ShareChat
click to see wallet page
search
#🍀🍀 தெய்வ தரிசனம் 🍀🍀பக்தி பாடல்& படங்கள்🔷🔶கடவுள்🔶🔷ஆன்மீக தகவல்கள் 🍃🍃 #ஓம் நமோ நாராயணா 🙏🕉️🙏🌺👣🌺# #திருச்சி ஸ்ரீ ரங்கம் பெருமாள் கோயில் #பெருமாள் #🙏கோவில் *திருநாவுக்கரசரும் ஞானசம்பந்த மூர்த்தியும் போற்றிய திருவாரூர் திருவாதிரைப் பெருவிழா*💐 மார்கழி மாதம் நடந்தேறும் திருவாதிரைப் பெருவிழா தில்லை சிதம்பரத்தினைப் போன்றே திருவாரூர் தலத்திலும் மிகமிகச் சிறப்புடன் கொண்டாடப் பெற்று வந்துள்ளதைப் பெரிய புராணம் நன்முறையில் பதிவு செய்கின்றது. இனி நிகழ்விற்குச் செல்வோம், * நாவுக்கரசு சுவாமிகள் திருவாரூர் தலத்தில் சில காலம் தங்கியிருந்து ஆரூர் மேவும் ஆதிப்பரம்பொருளைத் தொழுதுப் பரவி வருகின்றார். ஆதிரைத் திருநாளும் எய்துகின்றது, அன்று உற்சவ மூர்த்தியான ஸ்ரீதியாகராஜர் திருவீதியுலா கண்டருளும் திருக்காட்சியினைக் கண்ணாறக் கண்டுப் பாமாலைகளால் போற்றிப் பரவசமுறுகின்றார். பின்னர் திருப்புகலூர் மேவும் தேவதேவரைத் தரிசிக்கும் பெருவிருப்புடன் அத்தலம் நோக்கிப் பயணிக்கின்றார். * புகலூரில் முருக நாயனாரின் திருமடத்தில் எழுந்தருளியிருந்த சம்பந்தப் பிள்ளையார் 'வாக்கிற்கு அரசரின்' வருகையினை அறிந்துச் சிந்தை மகிழ்கின்றார். அப்பரடிகளை எதிர் கொண்டழைக்கும் பொருட்டு' தொண்டர் குழாமோடு விரைகின்றார். சீகாழிச் செம்மல் எதிர்கொள்ள வருவதனை அறியும் தொண்டின் அரசரும் எல்லையில்லா ஆனந்தம் அடைகின்றார். இரு புறமும் தொண்டர் குழாங்கள் சந்தித்துக் கலக்க, அப்பரடிகள் விரைந்து சென்று காழி வேந்தரின் திருவடி தொழுது இன்புற, சம்பந்த மூர்த்தியும் எதிர் வணங்கி 'அப்பரே! தாம் தரிசித்து வந்த ஆரூரில் நிகழ்ந்தேறும் பெருமையினை உரைப்பீர்' என்று கேட்டருள்கின்றார். * அடிகளும் 'ஆரூரில் நடந்தேறும் ஆதிரைப் பெருவிழா விளக்கவொண்ணா சீர்மை பொருந்தியது' என்றுரைத்து அக்காட்சியினை விவரிக்கும் வகையில் திருப்பதிகமொன்றினை அருளிச் செய்கின்றார். - முத்துவிதான மணிப்பொற்கவரி முறையாலே பத்தர்களோடு பாவையர்சூழப் பலிப்பின்னே வித்தகக்கோல வெண்தலைமாலை விரதிகள் அத்தன்ஆரூர் ஆதிரைநாளால் அதுவண்ணம் - நணியார் சேயார் நல்லார் தீயார் நாள்தோறும் பிணிதான் தீருமென்று பிறங்கிக் கிடப்பாரும் மணியே பொன்னே மைந்தா மணாளா என்பார்கட்கு அணியான்ஆரூர் ஆதிரைநாளால் அதுவண்ணம்!!! * பொதுவில் ஒரு விழாவினைப் பிறிதொருவர் நன்முறையில் விவரிக்கையில் நமக்கும் அதனைத் தரிசிக்க ஆவல் தோன்றுவது இயல்பு. இங்கு எடுத்துரைப்பவர் நாவிற்கே தனிப்பெரும் அரசரன்றோ! சம்பந்த மூர்த்தி அக்கணமே ஆரூர் ஆதிரைப் பெருவிழாவினைத் தரிசிக்க விழைகின்றார். 'அப்பரே! ஆரூரில் ஆதிரை விழாவினைத் தரிசித்துப் புகலூரில் உம்மைச் சந்திப்பேன்' என்று கூறியருளித் தொண்டர் குழாத்துடன் ஆரூர் தலம் நோக்கி விரைகின்றார். * நமையெலாம் உய்விக்கத் தோன்றியருளிய பரம குருநாதர்கள் தரிசித்தும் பங்கேற்றும் மகிழ்ந்த திருவாரூர் திருவாதிரைப் பெருவிழாவினைத் தரிசித்தும் போற்றியும் உய்வு பெறுவது அடியவர்களாகிய நமது கடனன்றோ! திருச்சிற்றம்பலம் !🌹
🍀🍀 தெய்வ தரிசனம் 🍀🍀பக்தி பாடல்& படங்கள்🔷🔶கடவுள்🔶🔷ஆன்மீக தகவல்கள் 🍃🍃 - ShareChat