ShareChat
click to see wallet page
search
தொடர்ந்து 20-ந்தேதி பகல்பத்து திருவாய்மொழி திருநாள் ஆரம்பமானது. பகல் பத்து 10-ம் நாளில் நம்பெருமாள் நாச்சியார் திருக்கோலம் எனப்படும் மோகினி அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பாற்கடலை கடைந்தபோது அமுதத்தை அசுரர்கள் பறிக்க முயன்ற நிலையில், திருமால் மோகினியாக தோன்றி தேவர்களுக்கு அமுதம் கிடைக்கச் செய்த நிகழ்வை நினைவூட்டும் வகையில் இந்த அலங்காரம் அமைந்தது. அதிகாலை மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்ட நம்பெருமாள் அர்ச்சுன மண்டபம் வந்து மோகினி அலங்காரத்தில் சேவை சாதித்தார். வைர மாட்டல், மூக்குத்தி, வளையல், சதங்கை, பின்னல் ஜடை உள்ளிட்ட திருவாபரணங்கள் கண்கொள்ளா காட்சியாக அமைந்தன. இதனைத் தொடர்ந்து ராப்பத்து திருவாய்மொழி திருநாள் இன்று தொடங்கியது. அதிகாலை பரமபதவாசல் திறக்கப்பட்டபோது, 'கோவிந்தா கோவிந்தா, ரங்கா ரங்கா' என பக்தர்கள் முழக்கமிட்டனர். ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்து பரவசமடைந்தனர். #🙏 வைகுண்ட ஏகாதசி 2025 🚪 #🙏🏼சொர்க்கவாசல் திறப்பு :ஸ்ரீரங்கத்தில் குவியும் பக்தர்கள் ✨ #ஸ்ரீரங்கம் சொர்க்கவாசல் ஸ்ரீரங்கம்
🙏 வைகுண்ட ஏகாதசி 2025 🚪 - பெருமாள் கோவில்களில் சொர்க்கவாசல் திறப்புஃ .. கோவிந்தா கோஷத்துடன் பக்தர்கள் பரவசம்! பெருமாள் கோவில்களில் சொர்க்கவாசல் திறப்புஃ .. கோவிந்தா கோஷத்துடன் பக்தர்கள் பரவசம்! - ShareChat