ShareChat
click to see wallet page
search
செபஸ்தியார் நவநாள்* *நாள்-3* *தியானிக்க..* நீங்கள் உலகிற்கு ஒளியாய் இருக்கிறீர்கள். மலைமேல் இருக்கும் நகர் மறைவாயிருக்க முடியாது. (மத்தேயு 5:14) புனித செபஸ்தியார் மிகவும் இக்கட்டான சூழ்நிலையிலும், துன்புறுத்தப்பட்ட வேளையிலும், மிகுந்த துணிவோடும் தைரியத்தோடும், கிறிஸ்தவர்களுக்கும் புறவினத்தாருக்கும் நற்செய்தி அறிவித்து, கத்தோலிக்க விசுவாசத்தை வேரூன்ற செய்தார். அவருடைய நற்செய்திப் பணியாலும், ஆற்றுப்படுத்தலினாலும் ஊக்குமூட்டிய விதத்தையும் கண்டு, பலர் கிறிஸ்தவத்தை தழுவினர். சிலர், அவர் செய்த அற்புதங்களைக் கண்டு மனம்மாறி கிறிஸ்தவத்தை ஏற்றுக்கொண்டனர். புனித செபஸ்தியார் பலரது உடல் உபாதைகளை குணப்படுத்தியது மட்டுமல்லாமல், அவர்களுக்கு கிறிஸ்துவைப் பற்றி எடுத்துக்கூறி, திருமுழுக்குப் பெற வலியுறுத்தினார். புனித செபஸ்தியார் இவ்வாறு செய்வதை அறிந்ததும், கிறிஸ்தவர் என்ற காரணத்திற்காக புனித செபஸ்தியாரைச் சிறைப்படுத்தி துன்புறுத்தினார்கள். பேரரசன், புனித செபஸ்தியார் ஒரு கிறிஸ்தவரென்று நம்பவில்லை. செபஸ்தியாரா? கண்ணியமான படைத்தளபதியா கிறிஸ்தவர்? என்று ஆச்சரியம் கலந்த குழப்பத்தோடு வினவினான். அவன் ஒருவேளை கிறிஸ்தவனாக இருந்தால், அவனது மனதை நான் எளிதில் மாற்றிவிடுவேன் என்று, பேரரசன் புனித செபஸ்தியாரைப் பற்றிக் கூறினான். அப்போது, அரண்மனைக் காவலர்களின் தளபதியான புனித செபஸ்தியார் பேரரசனை நோக்கி, அவர்கள் கூறுவது உண்மைதான்; நான் கிறிஸ்தவன் தான் என்று உரக்கக் கூறினார். மேலும் நான் என்றுமே கிறிஸ்தவன் தான். அதில் என்ன பிழை இருக்கிறது? சுட்டுக்காட்டுங்கள் என்று பேரரசனை புனித செபஸ்தியார் வினவினார். அதற்கு பேரரசன், உன்னிடம் ஒரு தோழனாகக் கேட்கிறேன். உனக்கு என்ன வேண்டும்? பணமா? பொருளா? தங்கமா? உயர் பதவியா? எது வேண்டுமானாலும் என்னிடமிருந்து பெற்றுக்கொள். ஆனால், கிறிஸ்தவ நம்பிக்கையை மட்டும் கைவிட்டுவிடு என்றான். அதற்கு புனித செபஸ்தியார், எனக்கு நீங்கள் அற்பமான விசயங்களைத் தருவதாக வாக்களிக்கிறீர்கள் பேரசரே! நான் நீங்கள் நினைக்க முடியாத அளவிற்கு செல்வந்தன். உங்களால் தரமுடியாத பெரும் பதவியிலும் இருக்கிறேன். கிறிஸ்துவை விட ஒப்பற்ற செல்வமும் இல்லை. கிறிஸ்துவால் எனக்கு கிடைக்கும் புகழை விட, பதவியால் பெரிய புகழ் எனக்கு கிடைக்கப்போவதில்லை. நான் கிறிஸ்தவன் என்பதே பெரிய பாக்கிய செல்வம் என்று கூறினார். இதைக்கேட்ட பேரரசன் கடுஞ்சினம் கொண்டு, புனித செபஸ்தியார் ஆடையில் பொறித்திருந்த உரோமானியச் சின்னத்தை கிழித்து விட்டு, அவரைச் சிறையில் அடைத்து, பின்னர் அம்புகளால் எய்து கொலை செய்ய ஆணை பிறப்பித்தான். இதைக்கேட்ட புனித செபஸ்தியாருக்கு பேரானந்தம். கிறிஸ்துவுக்காக மரிக்கப்போவதை எண்ணி, மிகவும் மகிழ்ச்சியாய் இருந்தார். *செபம்:* குருத்துவ மற்றும் துறவற இறையழைத்தல் பெறுக செபிப்போம். புகழ்பெற்ற புனித செபஸ்தியாரே! நீர் எண்ணிலடங்காத மக்களுக்களுக்கு, வழிகாட்டியாக இருந்து கிறிஸ்துவை அறிவித்தீரே! உம்முடைய போதனையால், கிறிஸ்தவர்களை இவ்வுலக சிற்றின்பங்களையும் பேராசைகளையும், புகழ்ச்சி மாயையும் விட்டுவிட்டு, விண்ணுலக வீட்டின் நிலையான பேரின்பத்தை நாடச் செய்தீர். கிறிஸ்தவ மெய்மறைக்காக உரோமானியப் பேரரசனையும் எதிர்த்து நின்று, அவனளித்த பரிசுகளையும் பதிவிகளையும், வேண்டாமென்று ஒதுக்கினீர். இதனால் விளைந்த துன்புறுத்தல்களை, விண்ணக பேரின்பத்தின் பொருட்டு மகிழ்வாய் ஏற்றுக்கொண்டீர். உம்மைப்போலவே நாங்களும் இவ்வுலக இன்பங்களை நாடாமலும், பொருட்களின் மேல் நம்பிக்கை கொள்ளாமல், கிறிஸ்தவ விசுவாசத்தில் வேரூன்றி வளர எங்களுக்காக வேண்டிக்கொள்ளும். படைப்புக்களை நாடாமல், படைத்தவரையே நாடித் தேடும் அருளை எங்களுக்கு பெற்றுத் தாரும். ஆமென். *இறுதி செபம்:* 1.கர்த்தர் கற்பித்த செபம் 2.மங்கள வார்த்தை 3.திரித்துவ புகழ் #⛪ வேளாங்கண்ணி சர்ச் #✝பைபிள் வசனங்கள் #✝️இயேசு #✝️இயேசுவே ஜீவன்
⛪ வேளாங்கண்ணி சர்ச் - ShareChat