*இறை மக்கள் குடும்பமாக இல்லங்களில் செபிக்க வேண்டிய இன்றைய செபமாலைக் கருத்துக்கள்.*
🍃🍂🍃🍂🍃🍂🍃🍂🍃🍂🍃
*31.01.2026 (சனி)*
*⚜️மகிழ்ச்சி நிறை மறையுண்மைகள்⚜️*
*🌿🌹1. தேவமாதாவுக்கு கபிரியல் அதிதூதர் காட்சி அளித்து மங்கள வார்த்தை சொன்னதைத் தியானித்து,*
இன்றையத் திருப்பலி நற்செய்தி வாசகத்தில், *"அவர்கள், ‘‘போதகரே, சாகப் போகிறோமே! உமக்குக் கவலை இல்லையா?” என்று சொல்லி அவரை எழுப்பினார்கள். அவர் விழித்தெழுந்து காற்றைக் கடிந்துகொண்டார்."* என நமதாண்டவர் இயேசுவைக் குறித்து வாசித்தோம்.
நாம் நமது துன்ப வேளைகளில் இறைவனின் மேல் முழு விசுவாசம் கொண்டிருக்கிறோமா? என சிந்திக்க வேண்டி இந்த முதல் 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
*🌿🌹2. தேவமாதா எலிசபெத்து அம்மாளை சந்தித்ததைத் தியானித்து,*
இன்றையத் திருப்பலி நற்செய்தியில், *"அவர் விழித்தெழுந்து காற்றைக் கடிந்துகொண்டார். கடலை நோக்கி, ‘‘இரையாதே, அமைதியாயிரு” என்றார், காற்று அடங்கியது; மிகுந்த அமைதி உண்டாயிற்று."* என வாசித்தோம்.
இயற்கை அதை படைத்தவருக்கு மட்டுமே கட்டுப்படும் என்பதை உணர வேண்டி இந்த இரண்டாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
*🌿🌹3. குழந்தை இயேசு பிறந்ததைத் தியானித்து,*
இளையோர் மற்றும் பள்ளி சிறார்களின் பாதுகாவலரும், இன்றைய புனிதருமான புனித தொன் போஸ்கோவை நம் திருச்சபைக்குத் தந்த நம் இறைவனுக்கு நன்றியாக இந்த மூன்றாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
*🌿🌹4. குழந்தை இயேசுவை ஆலயத்தில் காணிக்கையாகக் கொடுத்ததைத் தியானித்து,*
நாளை ஞாயிறு திருப்பலியில் முழுமையாகப் பங்கேற்று ஆண்டவரின் திருவுடலை வாங்க தகுதிபெற நம்மையே நாம், முன் தயாரித்துக் கொள்ள வேண்டி இந்த நான்காவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
*🌿🌹5. காணமற் போன குழந்தை இயேசுவை ஆலயத்தில் கண்டு பிடித்ததைத் தியானித்து,*
நோய்த் தொற்றினாலும், விபத்துக்களினாலும் மற்றும் பல்வேறு காரணங்களினாலும் உயிரிழந்த அனைத்து ஆன்மாக்களுக்கும் இறைவன் நித்திய இளைப்பாற்றியை அளித்திட வேண்டி இந்த ஐந்தாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
*🙏🏻ஆமென்.🙏🏻* #✝பைபிள் வசனங்கள் #⛪ வேளாங்கண்ணி சர்ச் #✝️இயேசு #✝️இயேசுவே ஜீவன்


