
S.ANTHONY✝️YESUMARY
@anthonymundiyampakkam
ஐ லவ் ஷேர்சாட் .ஷேர்சாட் இஸ் ஆசாம்
*கிறிஸ்துமஸ் கால சிந்தனைகள் -08*
🎄🎅🎄🎅🎄🎅🎄🎅
“ இதோ உம் உறவினரான எலிசபெத்தும் முதிர்ந்த வயதில் ஒரு மகனை கருத்தரித்திருக்கிறாள். மலடி எனப்படும் அவளுக்கு இது ஆறாம் மாதம். கடவுளால் ஆகாதது ஒன்றுமில்லை “
- லூக்காஸ் 1: 26-27
பாருங்கள் எலிசபெத்தும் மரியாளின் உறவினள். ஆக மீட்பு நம் அன்புத்தாயின் குடும்பத்தை சுற்றியே வருகிறது.
ஸ்ஞாபக அருளப்பரின் பெற்றோர்களான சக்கரியாசும், எலிசபெத்தும்,
“ ஆண்டவருடைய கற்பனைகளின் முறைகளின்படி குறைகூற இடமில்லாமல் நீதிமான்களாய் வாழ்ந்து வந்தனர். (லூக்காஸ் 1:5)
மாதாவின் பெற்றோர்களையும் பார்த்தோம். மாதாவின் உறவினர்களையும் பார்க்கிறோம். இயேசு கூட தன் தாய்வழி சொந்தமான சின்ன யாகப்பரை தன் சீடராக தேர்ந்து கொண்டார். அவர்தாய் வழி பெண் சீடர்களும் உண்டு. பெரிய யாகப்பர், அருளப்பர் தாயான சலோமியும் தேவதாய்க்கு உறவினர்தான்.
சொல்ல வருவது என்னவென்றால் கடவுளுக்காக கடவுள் பணிக்காக நீதிமான்களாக, நல்லவர்களாக, மற்றவர்களுக்கு தானே போய் உதவி செய்பவர்களாக தூய்மை உள்ளம் கொண்டவர்களாக அன்புத்தாயின் குடும்பம், அவர் உறவினர்களின் குடும்பம் தலை முறை தலை முறையாய் வாழ்ந்து வந்துள்ளது..அதனால்தான் கடவுள் அந்த குடும்பங்களை மீட்பின் திட்டங்களுக்கு பயன்படுத்தியுள்ளார்.
சற்றே திரும்பி பார்ப்போம். பாரம்பரிய கத்தொலிக்க கிறிஸ்தவக்குடும்பங்களான நம் குடும்பங்களின் இப்போதைய நிலமை என்ன? பக்தியில் திளைத்திருந்த நம் குடும்பங்கள், காலை திருப்பலி, மாலை ஜெபமாலை என்று கோவிலுக்கு சென்று வந்திருந்த நம் குடும்பங்களின் தற்போதைய நிலமை என்ன? சாயங்காலம் அல்லது இரவு குடும்ப ஜெபமாலை சொல்லாமல் உறங்கியதே இல்லை என்று இருந்த நம் குடும்பங்களின் இன்றைய கதி என்ன?
கடவுளும், புனிதர்கள் மட்டும் திருச்சபையையோ, இந்த உலகத்தையோ தாங்குவதில்லை, அழிவுகளிலிருந்து காப்பதில்லை. நம் கிறிஸ்தவ குடும்பங்கள் செய்யும் ஜெபங்களிலிருந்தும் உலகம் அழிவிலிருந்து காக்கப்படுகிறது என்பது உண்மை.
ஜெபம் செய்ய நேரம் ஒதுக்காமல், டி.வி புரோகிராம்களிலும், சீரியல்களிலும் நேரத்தை செலவழித்து, தூங்கும் வரை டி.வி முன்னாலே இருந்துவிட்டு தூங்குவதுதான் கிறிஸ்தவ குடும்பங்கள் மட்டுமல்ல 98% சதவிகித குடும்பங்களின் நிலை.
பின்பு குடும்பங்களில் சமாதானம், சந்தோசம் எப்படி வரும் ?.
இப்போது பார்க்க முடிகிறது எல்லாம்..
பெற்றோருக்கும் - பிள்ளைகளுக்குமான இடைவெளி, கணவனுக்கும் – மனைவிக்குமான இடைவெளி, சகோதர, சகோதரிக்குள் இடைவெளிகளை பார்க்கமுடிகிறது. பரஸ்பரம், பாசம் குறைந்து எல்லாமே கடமைகளாகவும், கடமைக்காகவும் ஆகிவிட்டது.
