#🕉️ ஓம் நமசிவாய 🙏 #🙏ஆன்மீகம் #🙏காலை நல்வாழ்த்துக்கள்🌞 #🕉️ஆன்மீக சிந்தனைகள்🙏 #🙏ஹர ஹர மஹாதேவ்⭐
🕉️🛕🚩 Om Namah Sivaya 🙏🔱⚜️
இறைவனே, உறங்கும் போதும் உண்ணும்போதும் உன்றன் புகழையே சொல்லுவேன். தேவர் கள் வேறு புகலிடம் இல்லாது உன்பால் வந்து உன் தாளிணைகளின் கீழ்ப் பணிய அவர்களைக் காத்தற்பொருட்டு நஞ்சை உண்ட உன் கருணையை நாளும் நினைதலையன்றி வேறு என் செய வல்லேன்? உன் அருள் பெறுதற்குத் தடையாக என்பால் வஞ்சம் உண்டென்று அஞ்சுகின்றேன். அதனைப் போக்கி எனக்கு அருள்.
-- திருஞானசம்பந்தர்
தேவாரம் - முதல் திருமுறை
பண் - பழந்தக்கராகம்.


