#நவீன_அடிமை
முன்பு ஒரு மனிதனைப் பற்றி
அறிய அவரது ஊர்,பெயர், குடும்பம்,
முகம் — இவை போதுமானதாக இருந்தது.
ஆனால் இன்றோ நிலைமை வேறு.
அது போதவில்லை. இப்போது
மனிதன் “தரவு” ஆக மாறிவிட்டான்.
ஒரு மனிதன் யார்,
என்ன செய்கிறான்,
எங்கே செல்கிறான்
என்பதை கணினிகள் அறிந்து கொள்ள பயன்படுத்தும் தகவல்களின் கூட்டமே
மின்னணு அடையாளம் (digital identity).
உங்கள் பெயர்
உங்கள் வயது
உங்கள் புகைப்படம்
உங்கள் கைபேசி எண்
உங்கள் மின்னஞ்சல்
உங்கள் இருப்பிடம்
உங்கள் கைபேசியில் உள்ள செயலிகள்
நீங்கள் தேடிய வார்த்தைகள்
நீங்கள் பார்த்த வீடியோக்கள்
நீங்கள் வாங்கிய பொருட்கள்
நீங்கள் செலுத்திய பணம்
நீங்கள் யாருடன் பேசுகிறீர்கள்
நீங்கள் எங்கு சென்றீர்கள்
இவை எல்லாம் தனித் தனியாக இல்லை.
இவை அனைத்தையும் இணைத்த ஒன்று தான் மின்னணு அடையாளம் (digital identity).
“நான் எதுவும் தவறு செய்யவில்லை.
என்னை ஏன் கண்காணிக்க வேண்டும்?”
என்று பலருக்கு ஒரு தவறான எண்ணம் உள்ளது.
ஆனால் மின்னணு அடையாளம்
சரி – தவறு என்பதை மட்டும் பார்ப்பதில்லை.
அது நடத்தையை (behaviour) பார்க்கிறது.
பழக்கங்களை (pattern) கவனிக்கிறது.
எதிர்காலத்தை (prediction) கணிக்கிறது.
உதாரணமாக:
நீங்கள் எந்த நேரத்தில் தூங்குகிறீர்கள்
எந்த நேரத்தில் எழுகிறீர்கள்
எத்தனை மணி நேரம் கைபேசி பயன்படுத்துகிறீர்கள்
எந்த வகையான கருத்துகளை விரும்புகிறீர்கள். எந்த விஷயங்களில் கோபப்படுகிறீர்கள்
இவை அனைத்தும்
கணினியின் கணக்குகளாக மாறிக்கொண்டிருக்கின்றது.
உண்மை என்னவென்றால் —
உங்கள் மின்னணு அடையாளம்
உங்களை விட
உங்களைப் பற்றி
நன்றாக அறிந்து கொள்ள ஆரம்பித்துவிட்டது.
இதெல்லாம் எதற்காக? என்று
கேட்டால்? உங்கள் வசதிக்காக
என்று சொல்லப்படுகிறது. உங்கள் வேகத்திற்காக என்று சொல்லப்படுகிறது.
உங்கள் பாதுகாப்புக்காக என்று சொல்லப்படுகிறது.
ஆனால் இதே மின்னணு அடையாளம்
ஒரு நாள் வேறு சில முடிவுகளையும்
எடுக்கத் தொடங்கலாம்.
யாரை நம்பலாம்
யாரை நம்பக்கூடாது
யாருக்கு கடன் தர வேண்டும்
யாரை கண்காணிக்க வேண்டும்
யாருக்கு எந்த சேவை கிடைக்க வேண்டும்
இந்த முடிவுகளை
மனிதன் எடுக்கவில்லை.
அமைப்பு (system) தான் எடுக்கிறது.
இங்கே தான் ஆபத்து தொடங்குகிறது.
ஏனெனில்
மின்னணு அடையாளம்
ஒருமுறை உருவானால்,
அது அழிக்கப்படுவதில்லை.
திருத்தப்படுவதில்லை.
மன்னிக்கப்படுவதில்லை.
மனிதன் மாறலாம்.
ஆனால் தரவுகள் மாறாது.
நீங்கள் இன்று யார்
என்பது முக்கியமல்ல.
கடந்த காலத்தில்
நீங்கள் என்ன செய்தீர்கள் என்பதே
உங்கள் எதிர்காலத்தை தீர்மானிக்கும்
அளவுகோலாக மாறுகிறது.
இதைத்தான்
“நவீன அடிமைத்துவம்”
என்று கூறுகின்றேன்.
கைக்கட்டுகள் இல்லை.
சங்கிலிகள் இல்லை.
ஆனால் அடையாளம் இருக்கிறது.
இந்த அடையாளம்
உங்கள் அனுமதியோடு,
ஆனால் உங்களுக்கே தெரியாமல்,
உங்கள் முகம் வழியாக,
உங்களுக்கே உங்களைப் பற்றி தெரியாத
பல விஷயங்களையும்
அறிந்து வைத்திருக்கிறது.
அடுத்த வாரம்
இந்த தொடரில்
மீண்டும் சந்திப்போம்.
தொடரும்.....
#@அமானுஷ்யம்@( HORROR ) #📰தமிழ்நாடு அரசியல்📢 #🙋♂ நாம் தமிழர் கட்சி #🚨கற்றது அரசியல் ✌️ #😅 தமிழ் மீம்ஸ்
![@அமானுஷ்யம்@( HORROR ) - 0 BANK BANK BANK 12335 +94512] 0 BANK BANK BANK 12335 +94512] - ShareChat @அமானுஷ்யம்@( HORROR ) - 0 BANK BANK BANK 12335 +94512] 0 BANK BANK BANK 12335 +94512] - ShareChat](https://cdn4.sharechat.com/bd5223f_s1w/compressed_gm_40_img_712393_ee587e5_1769307710711_sc.jpg?tenant=sc&referrer=pwa-sharechat-service&f=711_sc.jpg)