திருவிவிலியத்தின் கதைகளையோ அல்லது பிள்ளைகளுக்கு பிடிக்கும் கதைகளையோ சொல்லி அவர்களை தூங்க வைத்த காலம் எங்கே ? நம் குழந்தைகள் நல்லவர்களக வளரவேண்டும் என்ற சிந்தனைகள் போய், திறமைசாலிகளாக, அப்படி, இப்படி வளர்க்கவேண்டும் என்ற சிந்தனையே நிற்கிறது. திறமைகள் கண்டிப்பாக வளர்க்கப்படவேண்டும், ஊக்குவிக்கப்பட வேண்டும் அதே நேரத்தில் நல்லொழுக்கங்கள் அவர்களுக்கு சாப்பாடு போல் ஊட்டப்படவேண்டும்..
ஜெபம் :
திருக்குடும்பமே உங்களுக்குள் எத்தனை விட்டுக்கொடுத்தல்கள், எத்தகைய நேசங்கள், எத்தகைய அன்பு, உணர்வு பரிமாற்றங்கள் எப்பேற்பட்ட தியாகங்கள் உலகத்துக்கே உதாரன குடும்பம் உங்கள் குடும்பம்தான். உங்கள் குடும்பத்தின் முன்மாதிரியை பின் பற்றி எங்கள் குடும்பமும், ஒருவர் ஒருவருக்காக நேரம் ஒதுக்கி, அவர்களை புரிந்து கொண்டு அவர்களை மகிழ்ச்சிபடுத்தி முக்கியமாக உமக்கு நேரம் ஒதுக்கி குடும்பமாக அமர்ந்து இறைவார்த்தைகளை தினமும் வாசித்து, குடும்ப ஜெபமாலை சொல்லி தங்களுக்காகவும், பிறருக்காகவும் ஜெபிக்கவும், உம் பிறந்த நாளுக்காக குடுபம்பமாக எங்களை தயாரிக்க வரம் தாரும்.
- ஆமென்
*🕯️வாரும் ஆண்டவரே வாரும்🕯️* #✝️இயேசுவே ஜீவன் #⛪ வேளாங்கண்ணி சர்ச் #✝️இயேசு #✝பைபிள் வசனங்கள்
அன்னை நவநாள்*
*நாள் 6: கர்ப்பகால வயிற்றுப் பட்டை – இறைவனின் தாய்*
சிந்தனை:
மாதா கட்டியுள்ள வயிற்றுப் பட்டை, அஸ்தேக் மரபில் கர்ப்பத்தின் அடையாளம். இதன் மூலம் மரியா இயேசுவை – உண்மையான கடவுளை – தன் கருவில் சுமப்பதை அறிவிக்கின்றார். இது மரியாவை “தேவமாதா” (Theotokos – கடவுளைச் சுமந்தவர்) எனப் பறைசாற்றுவதோடு, கருவிலுள்ளோரின் பாதுகாவலியாகவும் ஆக்குகிறது. மனிதப் பலியை வழங்கிய அஸ்தேக் பழக்கத்திற்கு எதிராக, வாழ்வின் புனிதத்தை உரக்க அறிவிக்கிறது. குவாதலூப்பே மாதாவே, வாழ்வின் அன்னையே, எங்களையும் எம் குழந்தைகளையும் எந்நாளும் கண்ணோக்கியருள்வீராக!
செபம்:
கருவுற்றிருக்கும் குவாதலூப்பே அன்னை மரியாயே, உமது இடையில் கட்டப்பட்ட கருப்புநிறப் பட்டை, உமது திருக்கர்ப்பத்தை அறிவிக்கின்றது. தெய்வீகக் குழந்தையைச் சுமப்பதுபோல், என் பாரங்களையும் அன்பான அன்னையின் பரிவோடு சுமந்தருளும். எல்லா தாய்மார்களையும், கருவிலுள்ள குழந்தைகளையும் ஆசீர்வதித்தருளும். உலகில் வாழ்வையும், அன்பையும் வளர்த்தருளும். ஆமென்.
தூய குவாதலூப்பே மாதாவே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும். #✝பைபிள் வசனங்கள் #⛪ வேளாங்கண்ணி சர்ச் #✝️இயேசு #✝️இயேசுவே ஜீவன்
*🌹அமலோற்பவ மாதா - பிதாவாகிய சர்வேசுரனின் அன்புள்ள குமாரத்தியாயிருக்கும் மகிமை..*
நம் அன்புள்ள தேவதாயாரை பிதாவின் மகள், சுதனின் தாய், பரிசுத்த ஆவியானவரின் நேசம் என்று காலாகாலமாய் திருச்சபை பாராட்டி வருகிறது.
"பிதாவாகிய சர்வேசுரனுடைய குமாரத்தியே! சுதனாகிய சர்வேசுரனுடைய தாயாரே! பரிசுத்த ஆவியானவராகிய சர்வேசுரனுக்கு மிகவும் பிரியமுள்ள நேசமே
என்று தொடங்கும் பழங்கால ஜெபம்
தமிழக சுத்தோலிக்கர்களுக்கு மிகவும் பழக்கப்பட்ட ஒன்றாகும்.
