ஏற்கனவே திருமணமான ஜெகதீஷ், கங்கம்மாவை இரண்டாவதாகத் திருமணம் செய்ய விரும்பியுள்ளார். இதற்கு அவரது குடும்பத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்ததுடன், பிரசவத்திற்காக தாய் வீடு சென்றுள்ள முதல் மனைவி வந்த பிறகு பேசிக்கொள்ளலாம் எனக் கூறி தடுத்ததாகத் தெரிகிறது. இதனால் ஏற்பட்ட மன உளைச்சலில், கடந்த திங்கட்கிழமை வீட்டை விட்டு வெளியேறிய இருவரும் ஆற்றில் குதித்து உயிரை மாய்த்துக் கொண்டுள்ளனர்.
புதன்கிழமை காலை ஆற்றில் மிதந்த இவர்களது உடல்கள், ஒருவரையொருவர் அணைத்த நிலையிலேயே இருந்ததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த ராமதுர்கா காவல்துறையினர், உடல்களை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. குடும்பத் தகராறு மற்றும் இரண்டாவது திருமண ஆசையே இந்த இரட்டைத் தற்கொலைக்குக் காரணம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. #📢ஜனவரி 29 முக்கிய தகவல் 🫠 #காதல் செய் 💞 கள்ளக்காதல் செய்யாதே 💔 #வாழ்க்கையை அழிக்கும் கள்ளக்காதல் 💔


