ShareChat
click to see wallet page
search
பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்று தாக்கிய வழக்கில் சரித்திர பதிவேடு குற்றவாளிக்கு 25 வருடம் சிறை தண்டனை. * கன்னியாகுமரி மாவட்டத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்ற வழக்குகளில் விரைவில் விசாரணை முடித்து குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்வதையும் அவ்வழக்குகளில் நீதிமன்ற விசாரணையை கண்காணித்தல், பாதிக்கப்பட்டவர்களுக்கு பாதுகாப்பு அளித்தல் ஆகிய செயல்பாடுகள் மூலம் குற்றவாளிக்கு தண்டனை பெற்றுத்தருவதை உறுதி செய்ய வேண்டும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் R.ஸ்டாலின் IPS அவர்கள் உத்தரவிட்டுள்ளார்கள். * உத்தரவின்படி குழந்தைகள் மற்றும் பெண்கள் குற்றங்கள் தடுப்பு பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் மதியழகன் அவர்கள் மேற்பார்வையில் இவ்வழக்குகளின் நீதிமன்ற விசாரணை கண்காணிகக்கப்பட்டு வருகிறது. * இந்நிலையில் கடந்த 2022 ஆம் ஆண்டு மே 14ஆம் தேதி இரவு 7:30 மணிக்கு தெரு குழாயில் இருந்து தண்ணீர் எடுத்துவிட்டு வீட்டுக்குள் நுழைந்த 51 வயது பெண்ணை, * அவரது வீட்டுக்குள் மறைந்திருந்த அன்பு நகர், புத்தேரி பகுதியை சேர்ந்த சுரேஷ்குமார் என்பவரின் மகன் சந்தோஷ் குமார் (28) என்ற குற்றவாளி பாலியல் பலாத்காரம் செய்ய முயலும் போது அந்தப் பெண் எதிர்த்ததால் அரிவாளால் அந்தப் பெண்ணை தலை மற்றும் நெற்றியில் தாக்கி காயங்களை ஏற்படுத்தியதற்காக... * வடசேரி காவல் நிலைய குற்ற எண் 452 / 2022 , 452, 354, 324, 506(ii) IPC & 4 of TNPWH Act @ 142/2022 U/s 307, 376, 452, 511 IPC and 4 of TNPHW Act இன் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை முடித்து குற்ற பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது * இந்த வழக்கு விசாரணை நாகர்கோவில் மகிளா நீதிமன்றத்தில் நடந்து வந்தது இந்நிலையில் நீதிபதி இக்குற்றத்தில் ஈடுபட்ட குற்றவாளிக்கு 25 வருடம் சிறை தண்டனை மற்றும் 6000 ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பு அளித்தார்கள் * நீதிமன்ற வழக்கு விசாரணை மற்றும் சாட்சிகள் விசாரணை ஆகியவற்றில் சிறப்பாக செயல்பட்டு குற்றவாளிகளுக்கு தண்டனை வாங்கித் தர காரணமாக இருந்த... * வழக்கின் புலன் விசாரணை அதிகாரிகள், அரசு வழக்கறிஞர், நீதிமன்ற காவலர் இந்த வழக்கின் நீதிமன்ற விசாரணை முறையாக கண்காணித்த நாகர்கோவில் உட்கோட்ட உதவி காவல் கண்காணிப்பாளர், வடசேரி காவல் நிலைய ஆய்வாளர் ஆகியோரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் வெகுவாக பாராட்டினார்கள். #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல்
📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல் - ShareChat