ஜெபமாலையின் முதல் மூன்று அருள்நிறை மந்திரங்களைச் சொல்லும் போதும் "பிதாவாகிய சர்வேசுரனுடைய குமாரத்தியாகிய பரிசுத்த தேவமாதாவே, எங்களிடத்திலே தேவ விசுவாசம் என்கிற புண்ணியம் உண்டாகி பலனளிக்கும்படி உம்முடைய திருக்குமாரனை வேண்டிக் கொள்ளும்" என்று தொடங்கும் மூன்று மன்றாட்டுகளும் நமக்குத் தெரியும்.
மாதா என்றால், பிதாவின் செல்வ மகள், சுதனின் அன்புத் தாய். பரிசுத்த ஆவியானவரின் ஞானப்பத்தினி என்பதெல்லாம் அவ்வன்னைக்கு இயல்பாகவே ஏற்பட்டவை என்று நாம் உணர்ந்து கொள்ள முடியும்.
வேத பிதாக்களின் போதனை:
நமது அமலோற்பவ மாதா, பிதாவாகிய சர்வேசுரனின்
செல்வ மகள் தான். இப்பெரும் வரப்பிரசாத சலுகை தன்னுடையது என்பதை அமலோற்பவ மாதாவே வேதாகமத்தில் கூறியுள்ளார்கள்” என அர்ச். அல்போன்ஸ் மரிய லிகோரியார் தெளிவாய்ச் சொல்கிறார்.
"மரியம்மாள் ஜென்மப் பாவம் படராமல் முழு விடுதலை பெற்றிருப்பது பொருத்தமே ஏனென்றால் அமலோற்பவ மாதா பிதாவின் முதல் மகளாக இருக்கிறார்கள்:
"நானே சிருஷ்டிகளுக்கெல்லாம் முந்தி சிருஷ்டிக்கப்பட்டேன்" (சீராக்:24:5) என்கிறார்கள்.
இவ்வார்த்தைகளை புனித வேதபாரகர்களும், வேத பிதாக்களும், திருச்சபையுமே அமலோற்பவ மாதாவைக் குறிப்பதாக தேவமாதாவின் அமலோற்பவ திருநாள் உரைகளில் கூறியுள்ளனர்" - என்கிறார்.
அமலோற்பவ மாதா தன் திருக்குமாரனுடன் இனைந்தவர்களாகவே முன் குறிக்கப் பட்டதனால், பிதாவின் முதல் மகளாக இருக்கிறார்கள் என்று டான்ஸ் கோட்டஸ் என்ற வேதபாரகரும் அவரைப் பின்பற்றுகிறவர்களும் கூறுகிறார்கள். வரப்பிரசாத முறையில், இரட்சகரின் தாயாக மாதா முன்குறிக்கப் பட்டதால் பிதாவின் தலை மூத்த மகளாக இருக்கிறார்கள் என்று அர்ச் தாமஸ் அக்வினாசும். அவரைப் பின் செல்கிற வேத அறிஞர்களும் கூறுகிறார்கள். ஆக வேத இயல் அறிவில் சிறந்த அனைவருமே அமலோற்பவ மாதாவை பிதாவாகிய சர்வேசுரனின் முதல் குமாரத்தி என்பதை ஒப்புக் கொள்கிறார்கள்.
அலெச்சாந்திரியா மேற்றிராணியா ராயிருந்த டெனிஸ் என்பவர். இன்னும் ஒருபடி. தாண்டி அமலோற்பவ மாதாவை "ஜீவியத்தின் ஒரு மகள் - ஒரே மகள் கன்னிமாமரி அன்னையே" என்கிறார். (contro Pa. samgt) மற்ற அனைத்து மகள்களும் பாவத்திற்குட்பட்டதால் அமலோற்பவ மாதா மாத்திரமே கடவுனின் குமாரத்தியாக இருப்பதாக அவர் கூறுகிறார்.
அனைத்து சகோதர உள்ளங்களுக்கும் மகா பரிசுத்த அமலோற்பவ மாதாவின் பெருவிழா வாழ்த்துக்கள்!
ஆமென்.
நன்றி: www.catholictamil.com
பரிசுத்த தமத்திருத்துவத்திற்கு மகிமை உண்டாவதாக !!! பரிசுத்த திருக்குடும்பமே துணை #✝️இயேசுவே ஜீவன் #⛪ வேளாங்கண்ணி சர்ச் #✝️இயேசு #✝பைபிள் வசனங்கள்
மாசில்லாமல் உற்பவித்த திருநாள்..*
டிசம்பர்-08
சர்வேசுவரன் ஆதித் தாய் தகப்பனை உண்டாக்கியபோது அவர்களுக்கு அவர் கொடுத்த கட்டளையை அவர்கள் மீறினதினால், அவர்கள் தேவ இஷ்டப்பிரசாதத்தை இழந்து மோட்ச உரிமையைப் பறிகொடுத்து, வியாதி, துன்பம், சாவு முதலிய தீமைகளுக்கு ஆளானார்கள்.
