ShareChat
click to see wallet page
search
இயக்குனர் மணிரத்னம், பாலா ஆகியோரிடம் உதவி இயக்குனாக பணியாற்றி, 2008-ம் ஆண்டு ஆந்திரா ஆந்தகாடு என்ற தெலுங்கு படத்தன் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் சுதா கொங்கரா. அதன்பிறகு 2010-ம் ஆண்டு விஷ்ணு விஷால் ஸ்ரீகாந்த் ஆகியோர் நடிப்பில் வெளியான துரோகி என்ற படத்தின் மூலம் தமிழில் இயக்குனராக அறிமுகமான இவர், படத்தன் தோல்வியால் 6 வருடங்கள் படம் இயக்காமல் இருந்தார், தொடர்ந்து 2016-ம் ஆண்டு மாதவன் - ரித்திகா சிங்க நடிப்பில் வெளியான இறுதிச்சுற்று படத்தின் மூலம் ரீ-என்ட்ரி கொடுத்தார். ஒரே நேரத்தில் இந்தி - தமிழ் என இரு மொழிகளில் வெளியான இந்த படம் பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. இதனைத் தொடர்ந்து தெலுங்கில் குரு என்ற பெயரில் இந்த படத்தை ரீமேக் செய்த சுதா கொஙகரா, 4 ஆண்டுகள் இடைவெளிக்கு பின் சூர்யா நடிப்பில் சூரரைப்போற்று என்ற படத்தை இயக்கினார். நேரடியாக ஒடிடி தளத்தில் வெளியான இந்த படம் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. சூரரைப்போற்று திரைப்படத்தை இந்தியில் அக்ஷைகுமார் நடிப்பில் இயக்கி தோல்வி கண்ட இவர், தற்போது பராசக்தி என்ற படத்தை இயக்கியுள்ளார். பொங்கல் வெளியீடாக ஜனவரி 10-ந் தேதி வெளியாக இந்த படம் கலவையாக விமர்சனங்களை பெற்று வரும் நிலையில், சுதா கொங்கரா இயக்குனர் பாக்யராஜ், பாண்டியராஜன், மற்றும் பி.வாசு ஆகியோர் குறித்து மேடையில் பேசிய பேச்சு இணையத்தில் வைரலாகி வருகிறது. இயக்குநர் பாக்யராஜ் சார் அவர்கள் என் உயிர் போன்றவர். இன்று ஒரு இயக்குநராக அமர்ந்து கொண்டு, அவர் அன்று அப்படிப் பண்ணாரே, இப்படிப் பண்ணாரே என்று வியந்து பேசும் நிலையில் நான் இருக்கிறேன். அவருடைய மகன் சாந்தனு ஒரு மிகச்சிறந்த நடிகர், மிக அழகாகவும் இருக்கிறார். அவருடன் பணியாற்றும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது பெரும் மகிழ்ச்சி.(பாவக்கதைகள்: ஆந்தாலஜி படம்) அந்தச் சமயத்தில்தான் பாக்யராஜ் சாரைப் பற்றி நிறையப் பேசினேன். என் பள்ளி நாட்களில் நடந்த சில சுவாரசியமான நினைவுகள் இப்போதும் பசுமையாக இருக்கிறது. பாக்யராஜ் சார் இயக்கி நடித்து ஏ.சான்றிதழுடன் வெளியாக முந்தானை முடிச்சு படத்தை பள்ளிக்குச் செல்லாமல் 'கட்' அடித்துவிட்டுச் சென்று பார்த்தது இப்போதும் நினைவிருக்கிறது #சினிமா🎤தகவல்
சினிமா🎤தகவல் - 0 அடித்துவிட்டு ஸ்கூல் கட் பார்த்த ' ஏ' படம்; மேடையில் உடைத்த பராசக்தி உண்மை இயக்குனர்: கைதட்டி சிரித்த ஏஆர்ரஹ்மான் 0 அடித்துவிட்டு ஸ்கூல் கட் பார்த்த ' ஏ' படம்; மேடையில் உடைத்த பராசக்தி உண்மை இயக்குனர்: கைதட்டி சிரித்த ஏஆர்ரஹ்மான் - ShareChat