சிவ சிவ
நமசிவாய வாழ்க
சித்தர் பாடல்
******************
சிவனொடொக் குந்தெய்வந் தேடினும் இல்லை
அவனொடொப் பார்இங்கும் யாவரும் இல்லை
புவனங் கடந்தன்று பொன்னொளி மின்னுந்
தவனச் சடைமுடித் தாமரை யானே.
பாடல் விளக்கம்
*********************
தேவருள்ளும் ஒருவரும் சிவனோடு நிகர்ப்பவர் இல்லை; மக்களுள்ளும் அவனொடு ஒப்பவராவார் இல்லை; ஆதலின், இயல்பிலே உலகைக் கடந்து நின்று உணர்வுக் கதிரவனாய் (ஞான சூரியனாய்) விளங்கும் முதற்கடவுள் அச்சிவ பெருமானே.
பாடல்
*********
அவனை ஒழிய அமரரும் இல்லை
அவனன்றிச் செய்யும் அருந்தவம் இல்லை
அவனன்றி மூவரால் ஆவதொன் றில்லை
அவனன்றி ஊர்புகு மாறறி யேனே.
பாடல் விளக்கம்
***********************
சிவபெருமானைத் தவிர இறவாதவர் பிறர் இல்லை; அவனை உணராது செய்யும் செயல் சிறந்த தவமாதல் இல்லை; அவனது அருளின்றி மும்மூர்த்திகளால் யாதொரு செயலும் நடவாது. அவனது அருளின்றி முத்திக்கு வழி இல்லை.
திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம் #🙏ஆன்மீகம் #🙏🏼சிவ பெருமான் பாடல்கள் #🙏ஹர ஹர மஹாதேவ்⭐ #🕉️சிவன் ஸ்டேட்டஸ்🎶 #🙏🏼ஓம் நமசிவாய
00:22