மேலும் அவர்களுடைய சந்ததியாரான சகல மனிதரும் முன் சொல்லப்பட்ட கேட்டுக்கு உள்ளாகி, அவர்கள் பிறக்கும்போது தேவ இஷ்டப்பிரசாதமின்றி பசாசுக்கு அடிமைகளாய்ப் பிறக்கிறார்கள்.
ஆனால் தயையுள்ள சர்வேசுவரன் அவர்கள்மீது இரக்கங்கொண்டு மனுக்குலத்தை இரட்சிக்கும்படி ஒரு இரட்சகர் ஒரு ஸ்திரீயிடத்தினின்று பிறப்பாரென்றும், அந்த ஸ்திரீ நரக சர்ப்பமாகிய பசாசின் தலையை மிதித்து நசுக்குவார்களென்றும் ஆதித்தாய் தகப்பனுக்கு வாக்குத்தத்தம் கொடுத்தார்.
சர்வேசுவரன் குறித்து பேசின ஸ்திரீ அர்ச். கன்னிமரியம்மாளே. இவர்கள் ஜென்மப் பாவமின்றி உற்பவித்ததினால் பசாசின் தலையை மிதித்தார்கள். ஆகையால் உலக இரட்சகரைப் பெற்றெடுக்கவிருக்கும் அக்கன்னி மரியம்மாள், தன் தாய் வயிற்றில் உற்பவித்த கணமே ஜென்மப் பாவமின்றி உற்பவித்தது, தேவ இஷ்டப்பிரசாதத்தால் அலங்கரிக்கப்பட்டார்கள்.
தேவமாதா தன் தாய் வயிற்றில் உற்பவித்த பொழுது ஜென்மப் பாவமின்றி உற்பவித்தார்கள் என்னும் வேத சத்தியத்தை திருச்சபை 1854-ம் வருடம் டிசம்பர் மாதம் 8-ம் தேதி உலகத்திற்கு பிரசித்தப்படுத்தினதினால், இன்றையத் தினம் ஆடம்பரத்துடன் திருச்சபையில் திருநாளாகக் கொண்டாடப்படுகிறது.
யோசனை:
நாமும் மோட்ச இராக்கினியின்மேல் அதிக பக்தி வைத்து, ஓ! மரியாயே! உமது ஜென்ம தோஷமில்லாத உற்பவத்தால் என்னிருதயத்தைப் பரிசுத்தப்படுத்தி, என் ஆத்துமத்தை அர்ச்சித்தருளும் என்று மன்றாடுவோமாக.
மரியாயே வாழ்க #✝பைபிள் வசனங்கள் #⛪ வேளாங்கண்ணி சர்ச் #✝️இயேசு #✝️இயேசுவே ஜீவன்
#✝️இயேசுவே ஜீவன் #⛪ வேளாங்கண்ணி சர்ச் #✝️இயேசு #✝பைபிள் வசனங்கள்
#✝பைபிள் வசனங்கள் #⛪ வேளாங்கண்ணி சர்ச் #✝️இயேசு #✝️இயேசுவே ஜீவன்
*பரிசுத்த அமலோற்பவ மாதாவுக்கு நவநாள் செபம் மற்றும் புகழ்மாலை*
❣️🌟❣️🌟❣️🌟❣️🌟❣️🌟❣️
பரிசுத்த அமல அன்னையே..
என்றும் கன்னியான புனித மரியாயே, தேவ தாயே, வானதூதர்கள் மற்றும் புனிதர்களின் அரசியே, மிகுந்த பக்தி வணக்கத்தோடு உமது மாசில்லாத அமல உற்பவத்தை, நாங்கள் பணிந்து தியானித்து வணக்கம் செலுத்துகிறோம். எங்களின் நேசமிகு தாயாராக நீர் இருந்து, எங்களைக் காத்து வரும் கருணைக்காகவும், உமது பரிவிரக்கத்தாலும், வல்லமையான பரிந்துரையாலும், நாங்கள் எமது வாழ்வில் பெற்ற எல்லா ஆசீர்வாதங்களுக்காவும் நன்றி கூறுகிறோம். எங்களின் அனைத்துத் தேவைகளிலும், அளவற்ற நம்பிக்கையுடன் நாங்கள் உங்களைத் தேடி வருகிறோம். இரக்கத்தின் அன்னையே, எங்கள் வேண்டுதல்களை உமது திருப்பாதத்தில் வைக்கிறோம்.
_*(நமக்கு வேண்டிய வரங்களை கேட்கவும்)*_
ஜென்ம பாவமில்லாமல் உற்பவித்த புனித மரியே, உம்மிடம் தஞ்சமடைந்துள்ள நாங்கள் வேண்டும் எங்கள் மன்றாட்டுக்களை புறக்கணியாமல் தயாபரியாய் கேட்டு எங்களுக்காக உம் திருக்குமாரனிடம் மன்றாடும். ஓ இறைவனின் பரிசுத்த கன்னித் தாயே, அமல உற்பவ மரியே, எங்கள் மீட்பரின் தாயே, இரக்கம் மிகுந்த மாதாவே எங்கள் வாழ்வின் ஒவ்வொரு நொடியிலும் உமக்கு நெருக்கமாய் எங்களை வைத்திரும். எப்போதும் உமது திருமைந்தனின் வழியில் எங்களை நடத்தி காத்தருளும் தாயே.
