ShareChat
click to see wallet page
search
சிலுவூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சிவநாகராஜு. வெங்காய வியாபாரியான இவருக்கும், லட்சுமி மாதுரி என்பவருக்கும் கடந்த 2007-ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். விஜயவாடாவில் உள்ள திரையரங்கம் ஒன்றில் டிக்கெட் கவுண்டரில் வேலை பார்த்து வந்த மாதுரிக்கு, அங்கு கோபி என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த அறிமுகம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியுள்ளது. தனது கணவரின் வியாபாரத்தை அவமானமாகக் கருதிய மாதுரி, அவரைக் கட்டாயப்படுத்தி ஹைதராபாத்திற்கு வேலைக்கு அனுப்பியுள்ளார். சமீபத்தில் சிவநாகராஜு மீண்டும் சொந்த ஊருக்குத் திரும்பிய நிலையில், கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் தனது கள்ளக்காதலுக்குத் தடையாக இருக்கும் கணவரைத் தீர்த்துக்கட்ட மாதுரியும், கோபியும் திட்டமிட்டனர். இதன்படி, கடந்த 18-ஆம் தேதி இரவு சிவநாகராஜுவுக்கு மாதுரி விருப்பமான பிரியாணி சமைத்துக் கொடுத்துள்ளார். அதில் 20 தூக்க மாத்திரைகளைப் பொடி செய்து கலந்துள்ளார். சிவநாகராஜு ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தபோது, நள்ளிரவு 11.30 மணியளவில் கோபி வீட்டிற்கு வந்துள்ளார். கோபி சிவநாகராஜுவின் மார்பில் அமர்ந்து அழுத்த, மாதுரி தலையணையால் கணவரின் மூக்கை அழுத்தி மூச்சுத்திணறச் செய்துள்ளார். அவர் இறந்ததை உறுதி செய்த பின் கோபி அங்கிருந்து தப்பியோடினார். கணவரைக் கொன்றுவிட்டு எவ்வித பயமும் இன்றி, மாதுரி இரவு முழுவதும் ஆபாச வீடியோக்களைப் பார்த்துக் கழித்ததாகக் கூறப்படுகிறது. அதிகாலை 4 மணியளவில் அக்கம்பக்கத்தினரை அழைத்த அவர், தனது கணவர் மாரடைப்பால் இறந்துவிட்டதாகக் கூறி கதறி அழுது நாடகமாடியுள்ளார். சிவநாகராஜுவின் உடலை இறுதிச் சடங்கிற்குத் தயார் செய்தபோது, அவரது காதில் ரத்தம் வழிந்ததையும், காயங்கள் இருப்பதையும் அவரது நண்பர்கள் கவனித்தனர். இது குறித்து சிவநாகராஜுவின் தந்தை போலீசில் புகார் அளித்தார். பிரேதப் பரிசோதனை அறிக்கையில், சிவநாகராஜுவின் மார்பு எலும்புகள் உடைந்திருப்பதும், அவர் மூச்சுத்திணறல் காரணமாகவே உயிரிழந்ததும் உறுதியானது. இதனைத் தொடர்ந்து போலீஸார் மாதுரியைக் கைது செய்து நடத்திய கிடுக்கிப்பிடி விசாரணையில், கள்ளக்காதலனுடன் சேர்ந்து கொலை செய்த உண்மையை அவர் ஒப்புக்கொண்டார். மேலும் அந்த பெண்ணை செய்த போலீசார் தலைமறைவாக உள்ள காதலன் கோபியைப் போலீஸார் தேடி வருகின்றனர். #காதல் செய் 💞 கள்ளக்காதல் செய்யாதே 💔 #வாழ்க்கையை அழிக்கும் கள்ளக்காதல் 💔 #📢ஜனவரி 22 முக்கிய தகவல் 🫠
காதல் செய் 💞 கள்ளக்காதல் செய்யாதே 💔 - "படுக்கையில் கணவனின் பிணம்". இரவு முழுவதும் ஆபாச வீடியோ விடிய விடிய பார்த்த மனைவி. அதிகாலை மணிக்கு மாரடைப்பு 4 நாடகம் கள்ளக்காதலனுடன் சிக்கியது எப்படி ? "படுக்கையில் கணவனின் பிணம்". இரவு முழுவதும் ஆபாச வீடியோ விடிய விடிய பார்த்த மனைவி. அதிகாலை மணிக்கு மாரடைப்பு 4 நாடகம் கள்ளக்காதலனுடன் சிக்கியது எப்படி ? - ShareChat