பின்வாங்கிய மோடி அரசு அதையே இன்று எஸ்ஐஆர் என்ற பெயரில் கொண்டுவருகிறது. .
பாசிச மோடி அரசுடன் இணைந்து நாட்டில் நிலவிவரும் கொஞ்ச நெஞ்ச ஜனநாயகத்தையும் இந்த தேர்தல் ஆணையம் ஒழித்துக்கட்ட முயற்சித்து வருகிறது. இதை உடனடியாக கலைக்க போராடுவதே இன்று நம் உள்ள உடனடி கடமை ஆகும்.
ஆகவே, குடியுரிமையை பறித்து மதரீதியில் நாட்டை துண்டாட வரும் இந்த எஸ்ஐஆரை தடுக்கும் வகையில் அனைத்து தரப்பு மக்களும் இதற்கு ஒத்துழைப்பு தர மறுக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.
இப்படிக்கு
இரா. முத்துக்குமார்
மாநில செயலாளர்
புரட்சிகர மக்கள் அதிகாரம்
தமிழ்நாடு
97901 38614 #👨மோடி அரசாங்கம்