*- 🙏🏻ஆமென்.🙏🏻*
❣️🌟❣️🌟❣️🌟❣️🌟❣️🌟❣️
*தூய அமலோர்பவ மாதாவுக்கு புகழ்மாலை*
❣️🌟❣️🌟❣️🌟❣️🌟❣️🌟❣️
சுவாமி கிருபையாயிரும்,
கிறீஸ்துவே கிருபையாயிரும்,
சுவாமி கிருபையாயிரும்.
கிறீஸ்துவே எங்கள் பிரார்த்தனையைக் கேட்டருளும்.
கிறீஸ்துவே எங்கள் பிரார்த்தனையை நன்றாகக் கேட்டருளும்.
பரமண்டலங்களிலே இருக்கிற பிதாவாகிய சர்வேசுரா, எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி.
உலகத்தை மீட்டு இரட்சித்த சுதனாகிய சர்வேசுரா, எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி.
இஸ்பீரீத்து சாந்துவாகிய சர்வேசுரா, எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி.
அர்ச்சியசிஷ்ட தமதிருத்துவமாயிருக்கிற ஏக சர்வேசுரா, எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி.
மாசில்லாத அர்ச்சியசிஷ்ட மரியாயே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.
கன்னியருக்குள்ளே மாசில்லாத அர்ச். கன்னிகையே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.
ஆதியில் குறிக்கப்பட்ட மாசில்லாத அர்ச். கன்னிகையே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.
உற்பவமுதல் எப்போதும் மாசில்லாதவர் களாயிருக்கிற அர்ச். மரியாயே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.
அமலோற்பவியான அர்ச். கன்னிகையே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.
பரம பிதாவின் மாசில்லாத குமாரத்தியே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.
திவ்விய குமாரனுடைய மாசில்லாத தாயே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.
இஸ்பிரீத்துசாந்துவின் மாசில்லாத பத்தினியே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.
அர்ச். தமத்திரித்துவத்தின் மாசில்லாத இருப்பிடமே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.
சர்வேசுரனுடைய மாசில்லாத சாயலே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.
நீதி ஆதித்தனுடைய மாசில்லாத உதயமே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.
சேசுக்கிறீஸ்துநாதர் அடங்கியிருந்த மாசில் லாத பெட்டகமே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.
தாவீதரசனுடைய மாசில்லாத குமாரத்தியே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.
சேசுக்கிறீஸ்துநாதருக்கு மாசில்லாத காவலே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.
சர்வ பாவத்தையும் ஜெயித்த மாசில்லாத கன்னிகையே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.
சர்ப்பத்தின் தலையை நசுக்குகிற மாசில்லாத கன்னிகையே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.
பரலோகத்துக்கும் பூலோகத்துக்கும் மாசில் லாத இராக்கினியே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.
பரலோக எருசலேமின் மாசில்லாத வாசலே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.
வரப்பிரசாதங்களின் மாசில்லாத வாய்க் காலே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.
அர்ச். சூசையப்பரின் மாசில்லாத மணவாளியே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.
உலகத்தின் மாசில்லாத நட்சத்திரமே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.
யுத்தம் செய்கிற திருச்சபைக்கு அசையாததும் மாசில்லாததுமான ஸ்தம்பமே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.
முட்செடியில் புஷ்பிக்கும் மாசில்லாத ரோஜாவென்கிற புஷ்பமே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.
நிலத்தில் முளைக்கிற புஷ்பங்களில் மாசில் லாத லீலியயன்னும் புஷ்பமே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.
சகல புண்ணியங்களுக்கு மாசில்லாத மாதிரிகையே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.
எங்கள் நம்பிக்கைக்கு மாசில்லாத காரணமே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.
எங்கள் விசுவாசத்துக்கு மாசில்லாத ஸ்தம்பமே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.
தேவசிநேகத்துக்கு மாசில்லாத ஊற்றே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.
எங்கள் இரட்சணியத்துக்கு மாசில்லாத குறிப்பே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.
உத்தம கீழ்ப்படிதலுக்கு மாசில்லாத கிரமமே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.
சுகிர்த தரித்திரத்துக்கு மாசில்லாத மாதிரிகையே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.
பக்திக்கு மாசில்லாத பள்ளிக்கூடமே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.
கற்பின் ஒழுக்கத்துக்கு மாசில்லாத வாசமே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.
ஆத்தும ஈடேற்றத்துக்கு மாசில்லாத நங்கூரமே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.
