தொன் போஸ்கோ நவநாள் செபம்*
*ஆறாம் நாள்*
*மாற்றம் தந்தவர் தொன் போஸ்கோ:*
பாடல்:
இளைஞரின் தந்தை போஸ்கோவே...
*முன்னுரை:*
மாற்றமில்லாத வாழ்வு அர்த்தமற்றது. நம் வாழ்வை பிறர்மதிக்க வேண்டுமெனில் மாற்றம் என்ற கருவியை நம் கரங்களில் ஏந்துவோம். நம் மாற்றம் பிறரின் உருமாற்றமாக அமைய வேண்டும். தொன் போஸ்கோவின் மாதத்தில் இருக்கின்ற நாம், ஒவ்வொரு நாளும் பல கோணங்களில் அவரை அவராகவே தியானிக்க முற்படுகின்றோம். அவ்வாறே இன்று தொன் போஸ்கோ மாற்றம் தந்தவர் என்ற தலைப்பிலே சிந்திக்கவும் பின்பு செயல்படவும் நமக்கு அழைப்பு விடப்படுகின்றது. ‘அப்படி என்ன மாற்றத்தை அவர் கொணர்ந்துவிட்டார்?” அவர் கொண்டு வந்த மாற்றங்கள் ஏராளம் ஏராளம்.
புனிதத்தன்மைக்கு வயது வரம்பு இல்லை என்பதை நிருபித்தவர், உன்னையும் என்னையும் புனிதனாக்க முனைந்தார். வீட்டினுள் வாழ்ந்த குருகுலத்தை வீதியிலே பணிசெய்ய அழைத்தார் என அவர் கொணர்ந்த மாற்றங்களை இவ்வாறு அடுக்கிக் கொண்டே போகலாம்.
மாற்றம் இன்றைய சூழலில் அவசிய தேவையாக உள்ளது. ‘பத்து நல்ல இளையோரை கொடுங்கள், இவ்வலகையே மாற்றிக்காட்டுகிறேன்” என்றார் விவேகானந்தர். இவ்வாறான மாற்றத்தை கொணரவே தொன்போஸ்கோ ஏழைகள் மத்தியில் உதித்தார். நம்மால், ஏன் மாற்றங்களைக் கொணர முடியாது? மாற்றங்கள் நம்மிலே உதயமாகி பிறரில், ஒளிர்ந்திட மாற்றங்களை கொணர்ந்த தொன் போஸ்கோ வழியாக இறையருளை நாடுவோம். பக்தியோடு இச்செப வழிபாட்டில் பங்கேற்போம்.
*நவநாள் செபம்:*
அன்பே உருவான எம் இறைவா, உம்மை வாழ்த்திப்போற்றி புகழ்கின்றோம். ஏழை எளிய உள்ளங்களை நல்முறையில் வழிநடத்தவும், அவர்களை உமது அன்பின் அரவணைப்பிற்கு அழைத்துச் செல்லவும், தூய தொன்போஸ்கோவை தேர்ந்தெடுத்தமைக்கு நன்றி கூறுகின்றோம். தூய தொன்போஸ்கோவுக்கு இருந்த ஆன்மாவைக் காக்கும் அதே தீராத ஆர்வம் எங்களுக்குள்ளும் பற்றியெறிந்திடவும், எம் ஆன்மாவை காத்து இன்னும் பல ஆன்மாக்களை உம்மிடம் அழைத்து வரவும் நாங்கள் உமது அன்பில் என்றும் வாழ்ந்திடவும் அருள்புரியும். எங்கள் ஆண்டவராம் இயேசு கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகிறோம். ஆமென்! †
பர-1; அரு-1; தந்தைக்கும் மகனுக்கும் ... #✝பைபிள் வசனங்கள் #⛪ வேளாங்கண்ணி சர்ச் #✝️இயேசு #✝️இயேசுவே ஜீவன்


