மனித வாழ்வில் அமைதியான உறக்கம் எப்பொழுது வரும்...
நிகழ்கால மனிதர்களின் சூழ்நிலை மற்றும் மனதினுடைய பலவிதமான இன்னல்கள் வருவதென்பது முதலில் அவர்களது உறக்கத்தை தான் கெடுக்கின்றது. உறக்கம் சரியாக இருந்தால் தான் விழிப்பும் சரியாக இருக்கும். உறக்கம் சரியாக இருந்தால் தான் உழைப்பும் சரியாக இருக்கும். உறக்கம் சரியாக இருந்தால் தான் வாழ்வில் உயர்வும் சரியாக இருக்கும் . எனவே வாழ்க்கையில் உறக்கம் என்பது ஒரு மனிதனுக்கு இன்றியமையாதது. நமது உறக்கம் ஏன் கெடுகின்றது? உறக்கம் கெடுவதற்கான காரணம் என்ன? நம் வாழ்க்கையில் கடந்து முடிந்தவைகளை சிந்திப்பது. நிகழ்காலத்தில் நாம் சந்திக்கும் பிரச்சனைகளை வெளியில் சொல்ல முடியாமல் எதிர்கொள்ளவும் முடியாமல் மனதிற்குள் வைத்துக் கொண்டு அல்லாடிக் கொண்டிருப்பது.
இந்த பிரச்சனைகள் முற்றும் பொழுது மனதின் கூடவே உடலில் பல்வேறு வியாதிகளும் என்பது ஏற்பட்டு விடுகின்றது. நாம் இந்த பிரச்சனைகளை ஒன்று நமது செயல்களாலேயே வரவழைத்துக் கொள்கின்றோம். அல்லது ஏதாவது ஒரு ஆசையின் காரணமாக ஏதாவது ஒரு வலையில் சிக்கிக் கொள்கின்றோம். மேலும் இப்பொழுது இருக்கும் அதிகப்படியான நேரத்தை செல்போனிலும் தொலைக்காட்சிகளும் செலவழிப்பவர்கள் நிறைய பேர் இருக்கின்றார்கள். எப்படியாவது நமது பிரச்சினைகளை மறக்கவும் நமது சூழ்நிலைகளை சிறிது நேரத்திற்கு மாற்றுவதற்கும் இது இன்றியமையாததாக இருக்காதா என்ற ஒரு எண்ணம் தான் இதற்கெல்லாம் காரணமாக அமைகின்றது. நம்முடைய மனசுமைகளை சொல்வதற்கு நமது உள்ளத்தின் விஷயங்களை பகிர்வதற்கு நமக்கு ஒரு நல்ல நண்பன் தேவை. அல்லது உற்றார் உறவினர் தேவை. ஆனால் தற்காலத்தில் அது சாத்தியமாக இருக்கின்றதா என்றால் அது ஆயிரத்தில் ஒருவருக்கோ அல்லது நூறில் ஒருவருக்கு மட்டுமே சாத்தியமாக இருக்கின்றது. நமது விஷயங்களை பகிர்ந்து கொள்ளும்போது அதை மேலும் அதிகப்படுத்தும் நபர்களே இந்த உலகில் அதிகம். அதை வைத்து சில ஆதாயம் தேடும் மனிதர்களும் இருக்கின்றார்கள். எனவே எந்த ஒரு ரகசியத்தையும் இந்த கலியுக மனிதர்களிடம் சொல்ல பயந்து கொண்டு தனது மனதிற்குள்ளே பூட்டி வைத்துக் கொண்டு உள்ளுக்குள் அழுது கொண்டிருக்கும் மானிடர்கள் பலர் இரவு உறக்கம் இல்லாமல் துன்பத்தால் அவதிப்படுவதை இந்த காலகட்டத்தில் நாம் கண்கூடாக காண முடிகின்றது.
