#🙏🏻மார்கழி மாத சிறப்பு #🛕மார்கழி கோவில்கள் தரிசனம்🙏🏻 #🙏🏻மார்கழி பூஜை சடங்குகள் #🙏🏻ஆண்டாள் பாடல்கள் #🌻🌻காலை வணக்கம்🌻🌻
🌾 🌻#தினம்_ஒரு_திருப்பாவை🌻 🌾
🌷#பாடல்_29 :🌷
"சிற்றஞ்சிறு காலே வந்து உன்னைச் சேவித்து, உன்
பொற்றாமரை அடியே போற்றும் பொருள் கேளாய்;
பெற்றம் மேய்த்து உண்ணும் குலத்தில் பிறந்து நீ
குற்றேவல் எங்களைக் கொள்ளாமல் போகாது;
இற்றைப் பறை கொள்வான் அன்று காண் கோவிந்தா
எற்றைக்கும் ஏழ் ஏழ் பிறவிக்கும் உன் தன்னோடு
உற்றோமே ஆவோம்; உனக்கே நாம் ஆட்செய்வோம்;
மற்றை நம் காமங்கள் மாற்று - ஏலோர் எம்பாவாய்!".
🍁#விளக்கம் :🍁
மிக்க விடியற்காலையிலேயே நீ இருக்குமிடத்தில் வந்து உன்னை வணங்கி, உன் அழகிய தாமரை போன்ற திருவடிகளையே நாங்கள் மங்களாசாசனம் செய்கின்றதன் பயனைக் கேட்பாயாக!.
நீ மாடுகளை மேய்த்து அவை உண்டது கண்டபின் உண்கின்ற குலத்திலே பிறந்து, எங்களிடம் பணிவிடைகளைக் கொள்ளாமல் விட்டு விடுவது உனக்குத் தகாது.
இப்போது நாங்கள் வந்தது பறையைக் கொள்ளும் பொருட்டாக அன்று. கோவிந்தனே! நாங்கள் எப்போதும் நீ எடுக்கும் எந்த அவதாரத்திலும் இப்போது இருப்பது போலவே உன்னோடு பொருந்தியவர்களாகவே இருக்க வேண்டும்.
உனக்கே அடிமை செய்பவர்களாகவும் இருக்க வேண்டும். இவற்றை விட வேறுபட்ட எங்கள் விருப்பங்களைப் போக்குவாயாக என்கிறாள் தாயார்.
ஆண்டாள் நாச்சியார் திருவடிகளே சரணம்!!!.
திருப்பாவை - தொடரும்.
💐💐💐💐💐K. R💐💐💐💐💐


![🙏🏻மார்கழி மாத சிறப்பு - மார்கழி 29 திருப்பாவை UML_6 29 KR சிற்றஞ்சிறுகாலே வந்துன்னைச் சேவித்துன் பொற்றாமரையடியே போற்றும் பொருள்கேளாய்! பெற்றம் மேய்த்துண்ணும் குலத்தில் பிறந்து நீ குற்றேவல் எங்களைக் கொள்ளாமற் போகாது இற்றைப் பறைகொள்வான் அன்றுகாண் கோவிந்தா! எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும் உன்தன்னோடு உற்றோமே யாவோம் உனக்கேநாம் ஆட்செய்வோம் காமங்கள் மாற்றேலோர் எம்பாவாய் Iiml] நம் ஆண்பா KR திருப்பள்ளியெழுச்சி 9 விண்ணகத் தேவரும் நண்ணவும் மாட்டா விழுப்பொருளே தொழுப்பு அடியோங்கள் உ மண்ணகத்தே வந்து வாழச்செய்தானே வண் திருப்பெருந்துறையாய் வழியடியோம் கண்ணகத்தே நின்று களிதரு தேனே லலமுதே ! கரும்பே விரும்படியார் கட லகுக்கு உயிரானாய் எண்ணகத்தாய் உ எம்பெருமான்பள்ளி எழுந்தருளாயே M1C IFo q6r மார்கழி 29 திருப்பாவை UML_6 29 KR சிற்றஞ்சிறுகாலே வந்துன்னைச் சேவித்துன் பொற்றாமரையடியே போற்றும் பொருள்கேளாய்! பெற்றம் மேய்த்துண்ணும் குலத்தில் பிறந்து நீ குற்றேவல் எங்களைக் கொள்ளாமற் போகாது