சம்மனசுகளுக்கு மாசில்லாத பிரகாசமே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.
பிதாப்பிதாக்களுக்கு மாசில்லாத கிரீடமே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.
தீர்க்கதரிசிகளுக்கு மாசில்லாத மகிமையே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.
அப்போஸ்தலர்களுக்கு மாசில்லாத தலைவியே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.
வேதசாட்சிகளுக்கு மாசில்லாத சகாயமே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.
ஸ்துதியர்களுக்கு மாசில்லாத வல்லமையே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.
கன்னியாஸ்திரீகளுக்கு மாசில்லாத முடியே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.
சகல கிறீஸ்தவர்களுக்கும் மாசில்லாத பரிசுத்ததனமே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.
புண்ணியவான்களுக்கு மாசில்லாத துணையே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.
உம்மை நம்புகிறவர்களுக்கு மாசில்லாத சந்தோஷமே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.
வியாதிக்காரருக்கு மாசில்லாத ஆரோக்கியமே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.
பாவிகளுக்கு மாசில்லாத அடைக்கலமே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.
பதிதர்களுக்கு பயங்கரமான மாசில்லாத ஆண்டவளே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.
மனுமக்களுக்கு மாசில்லாத பரிபாலியே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.
உம்மை ஸ்துதிக்கிறவர்களுக்கு மாசில்லாத உபகாரியே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.
உலகத்தின் பாவங்களைப் போக்குகிற சர்வேசுரனுடைய செம்மறியாகிய சேசுவே, எங்கள் பாவங்களைப் போக்கியருளும் சுவாமி.
உலகத்தின் பாவங்களைப் போக்குகிற சர்வேசுரனுடைய செம்மறியாகிய சேசுவே, எங்கள் பிரார்த்தனையைக் கேட்டருளும் சுவாமி.
உலகத்தின் பாவங்களைப் போக்குகிற சர்வேசுரனுடைய செம்மறியாகிய சேசுவே, எங்களைத் தயை பண்ணி இரட்சியும் சுவாமி.
சேசுக்கிறீஸ்துநாதருடைய திருவாக்குத் தத்தங்களுக்கு நாங்கள் பாத்திரவான்களா யிருக்கத்தக்கதாக, மாசில்லாமல் உற்பவித்த அர்ச். மரியாயே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.
*பிரார்த்திக்கக்கடவோம்:*
அர்ச். கன்னிமாமரி, மாசில்லாமல் உற்பவிக்கவும், உமது திவ்விய குமாரன் தங்கும் பரிசுத்த ஸ்தலமாயிருக்கவும் அவரைத் தெரிந்து கொண்டு, நிகரில்லாத வரங்களால் அவரை அலங்கரிக்கத் திருவுளமான சர்வ வல்லவராகிய சர்வேசுரா! சேசுநாதருடைய புண்ணியப் பேறுகளினாலே, அவர்களைச் சகல பாவதோங்களிலிருந்து காப்பாற்றி இரட்சித்தது போல, நாங்கள் பரிசுத்தர்களாய் உம்முடைய சந்நிதானத்துக்கு வரும்படியாய், கிருபை செய்தருள வேண்டுமென்று தேவரீரை மன்றாடுகிறோம். இந்த மன்றாட்டை சேசு கிறீஸ்துநாதருடைய திருமுகத்தைப் பார்த்து எங்களுக்குத் தந்தருளும் சுவாமி.
*- ஆமென்.*
#✝️இயேசுவே ஜீவன் #⛪ வேளாங்கண்ணி சர்ச் #✝️இயேசு #✝பைபிள் வசனங்கள்
🍃💫🍃💫🍃💫🍃💫🍃💫🍃
*🌷குறிப்பு :*
(இந்த ஜெபமாலை பின்வரும் முறையில் ஜெபிக்கப்படுகிறது இதில் தேவ ரகசியங்கள் இல்லாமல் ஜெபிக்கப்படுகிறது. தேவைப்பட்டால் மகிழ்ச்சி நிறை தேவரகசியத்தை சொல்லலாம்)
*🌿🌹(1. தூய ஆவியின் பிரசன்னத்தை வேண்டுவதன் மூலம் இந்த ஜெபத்தை தொடங்க வேண்டும்)🌹🌿*
*🌿🌹ஜெபமாலையின் திருச்சிலுவையை பிடித்து சொல்ல வேண்டிய ஜெபம்🌹🌿*
"தூய ஆவியானவரே, வாரும், எங்கள் குடும்பத்தை உம் அன்பில் புதுப்பித்தருளும்."
*🌿🌹(2.திருச்சிலுவை முதல் திருப்பட உத்திரியம் வரை கீழ்க்கண்ட ஜெபத்தை சொல்லவும்)🌹🌿*
ஒரு பர, 3அருள், திரி ஜெபங்களை சொல்ல வேண்டும்.