எதெல்லாம் நமது உறக்கத்தை தொலைகின்றதோ எதெல்லாம் நமது நிம்மதியை இழக்க வைக்கின்றதோ அதை முதலில் நமது வாழ்க்கையில் இருந்து தொலைக்க வேண்டும். அதனுடைய லிஸ்ட்டை நாம் எடுக்க வேண்டும். நாம் எங்கேயாவது சிக்கிக் கொண்டிருந்தால் அதிலிருந்து விடுபடுவதற்காக இறைவனை சுத்தமான மனதுடன் நாட வேண்டும். எனது மனநிம்மதியானது எனது பாவக்கர்மத்தினால் தான் தொலைந்து போய் இருக்கிறது என்பதை உணர்ந்து தனது வாழ்வில் பாவம் எந்தெந்த விதத்தில் ஏற்படுகின்றது என்பதை அறிந்து அதிலிருந்து உடனடியாக விடுவித்துக் கொள்ள வேண்டும். நம்முடைய வார்த்தைளாலோ செயல்களாலோ
சைகைகளாலோ யாருடைய மனம் துன்பப்பட்டாலும் நாம் அந்த கணக்கை முடித்தே ஆக வேண்டும் எங்கேயும் தப்ப முடியாது. இந்தக் கணக்குகள் சேர்ந்துதான் மொத்தமாக கடன் கணக்காக மாறி நம்மை நிம்மதியை இழக்க வைத்து விடுகின்றது. அதனால்தான் கடன் பட்டார் நெஞ்சம் போல கலங்கினான் இலங்கை வேந்தன் என்ற சொல்லும் இருக்கின்றது. கடன் என்பது பணம் மட்டுமல்ல நாம் செய்யும் பாவச் செயல்களின் தாக்கம் கூட கடன் தான். நாம் நம்முடைய மனதின் விஷயங்களின் பகிர்வை இறைவனுக்கு முன்னால் அமர்ந்து கொடுத்து விட வேண்டும். நமது பிரச்சனை எதுவாக இருந்தாலும் அதை தந்தை சிவன் பார்த்துக் கொள்வார் என்று உறுதியாக நம்ப வேண்டும். உங்கள் குழந்தை இருக்கின்றது என்று வையுங்கள் எந்த சமயத்தில் உதவி செய்வீர்கள் நீங்கள்
உங்கள் சொல் பேச்சை கேட்கும் பொழுது உங்கள் வார்த்தையை மதிக்கும் பொழுது ஓடோடி சென்று உதவி செய்வீர்கள் அல்லவா. அதேபோல் தான் இறைவனும் நீங்கள் கோவிலுக்கு செல்கின்றேன் இந்த அர்ச்சனை செய்கின்றேன் பூஜை செய்கின்றேன் ஆனாலும் என்னுடைய பிரச்சனை ஓயவில்லை என்று புலம்புவது இறைவன் காதுக்கு கேட்காமல் இல்லை. அவர் சுயநலமற்றவராக இருப்பதால் நீங்கள் செய்யும் பூஜைக்கு அர்ச்சனைக்கும் சதவிகிதம் பலன் இருக்கவே செய்யும். ஆனால் முழுமையாக அது எப்பொழுது மாறும் என்றால் முற்றிலும் நீங்கள் பாவம் செய்வதிலிருந்து விலகுவதில் தான் உங்களுடைய பிரச்சனைகள் யாவும் உங்களை விட்டு விலக துவங்கும். தர்மம் எது என்பது ஒவ்வொருவருடைய மனதிற்கும் கண்டிப்பாக தெரியும். அந்த தர்மத்தின் படி காலையிலிருந்து இரவு வரை என்னுடைய பார்வை பேச்சு நடத்தை செயல் தொழில் எல்லாம் தர்மத்தின் படி இருந்ததா என்றால் உறக்கத்திற்காக
எந்த மாத்திரையும் தேவைப்படுவது கிடையாது. நிம்மதியாக அமைதியான உறக்கம் என்பது நம்மை தானாகவே அரவணைத்துக் கொள்ளும். சோதனை செய்ய வேண்டியது பிறரை அல்ல நம்மைத்தான். நம்மை மாற்றிக்கொள்ள தான் நாம் பூமிக்கு வந்தோமே ஒழிய பிறரை மாற்றுவதற்காக நாம் பூமிக்கு வரவில்லை . நமது வாழ்க்கை ஒரு கண்ணாடியை போன்றது எப்பொழுது நாம் மாறுகின்றோமோ அதை பார்ப்பவர்கள் தன்னை மாற்றிக் கொள்ள துவங்குவார்கள். எனவே சோதனை செய்வோம் மாற்றம் செய்வோம். இறைவனும் நமது நடத்தையைப் பார்த்து மகிழும்படி இந்த பூமியில் வாழ்ந்து செல்வோம். உறக்கம் என்பது மனித வாழ்க்கையில் இன்றியமையாதது. உறங்கிக் கொண்டே இருப்பது என்பது கும்பகர்ண வாழ்க்கை. எனவே இப்பொழுது கும்பகர்ணனாக ஆகவேண்டாம் அர்ஜுனனாக ஆக வேண்டும். தன்னை இரு புருவ மத்தியில் ஆத்மா என்ற ஜோதியாக உணர்ந்து தனது தந்தையான பரமாத்மா சிவனை உடலற்ற ஒரு ஜோதியாக மனக்கண்ணால் சதாகாலமும் தொடர்பு கொண்டிருப்பவருக்கு துன்பம் ஏது? துயரம் ஏது? அவர் தான் சிவனே என்று இருப்பவர். அவருக்குத்தான் நிம்மதி என்பது தன்னைத்தான் முன்வந்து ஆரத் தழுவிக் கொள்ளும். நல்லது வாழ்த்துக்கள் ஓம் சாந்தி. #🙏ஹர ஹர மஹாதேவ்⭐ #🙏🏼ஓம் நமசிவாய #🙏🏼சிவ பெருமான் பாடல்கள் #🕉️சிவன் ஸ்டேட்டஸ்🎶 #🙏கோவில்