இற்றைப் பறைகொள்வான் அன்றுகாண் கோவிந்தா! எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும் உன்தன்னோடு உற்றோமே யாவோம் உனக்கேநாம் ஆட்செய்வோம் காமங்கள் மாற்றேலோர் எம்பாவாய் Iiml] நம் ஆண்பா KR திருப்பள்ளியெழுச்சி 9 விண்ணகத் தேவரும் நண்ணவும் மாட்டா விழுப்பொருளே தொழுப்பு அடியோங்கள் உ மண்ணகத்தே வந்து வாழச்செய்தானே வண் திருப்பெருந்துறையாய் வழியடியோம் கண்ணகத்தே நின்று களிதரு தேனே லலமுதே ! கரும்பே விரும்படியார் கட லகுக்கு உயிரானாய் எண்ணகத்தாய் உ எம்பெருமான்பள்ளி எழுந்தருளாயே M1C IFo q6r - ShareChat 🙏🏻மார்கழி மாத சிறப்பு - மார்கழி 29 திருப்பாவை UML_6 29 KR சிற்றஞ்சிறுகாலே வந்துன்னைச் சேவித்துன் பொற்றாமரையடியே போற்றும் பொருள்கேளாய்! பெற்றம் மேய்த்துண்ணும் குலத்தில் பிறந்து நீ குற்றேவல் எங்களைக் கொள்ளாமற் போகாது இற்றைப் பறைகொள்வான் அன்றுகாண் கோவிந்தா! எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும் உன்தன்னோடு உற்றோமே யாவோம் உனக்கேநாம் ஆட்செய்வோம் காமங்கள் மாற்றேலோர் எம்பாவாய் Iiml] நம் ஆண்பா KR திருப்பள்ளியெழுச்சி 9 விண்ணகத் தேவரும் நண்ணவும் மாட்டா விழுப்பொருளே தொழுப்பு அடியோங்கள் உ மண்ணகத்தே வந்து வாழச்செய்தானே வண் திருப்பெருந்துறையாய் வழியடியோம் கண்ணகத்தே நின்று களிதரு தேனே லலமுதே ! கரும்பே விரும்படியார் கட லகுக்கு உயிரானாய் எண்ணகத்தாய் உ எம்பெருமான்பள்ளி எழுந்தருளாயே M1C IFo q6r மார்கழி 29 திருப்பாவை UML_6 29 KR சிற்றஞ்சிறுகாலே வந்துன்னைச் சேவித்துன் பொற்றாமரையடியே போற்றும் பொருள்கேளாய்! பெற்றம் மேய்த்துண்ணும் குலத்தில் பிறந்து நீ குற்றேவல் எங்களைக் கொள்ளாமற் போகாது இற்றைப் பறைகொள்வான் அன்றுகாண் கோவிந்தா! எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும் உன்தன்னோடு உற்றோமே யாவோம் உனக்கேநாம் ஆட்செய்வோம் காமங்கள் மாற்றேலோர் எம்பாவாய் Iiml] நம் ஆண்பா KR திருப்பள்ளியெழுச்சி 9 விண்ணகத் தேவரும் நண்ணவும் மாட்டா விழுப்பொருளே தொழுப்பு அடியோங்கள் உ மண்ணகத்தே வந்து வாழச்செய்தானே வண் திருப்பெருந்துறையாய் வழியடியோம் கண்ணகத்தே நின்று களிதரு தேனே லலமுதே ! கரும்பே விரும்படியார் கட லகுக்கு உயிரானாய் எண்ணகத்தாய் உ எம்பெருமான்பள்ளி எழுந்தருளாயே M1C IFo q6r - ShareChat](https://cdn4.sharechat.com/bd5223f_s1w/compressed_gm_40_img_352330_367a2cf0_1768253350810_sc.jpg?tenant=sc&referrer=pwa-sharechat-service&f=810_sc.jpg)