#🌷🌷காலை வணக்கம்🌷🌷 #newsupdate #newsupdate. இன்றைய தலைப்புச் செய்திகள்! SUN NEWs
○ சத்தீஸ்கரில் கேரளாவைச் சேர்ந்த 2 கன்னியாஸ்திரிகள் கைது செய்யப்பட்ட விவகாரம். வகுப்புவாதத்தின் ஆபத்தான வடிவம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்.!!!!
○ இந்தியா - பாகிஸ்தான் இடையேயான மோதல் நிறுத்தப்பட்டதற்கு அமெரிக்காவின் அழுத்தம் காரணமல்ல. ட்ரம்ப் மற்றும் பிரதமர் மோடி இடையே எந்த பேச்சுவார்த்தையும் நடக்கவில்லை என்றும் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் விளக்கம்.
○ இந்தியா - பாகிஸ்தான் சண்டையை நிறுத்தியதாக 26 முறை டிரம்ப் கூறியது குறித்து எதிர்க்கட்சிகள் கேள்வி. அமெரிக்க அரசின் கூற்றுக்கு எதிராக என்ன நிலைப்பாடு எடுக்கப்பட்டது என்றும் கேள்வி.
○ மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்கும் விவகாரத்தில் குடியரசுத் தலைவரின் கேள்விகளுக்கு எதிராக தமிழ்நாடு அரசு பதில் மனு. குடியரசுத் தலைவரின் கேள்விகளுக்கு பதிலளிக்காமல் திருப்பி அனுப்ப கோரிக்கை.
○ மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 1 லட்சத்து 10 ஆயிரம் கன அடியாக அதிகரிப்பு. அணையில் இருந்து 16 கண் மதகுகள் வழியாக 92 ஆயிரம் கன அடி நீர் வெளியேற்றம்.
○ அன்புமணி நடைபயணத்திற்கு தடை கோரி உள்துறைச் செயலாளரிடம் ராமதாஸ் கடிதம். சட்டம் ஒழுங்கு பிரச்னை வரும் என்பதால் தடை விதிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தல்.
○ அத்திக்கடவு திட்டத்திற்குட்பட்ட அனைத்து குட்டைகளிலும் நீர் நிரப்பாவிட்டால் வரும் 7-ம் தேதி போராட்டம். அத்திக்கடவு - அவிநாசி திட்ட போராட்டக்குழுவின் அவசரக் கூட்டத்தில் முடிவு.
○ ஏமனில் செவிலியர் நிமிஷாவின் மரண தண்டனை நிரந்தரமாக ரத்து. உயர்மட்டப் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதாக இஸ்லாமியர் மதத்தலைவர் அபூபக்கர் தகவல்.
○ பீகாரில் ஒரு வாரமாக வெளுத்து வாங்கும் கனமழையால் சாலைகளில் வெள்ளம். ஆளுநர் மாளிகை, முதலமைச்சர் வீட்டிற்குள் புகுந்த மழைநீர்.
○ உக்ரைன் உடனான போரை 12 நாட்களுக்குள் நிறுத்த புதினுக்கு ட்ரம்ப் கெடு. போரை நிறுத்தாவிட்டால் கடும் பொருளாதார தடைகள் விதிக்கப்படும் என எச்சரிக்கை. #ரெங்கா! #renga-vamba!