*🌿🌹(3.ஒவ்வொரு 10 மணிகளிலும், நீங்கள் செபம் செய்யும் குறிப்பிட்ட நோக்கத்தை நினைவுபடுத்திய பின் பின்வரும் ஜெபத்தை சொல்லவும்)🌹🌿*
'நம்பிக்கை நிறைந்த அன்புமிகு தாயே எம் மரியன்னையே, கடவுளின் நேர்மையுள்ள மற்றும் எளிமையான மனிதரான சூசையப்பரே, மரியன்னையின் திரு மகனான இயேசு கிறிஸ்துவே..!
நீங்கள் உருவாக்கிய எங்கள் குடும்பங்களை ஆசீர்வதித்து பாதுகாத்து வழிநடத்தியருளும்."
*🙏🏻ஆமென்.🙏🏻*
#✝பைபிள் வசனங்கள் #✝️இயேசுவே ஜீவன் #✝️இயேசு #⛪ வேளாங்கண்ணி சர்ச்
#⛪ வேளாங்கண்ணி சர்ச் #✝பைபிள் வசனங்கள் #✝️இயேசு #✝️இயேசுவே ஜீவன்
*🙏🏻திருக்குடும்பத்தை நோக்கிச் செபம் மற்றும் புகழ்மாலை🙏🏻*
🌿🌷🌿🌷🌿🌷🌿🌷🌿🌷
இயேசுவின் திரு இருதயமே ! அமலோற்பவ கன்னிமாதாவின் திரு இருதயமே! ஓ! மிகுந்த மகிமைப் பிரதாபம் பொருந்திய புனித சூசையப்பரே! உங்கள் அடைக்கலமாக ஓடி வந்து உங்கள் உபகார சகாயங்களை இறந்து மன்றாடிக் கேட்டஎவனும் அந்த மன்றாட்டுக்களை அடையாமற் போனதில்லையென்று நினைத்தருளுங்கள். இத்தகைய நம்பிக்கையால் ஏவப்பட்டு என் பாவச்சுமையோடே உங்கள் பாத சந்நிதானத்தில் சாஷ்டாங்கமாக விழுந்து பிரார்த்திக்கிறேன்.
இரக்கமுள்ள இயேசுவின் திரு இருதயமே! அமலோற்பவ கன்னி மாதாவின் திரு இருதயமே! ஓ! மகிமைப்பிரதாபம் பொருந்திய புனித சூசையப்பரே, அடியேனுடைய மன்றாட்டுக்களை புறக்கணியாமல் தயவாய்க் கேட்டுத் தந்தருளுங்கள்.
*🙏🏻ஆமென்.🙏🏻*
🌿🌷🌿🌷🌿🌷🌿🌷🌿🌷
*திருக்குடும்பத்தின் மன்றாட்டு மாலை*
🌿🌷🌿🌷🌿🌷🌿🌷🌿🌷
ஆண்டவரே இரக்கமாயிரும்
கிறிஸ்துவே இரக்கமாயிரும்
ஆண்டவரே இரக்கமாயிரும்
கிறிஸ்துவே எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்
கிறிஸ்துவே எங்கள் மன்றாட்டைத் தயவாய்க் கேட்டருளும்
விண்ணகத்தில் இருக்கிற தந்தையாகிய இறiவா, - எங்கள் மேல் இரக்கமாயிரும் சுவாமி.
ஊலகத்தை மீட்ட திருமகனாகிய இறைவா எங்கள் மேல் இரக்கமாயிரும் சுவாமி.
தூய ஆவியாகிய இறைவா - எங்கள் மேல் இரக்கமாயிரும் சுவாமி.
மூன்று ஆட்களாயிருக்கும் ஒரே இறைவா - எங்கள் மேல் இரக்கமாயிரும் சுவாமி.
அவதரித்த தேவ வார்த்தையின் திருக்குடும்பமே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.
மண்ணுலகில் அதி புனித திருத்துவத்தின் பாவனையாகிய திருக்குடும்பமே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.
பரம தேவ பிதா அத்தியந்த பிரியத்துடனே நேசித்த திருக்குடும்பமே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.
அனைத்து அருளாலும் நிறைந்து அலங்கரிக்கப் பட்ட திருக்குடும்பமே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.
எல்லாப் புண்ணியங்களுக்கும் உத்தம மாதிரிகையான திருக்குடும்பமே, எல்லா இருதயங்களின் நேசத்துக்கும் பாத்திரமான திருக்குடும்பமே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.
விண்ணுலகிற்குத் தேர்ந்தெக்கப்பட்டவரின் ஞானக் கருவூலமாகிய திருக்குடும்பமே, விண்ணுலகின் பேரின்பமாகிய திருக்குடும்பமே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.
அனைத்து வானதூதர்களாலும் வணங்கப்பட்ட திருக்குடும்பமே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.
மனிதர்களால் நிந்திகரிக்கப்பட்டிருந்தாலும் தேவ சமூகத்தில் உன்னத மாட்சிமை பொருந்திய திருக்குடும்பமே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.
