ShareChat
click to see wallet page
search
அவருடைய மகன் தான் கிரிஷ் என்ற உண்மைகளை முத்து மொத்த குடும்பத்திடமும் சொல்கிறார். இனி என்ன நடந்தது என்று விரிவாக பார்க்கலாம். ரோகிணி தான் கல்யாணி என்ற உண்மை தெரிந்ததும் முத்து கோபமாக வீட்டிற்கு வந்து குடும்பத்தினர் அனைவரையும் கூப்பிட்டு வைத்து ரோகிணி பற்றிய உண்மைகளை சொல்வது போல நேற்றைய எபிசோடு முடிவடைந்தது. அதைத் தொடர்ந்து இன்றைய எபிசோடில் ரோகிணியின் நிஜ பெயர் கல்யாணி, இவளுக்கு ஏற்கனவே கல்யாணம் ஆயிடுச்சு. ஒரு பையன் கூட இருக்கிறான் அந்த பையன் வேற யாரும் இல்ல கிரிஷ் தான் என்று சொன்னதும் மொத்த குடும்பமும் அதிர்ச்சியில் இருக்கின்றனர். அண்ணாமலை என்னடா சொல்லுற விளையாடுறியா என்று கேட்க, இல்லப்பா நான் ஆதாரத்தை காட்டுகிறேன் என்று ரோகிணியின் கல்யாண போட்டோவை முத்து ஃபோனில் காட்ட, அதை பார்த்ததும் ரோகிணி அழுது கொண்டு, நான் உங்ககிட்ட எல்லாரிடமும் ஒரு உண்மையை சொல்ல போறேன். என்னை மன்னிச்சிடுங்க அந்த கல்யாணி வேற யாரும் இல்லை என்னுடைய சொந்த தங்கச்சி தான் என்னுடைய அப்பா அம்மாவுக்கு நாங்க ட்வின்ஸ். ஆனா அவங்க ஆரம்பத்திலேயே இன்னொரு குடும்பத்துக்கு கல்யாணியை தத்து கொடுத்துட்டாங்க. அந்த விஷயம் எனக்கு கொஞ்சம் வருஷத்துக்கு முன்னாடி தான் தெரிஞ்சது. நான் முதல் முதலாக கல்யாணி பார்த்தபோதுதான் அவ என்னோட சொந்த தங்கச்சி என்று தெரிந்தது. அப்போ அவளோட பையன் க்ரிஷ் என்று உண்மை எனக்கு ஏற்கனவே தெரியும். ஆனா இதை குடும்பத்தில் சொன்னால் நீங்க ஒத்துக்க மாட்டீங்க என்பதற்காக சொல்லவில்லை என்று ரோகிணி புது கதையை சொல்லுகிறார். அதற்கு முத்து, இல்ல இவதான் கல்யாணி என்று கத்திக் கொண்டிருக்கிறார். கடைசியில் அவர் பாரில் உட்கார்ந்து கனவு கண்டு இருக்கிறார் என்பது தெரிய வருகிறது. ரோகிணி பற்றிய உண்மையை சொன்னா என்ன நடக்கும் என்று நினைத்து பார்த்து இருக்கிறார். இதனால் இவளிடம் இப்ப சொல்லக்கூடாது அவ வாயிலிருந்து உண்மையை வர வைக்க வேண்டும் என்று மீனாவுக்கு போன் செய்து உடனே வீட்டுக்கு வா முக்கியமான விஷயம் சொல்லணும் என்று சொல்கிறார். மறுபக்கத்தில் நீத்துவின் ரெஸ்டாரட் காட்டப்படுகிறது. அங்கு ரெஸ்டாரண்டுக்க கூட்டம் இல்லாமல் இருக்கிறது. அதைப் பற்றி நீத்து ரவியிடம் சொல்லிக் கொண்டிருக்கும் போது ஹோட்டலில் வேலை பார்ப்பவர்கள் சம்பளம் ரொம்ப கம்மியா இருக்கு என்று கேட்கின்றனர். அதற்கு நீத்து இப்போ சரியான வருமானம் இல்ல கண்டிப்பா கொடுக்கிறேன் என்று சொல்கிறார். அதற்கு அவர்கள் எங்களுக்கு இந்த சம்பளம் கட்டுபடி ஆகாது என்று சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்பி விடுகிறார்கள். அந்த நேரத்தில் முத்து ரவிக்கு போன் பண்ணி நீ உடனே ஸ்ருதியை கூட்டிட்டு வீட்டுக்கு வா ஒரு அதிர்ச்சியான விஷயத்தை சொல்லப் போறேன் என்று சொல்கிறார். அடுத்ததாக முத்து சொன்னபடி எல்லோரும் வீட்டில் காத்திருக்கின்றனர். அப்போது மனோஜ் வந்து நானும் ஒரு முக்கியமான விஷயத்தை சொல்லப் போறேன் என்று கிரிஷை தத்து கொடுத்தால் 25 லட்சம் பணம் கிடைக்கும் என்று விஜயாவிடம் சொல்ல, அதை கேட்டது விஜயா சந்தோஷப்படுகிறார். ஆனால் அண்ணாமலை பணத்துக்காக ஒரு பையனை எப்படி கொடுக்க முடியும் என்று திட்டிக் கொண்டிருக்கிறார். அந்த நேரத்தில் முத்து ஃபுல் போதையில் வீட்டிற்குள் வருகிறார். பிறகு எல்லாரும் வந்துட்டீங்களா நான் இப்போ ஒரு விஷயத்தை சொல்லப் போறேன் யாரு இங்க இருந்து நகரக் கூடாது என்று வீட்டு ஜன்னல், கதவு எல்லாவற்றையும் பூட்டிக் கொண்டிருக்கிறார். அப்போது மனோஜ் நானும் உன்கிட்ட ஒரு முக்கியமான விஷயத்தை சொல்லணும் என்று சொன்னதும், என்ன விஷயம் என்று முத்து கேட்கிறார். கிரிஷ் விஷயம் என்று சொன்னதும், முத்து சந்தேகமாக பார்க்கிறார். அப்போது கிரிஷை ஒரு குடும்பத்தினர் தத்து கேட்கிறார்கள். அதற்கு நானும் ரோகிணியும் சம்மதிச்சிட்டோம் என்று சொன்னதும், முத்து அதிர்ச்சியாகி பார்க்கிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது. எப்படியும் நாளைக்கான எபிசோடில் ரோகினி பற்றிய உண்மைகளை முத்து சொல்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. #⭐விஜய் தொலைக்காட்சி #சிறகடிக்க ஆசை சீரியல் promo #சிறகடிக்க ஆசை சீரியல் 👩‍❤️‍👨📺
⭐விஜய் தொலைக்காட்சி - சிறகடிக்க ஆசை: கல்யாணி சொந்த தங்கச்சி, என் கதைவிட்ட ரோகிணி! முத்து கொடுத்த அதிர்ச்சி. மனோஜ் எடுத்த முடிவு சிறகடிக்க ஆசை: கல்யாணி சொந்த தங்கச்சி, என் கதைவிட்ட ரோகிணி! முத்து கொடுத்த அதிர்ச்சி. மனோஜ் எடுத்த முடிவு - ShareChat