ShareChat
click to see wallet page
புளி சாதம் செய்வது எப்படி...... தேவையான பொருட்கள்: அரிசி - 1/4 கிலோ புளி - ஒரு ஆரஞ்சு பழம் அளவு காய்ந்த மிளகாய் - 10 கடலை பருப்பு - 3 + 1 டீஸ்பூன் நிலக்கடலை - 2 டீஸ்பூன் தனியா - 2 டீஸ்பூன் வெந்தயம் - 1/2 டீஸ்பூன் எள் - 4 டீஸ்பூன் கடுகு - 1/2 டீஸ்பூன் கறிவேப்பிலை - சிறிது மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன் வெல்லம் - சிறிது உப்பு - தேவைக்கேற்ப நல்லெண்ணெய் - 5 ஸ்பூன். செய்முறை: சாதத்தை உதிர் உதிராக வடித்து, 1 ஸ்பூன் ந.எண்ணெய் கலந்து, ஆற விடவும். புளியை 3 டம்ளர் தண்ணீரில் ஊற வைத்து, கரைத்து, வடிகட்டவும். 5 மிளகாய், தனியா, 3 ஸ்பூன் கடலைப்பருப்பு, வெந்தயம் வறுத்து எடுத்து பொடித்து வைக்கவும். எள்ளைத் தனியாக படபடவென பொரியும் வரை வறுத்து எடுத்து பொடித்து வைக்கவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி, கடுகு தாளித்து, மீதி மிளகாய், கடலை பருப்பு, நிலக்கடலை சேர்த்து, சிவந்ததும், கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும். வதங்கியதும் கரைத்த புளியை ஊற்றி, உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து கொதிக்க விடவும். நன்கு கொதித்து, சுண்டி வரும் போது, பொடித்த பொடிகளைத் தூவி இறக்கவும். ஆறிய சாதத்துடன், நல்லெண்ணையோடு கலக்கவும். #pulihora #🥗tasty వంటకాలు #tasty and easy recipes 🤩 #tasty food recipes 😋
pulihora - ShareChat

More like this