பெத்லகேம் ஊரார்களால் புரக்கணிக்கப்பட்டு ஒரு மாட்டுக் கொட்டிலில் ஒடுங்கிப்போக அவசரப்பட்ட திருக்குடும்பமே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.
திவ்விய இரடசகர் பிறந்த சமயத்தில் இடையர்களால் சந்திக்கப்பட்ட திருக்குடும்பமே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.
பிறந்த திவ்விய குழுந்தைக்குத் தோத்திரமாக வானதூதர்கள் இசைத்த கீதங்களைக் கேட்ட திருக்குடும்பமே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.
மூன்று அறிஞர்களால் வணங்கிப் பாதகாணிக்கை ஒப்புக்கொடுக்கப்பட்ட திருக்குடும்பமே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.
ஆலயத்தில் திவ்விய பாலனை ஏந்தின சிமியோன் அவரைக் குறித்துச் சொல்லிய துதிகளையும் இறைவாக்குகளையும் கேட்டு மகிழ்ச்சியும் துயரமும் கொண்ட திருக்குடும்பமே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.
எண்ணிறந்த ஆபத்துக்குள்ளே எகிப்து தேசத்துக்கு ஓடிப்போக கட்டளையிட்ட வானதூதரின் வாக்குக்கு தாமதமின்றி கீழ்ப்படிந்த திருக்குடும்பமே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.
ஏரோது அரசனின் கொடுமைக்குத் தப்பித்துக் கொள்ள அத்தேசத்துக்கு கட்டாயப்பட்ட திருக்குடும்பமே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.
அந்நிய தேசத்தில் பரதேசியான திருக்குடும்பமே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.
மண்ணுலகம் அறிந்து கொள்ளாமல் மறைந்த தன்மையாய் வாழ்ந்து வந்த திருக்குடும்பமே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.
ஏழ்மையும் உழைப்பும் தவமுமுள்ள சீவியமாய் சீவித்த திருக்குடும்பமே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.
நெற்றி வியர்வை நிலத்தில் விழ, அன்றாட உணவைத் தேடிகொண்ட திருக்குடும்பமே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.
மண்ணுலக வறுமையும் விண்ணுலக நன்மையும் மிகுதியும் கொண்டிருந்த திருக்குடும்பமே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.
பிறர்சிநேகத்துக்கும் சமாதான ஒற்றுமைக்கும் மாதிரிகையான திருக்குடும்பமே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.
நினைவிலும் மனப்பற்றுதலினாலும் முழுவதும் விண்ணுலகில் சஞ்சரித்திருந்த திருக்குடும்பமே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.
உமது ஆயுள் முழுமையும் இடைவிடாது செபமும் ஞானயோகமுமாயிருந்த திருக்குடும்பமே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.
துன்பப்படுகிறவர்களுக்கு ஆறுதலும் உம்மை மன்றாடுகிறவர்களின் நம்பிக்கையும் எல்லாக் கிறிஸ்தவர்களின் குடும்பங்களுக்குச் சுகிர்த மாதிரிகையுமாகிய திருக்குடும்பமே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.
உலகின் பாவங்களைப் போக்கும் கடவுளின் ஆட்டுக்குட்டியே,
எங்கள் பாவங்களைப் போக்கியருளும் சுவாமி.
உலகின் பாவங்களைப் போக்கும் கடவுளின் ஆட்டுக்குட்டியே,
எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்; சுவாமி
உலகின் பாவங்களைப் போக்கும் கடவுளின் ஆட்டுக்குட்டியே,
எங்கள் மேல் இரக்கமாயிரும் சுவாமி.
முதல்: இயேசுவே எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.
துணை: இயேசுவே எங்கள் மன்றாட்டை நன்றாகக் கேட்டருளும்.
*செபிப்போமாக*
🌸🍃🌸🍃🌸🍃🌸🍃
இறைவா, திருக்குடும்பத்தின் சிறப்புமிக்க முன்மாதிரியை எங்களுக்கு அளித்தீரே, எம்மீது இரங்கி, இல்லறத்தின் புண்ணியங்களிலும் அன்பின் உறவுகளிலும் அக்குடும்பத்தை நாங்கள் பின்னற்றி, உமது முடிவற்ற சம்பாவனையைப் பெற்று மகிழச் செய்தருள வேண்டுமென்று எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்துவின் வழியாக உம்மை மன்றாடுகிறோம்.
*🙏🏻ஆமென்🙏🏻*
🌿🌷🌿🌷🌿🌷🌿🌷🌿🌷
*👑வெளியீடு👑*
*✝️கத்தோலிக்கன்📖*
*🛡️🗡️ஜெப📿வீரர்கள்🗡️🛡️*
#✝️இயேசுவே ஜீவன் #✝பைபிள் வசனங்கள் #✝️இயேசு #⛪ வேளாங்கண்ணி சர்ச்









