ShareChat
click to see wallet page
search
ஒரு தகவல்* 🪭🪭🪭🕊️🪭🪭🪭 தேங்காய் கெட்டுப் போகாமல் பாதுகாக்க. விசேஷ தினங்களில் வீட்டில் நிறைய தேங்காய் சேர்ந்துவிடும். சில நேரங்களில் விலை மலிவாக கிடைக்கும் அப்போது தேங்காய் வாங்கினால் அதை எவ்வாறு அதிக நாட்கள் பாதுகாப்பாக வைத்துக் கொள்வது ❓ *வதக்கி வைத்தல்:* தேங்காய் துண்டுகளை கேரட் சீவும் பலகையில் சீவி ஈரப்பதம் இல்லாமல் வதக்கி நன்றாக ஆற வைத்து கண்ணாடி அல்லது சில்வர் டப்பாவில் போட்டு மூடி வைத்து பயன்படுத்தலாம். *உப்பு நீர் முறை:* உடைத்த தேங்காய் கீற்றுகளை கல் உப்பு கலந்த நீரில் மூழ்கவைத்து, காற்று புகாத டப்பாவில் வைத்து ஃப்ரிட்ஜில் வைக்கவும்; 3-4 நாட்களுக்கு ஒருமுறை தண்ணீரை மாற்றி உப்பு சேர்க்கவும், இது சில வாரங்கள் வரை கெடாமல் இருக்கும். *எண்ணெய் தடவுதல்:* தேங்காய் கீற்றுகளின் உட்புறத்தில் சிறிதளவு தேங்காய் எண்ணெய் தடவி, காற்று புகாத டப்பாவில் வைத்து ஃப்ரிட்ஜில் வைத்தால் 4 நாட்கள் வரை ஃப்ரெஷ்ஷாக இருக்கும். *ஃப்ரீசரில் வைத்தல்:* தேங்காயை ஈரம் இல்லாமல் சுத்தமாக துருவி காற்று புகாத டப்பாவில் போட்டு ஃப்ரீசரில் வைத்தால் பத்து நாட்கள் வரை பிரஷ்ஷாகவே இருக்கும். #பொழுது போக்கு #உற்சாக பானம்# #👪 cute family members 👪 #கதை சொள்ளரோம் #உற்சாக பானம்
பொழுது போக்கு - தேங்காய்நீண்பநாட்கள் கெட்டுப்போகாமல் இருக்கு சிலடிப்ஸீ சE தேங்காய்நீண்பநாட்கள் கெட்டுப்போகாமல் இருக்கு சிலடிப்ஸீ சE - ShareChat