ஒவ்வொரு மாதமும் அமாவாசை, பௌர்ணமி தினங்களை அடுத்த திரியோதசி திதியில் பிரதோஷ தினம் அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது. மாலை 4 மணி முதல் 6 மணி வரை பிரதோஷ காலம் எனப்படுகிறது. இந்த நேரத்தில் கோவில்களில் சிறப்பு அபிஷேகம், பூஜைகள், வழிபாடுகள் நடத்தப்படுவதும் வழக்கமாக இருந்து வருகிறது. இன்று டிசம்பர் 2ம் தேதி செவ்வாய் கிழமை பிரதோஷ தினத்தை தவற விடாதீங்க. செவ்வாய் கிழமையில் பிரதோஷ தினம் வருவதால் இந்த நாளில் சிவபெருமானை மனமுருகி பிரார்த்தனை செய்திட கல்வி கேள்விகளில் சிறந்து விளங்கலாம். வளமான மேன்மையான வாழ்வு பெறலாம் என்பது ஆன்மிக அன்பர்கள் வாக்கு. அனைத்து பிரதோஷங்களும் சிறப்பு தான் என்றாலும் செவ்வாய் கிழமைகளில் வரும் பிரதோஷம் கூடுதல் சிறப்பு வாய்ந்தது.
ஒருவர் தொடர்ந்து 11 பிரதோஷ நாளில் வழிபாடு செய்தால் துன்பங்கள் கரைந்து, எண்ணிய காரியம் ஈடேறும். இன்று செய்யும் சிவ வழிபாடு சூரியனின் அருளும், சிவ பெருமானின் அருளும் ஒரு சேர கிடைக்கும் என்கின்றனர் ஆன்மிக அன்பர்கள். அத்துடன் புகழ், பெருமை, மகிழ்ச்சி, அமைதி மற்றும் நீண்ட ஆயுளும் கூடும். ஜாதகத்தில் வரும் சூரிய தோஷம் தொடர்பான அனைத்து பிரச்சனைகளும் நீங்கும்.
பிரதோஷ மந்திரம்:
ம்ருத்யுஞ்ஜயாய ருத்ராய!
நீலகண்ட்டாய சம்பவே!
அம்ருதேஸாய சரவாய!
மஹாதேவாய தே நமஹ!
இன்றைய தினம் முழுவதுமே உடல் எந்த பணியில் ஈடுபட்டிருந்தாலும் மனம் 'ஓம் நமசிவாய' என்ற எளிய மந்திரத்தை உச்சரித்துக் கொண்டே இருக்கலாம். இன்றைய தினம் விரதமிருந்து சிவனின் நினைப்பில் அவரின் நாமத்தை உச்சரித்து, மாலையில் சிவன் கோவில்களில் நடைபெறும் பிரதோஷ நிகழ்வுகளில் கலந்து கொண்டு நந்தி பகவானையும், சிவபெருமானையும் வழிபடுவது மிகவும் சிறப்பு. ஜாதகத்தில் சூரியனின் நிலை வலுப்பெற்று நல்ல ஆரோக்கியமும் செல்வமும் உண்டாகும்.
சிவபெருமானுக்கு உகந்த நாள் பிரதோஷ நாள். பிரதோஷ நேரமான மாலை 4.30 மணி முதல் 6 மணி வரை, நமது கர்மவினைகள் நீங்கவும், நமது பிரார்த்தனைகள் நிறைவேறவும் வழிபாடு செய்திட மேன்மையான பலன்களை பெற முடியும்.
அந்த வகையில் செவ்வாய்கிழமையான இந்த பிரதோஷ நாளில் செய்யப்படும் பிரார்த்தனைகளுக்கு சிவபெருமான் உடனே செவி மடுக்கிறார் என்கின்றது சிவபுராணம். பிரதோஷத் தினத்தில் சிவ வழிபாடு செய்திட வாழ்வின் இன்னல்கள் நீங்கி சுபிட்சங்களை பெறலாம் என்பது ஆன்றோர் வாக்கு.இன்றைய தினத்தில் சிவபெருமானுடன் நந்தியையும் தரிசித்து வில்வம் , அபிஷேக பொருட்களை வாங்கி கொடுக்கலாம். இயன்ற அளவு வயிற்றுப் பசியால் வாடுபவர்களுக்கு அன்னமிடலாம்.பொதுவாக எல்லா பிரதோஷங்களும் தனி சக்தி வாய்ந்தவை
இந்த காலத்தில் தான் சிவன், நந்தியின் கொம்புகளுக்கிடையில் ஆடுகின்றார். இந்த நேரத்தில் அவரின் ஆனந்த தாண்டவத்தைக் காண முப்பத்து முக்கோடி தேவர்களும், முனிவர்களும் கூடி நின்று பக்தி பரவசத்துடன் இந்த பிரதோஷ வேளையில் #இன்று செவ்வாய் பிரதோஷம்!🙏 #🙏👑📿🔥🙇🪔இன்று வளர்பிறை பிரதோஷம்🕉️🕎🕉️இனிய செவ்வாய் கிழமை காலை வணக்கம் ஓம் நமசிவாய🐍🔱☘️🐄🙏 #தை மாதம் 🕉️செவ்வாய் 🐄பிரதோஷம் #✡️தோஷ பரிகாரங்கள்

